மறுஆய்வு

மே 18 படிப்பினைகளும் யதார்த்தமும்
மே – 18 என்பது ஒரு யதார்த்தம். ஒரு படிப்பினை.

என்னதான் கசப்பானதாக இருந்தாலும் இந்த நாளின் முடிவும் விதியும் ஒரு யதார்த்தமே. ஒரு உண்மையே!

2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தொலைக் காட்சியான தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் ‘நிலவரம்’ என்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது ஆய்வாளர் நிலாந்தன் ஒரு விடயத்தைத் தெளிவுபடக்கூறியிருந்தார்.

அவர் கூறியது இதுதான்.

‘தென்னாசியப் பிராந்தியத்தில் தமிழீழம் அமையவேண்டுமானால்முற்றிலும் வேறானதோர் தீர்க்கதரிசனமிக்க அரசியல் அணுகுமுறையும் கடினமான உழைப்பும் தேவை. ஏனெனில் தென்னாசிய விடுதலைப் போராட்டங்களுக்கான பிராந்திய – சர்வதேச யதார்த்தமானது இலகுவானதாக அமையவில்லை. இந்தப் பிராந்தியத்தின் போராட்டங்களெல்லாம் குரூரமான முறையி்ல் ஒடுக்கப்பட்டதே யதார்தமாக இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும் ’

நிலாந்தனுடைய இந்தக் கருத்தை அப்போது புலிகளின் மையப்பகுதியினர் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. விரும்பவும் இல்லை. ஆனால், தன்னுடைய இந்தக் கருத்துக்கான ஆதாரங்களை நிலாந்தன் அந்த நிகழ்ச்சியில் தெளிவாக்கியிருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிலாந்தன் நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்பது தவிர்க்கப்பட்டது. பின்னர் ஈழநாதம் பத்திரிகையில் அவர் எழுதி வந்த அரசியற்பத்தியும் இடைநிறுத்தப்பட்டது.

ஏறக்குறைய இதே கருத்தை ஈரோஸ் இயக்கத்தின் தலைவராகவும் பின்னாளில் விடுதலைப் புலிகளின் முக்கியத்தராகவும் இருந்த திரு வே. பாலகுமாரனும் கொண்டிருந்தார்.

இவர்கள் சொன்னமாதிரியும் எதிர்பார்த்த மாதிரியுமே நிகழ்ச்சிகள் நடந்துமுடிந்தன.

அதாவது மே 18 நிகழ்ச்சிகள் என்பது தென்னாசியப் பிராந்திய – சர்வதேசிய நிகழ்ச்சிப் போக்கின் யதார்த்தமும் உண்மையும் என்பதையே நிரூபித்தன.

00

தென்னாசியப் பிராந்தியத்தில் ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டங்களின் முடிவுகள் அமைந்த யதார்த்தத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விதியும் விடுதலைப் புலிகளின் முடிவும் அமைந்திருக்கிறது.

தென்னாசியாவில் நடைபெற்ற போராட்டங்கள் அத்தனையையும் அந்தந்த நாடுகள் மிகக் குரூரமாக ஒடுக்கியிருக்கின்றன. இதற்காக அவை, பிராந்திய நாடுகளின் உதவிகளையும் தேவையேற்படும் பட்சத்தில் சார்புக்கமைவான சர்வதேச நாடுகளின் உதவிகளையும் பெற்றுள்ளன. இலங்கையில் நடந்ததும் இதுவே.

இவ்வாறு ஆதிக்க சக்திகள் போராட்டங்களை ஒடுக்கும்போது அதில் பெருமளவு பாதிக்கப்படுகிறவர்கள் சாதாரண மக்களே.

இலங்கையில் ஏற்கனவே நசுக்கப்பட்ட ஆயுதப் போராட்டங்களினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஒடுக்குதலின்போது தமிழ் சிங்கள மக்கள் என்ற பேதங்களை அரசு இயந்திரம் வேறு படுத்திப் பார்க்கவில்லை. அரசைப் பொறுத்தவரையில் தனக்கெதிராக இயங்குவோர் என்பதையே அது குறியாகக் கொள்கிறது.

ஜே.வி.பியின் எழுச்சிகள் இரண்டுதடவைகள் ஒடுக்கப்பட்டுள்ளன. இதற்குச் சிங்கள இளைஞர்களையே (சிங்கள இராணுவத்தையே) சிங்கள அரசு பயன்படுத்தியிருக்கிறது என்பதை நாம் கவனத்திற் கொள்ளவேணும். இந்த இரண்டு கிளர்ச்சிகளிலும் ஏறக்குறைய ஒரு லட்சம் வரையானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டமும் பல வடிவங்களில் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டு வரப்பட்டது. எனினும் இறுதியாக 2009 மே 18 டுடன் அதற்கு இறுதி ஆணி அடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையானது பிராந்திய – சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டுள்ளது என்பதுவும் நமது கவனத்திற்குரியது.

இதைப்போல இந்தியாவில் நடந்த பல போராட்டங்களும் இத்தகைய ஒடுக்குமுறையின் மூலமே நசுக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு இந்த விசயத்தில் பிராந்திய நாடுகளுக்கிடையிலான உறவும் சர்வதேச வலைப்பின்னலின் ஒழுங்கமைப்பும் உள்ளன.

ஆகவே, இதுவொரு தென்னாசியப் பிராந்திய யதார்த்தம். தென்னாசியப்பிராந்தியத்திற்குரியதொரு படிப்பினை.

எனவே -

இந்த யதார்த்தம் நமக்கு பல புதிய புரிதல்களையும் படிப்பினைகளையும் அனுபவபூர்வமாகவே இன்று தந்துள்ளது.

‘இந்த யதார்த்தத்துக்கு அப்பால் – இந்த யதார்த்தத்தை உடைத்து நாம் வெற்றியடைந்து விடலாம்’ என்றிருந்த நம்பிக்கை இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த நம்பி்க்கை வெற்றியடைந்திருக்க வேண்டுமானால், போராட்டத்தின் போக்கிலும் அணுகுமுறையிலும் அடிப்படையிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். நிகழ வேண்டும் என்பது இன்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் அத்தகைய தெளிவு எந்த மட்டத்தில் நிகழ்ந்துள்ளது? அதைப் பொதுச் சூழலானது எந்த அளவிற் புரிந்து கொண்டுள்ளது என்ற கேள்விகள் எழுகின்றன.

இதைத்தவிர்த்து – இத்தகைய படிப்பினைகளைத் தமது அரசியல் முன்னெடுப்புகளுக்கான பாடங்களாகக் கொள்வதைத் தவிர்த்து – வழமையான சிந்தனை முறையில் அரசியலைத் தொடர்வோர் நிலைமைகளை மேலும் மோசமாக்குகின்றனர்.

ஆனால், என்னதானிருந்தாரும் இலங்கையின் வரலாற்றில் மே18 – 2009 என்பது எத்தகைய படிப்பினைகளைத் தந்துள்ளது? என்பது முக்கியமான கேள்வி. நிராகரிக்கவே முடியாத கேள்வி. எப்படி அந்த நிகழ்ச்சி ஒரு யதார்த்தமோ எப்படி அது உண்மையான ஒரு அரசியல் விளைவோ அந்த அளவுக்கு அது ஏற்படுத்திய படிப்பினைகளும் கேள்வியும் முக்கியமானவை.

இந்தக் கேள்வியும் படிப்பினைகளும் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் உரியது.

2009 மே18க்குப் பின்னர் இப்பொழுது இரண்டாண்டுகள் கழிந்து விட்டன.

அதாவது யுத்தம் முடிந்து இரண்டாண்டுகள் கடந்துள்ளன.

இந்த இரண்டாண்டுகளில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகள் என்ன? முன்னேற்றங்கள் என்ன? மாற்றங்கள் என்ன? திருத்தங்கள் என்ன? படிப்பினைகள் என்ன?

சுருக்கமாகச் சொன்னால், போருக்குப் பிறகும் இலங்கையில் இனமுரண்பாடு அப்படியேதான் இருக்கிறது. பெரும்பாலான தமிழர்களும் சிங்களவர்களும் வௌ;வேறுவிதமாகவே – போருக்கு முன்னரும் போர்க்காலத்திலும் சிந்தித்ததைப் போலவே சிந்திக்கிறார்கள். யுத்தம் இவர்களுக்கு எந்தப் படிப்பினைகளையும் தந்ததாகத் தெரியவில்லை.

இதன் விளைவாக அரசியல் முரண்பாடும் இடைவெளியும் நீடிக்கின்றன. ஆகையால் இலங்கையில் வெளிச்சக்திகளின் தலையீடும் நெருக்கடியும் அதிகரித்தவாறே இருக்கிறது. மக்களின் உரிமைகளும் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுக் கொண்டே செல்கிறது.

எனவே நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்வதற்கில்லை.

குறிப்பாக, இலங்கையில் இனமுரண்பாட்டின் காரணமாக – விளைவாக – உருவாகிய போர் ஏற்படுத்திய விளைவுகள் – படிப்பினைகள் – யாரையாவது நிதானமாகச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இதற்குப் புதிய சிந்தனை முறை உருவாகினால்தான் மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் சாத்தியங்கள் உண்டு.

தமிழ் ஊடகங்களும் பெரும்பாலான தமிழ் அரசியற் கட்சிகளும் பழைய அலைவரிசையிலேயே பேசிக் கொண்டிருக்கின்றன. அரசியற் தலைவர்களின் பாராளுமன்ற உரைகளும் அறிக்கைகளும் இதற்கு நல்ல உதாரணங்கள்.

அப்படியே இலங்கை அரசும் சிங்களத் தலைவர்களும் அவர்களுடைய கட்சிகளும் பழைய பாணியிலேயே பேசியும் சிந்தித்தும் வருகின்றன. சிங்கள ஊடகங்கள் பாதை விலகாமலே பயணம் செய்கின்றன.

ஆகவே யுத்தத்தின் முடிவு எந்த முன்னேற்றத்தையும் இலங்கைத் தீவில் ஏற்படுத்தவில்லை. எத்தகைய படிப்பினைகளையும் யாருக்கும் தந்ததாக இல்லை.

எனவே இலங்கையில் ஐக்கியத்துக்கும் வழியில்லை. பிரிவினைக்கும் இடமளிப்பில்லை.

இதற்குக் காரணம் யுத்தத்தின் முடிவை இலங்கை அரசு தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டதும் அந்த வகையிலேயே மக்களைச் சிந்திக்கத் தூண்டியதுமாகும்.

யுத்தத்தின் முடிவை யுத்த வெற்றியாகக் கருதியதால் வந்த வினை இது. இதுவே அடிப்படையான பிரச்சினையாகும். இந்தப் புரிதல் முற்றிலும் தவறானது.

யுத்த வெற்றி என்பது ஒருதலைப் பட்சமானது. யுத்தத்தில் பெற்றது வெற்றி என்று உணரப்படும்போது அதன் மறுப்பக்கம் தோல்வி என்றே அர்த்தப்படும்.

இதுதான் இலங்கையில் நிகழ்ந்திருப்பது. ஆகவேதான் யுத்தத்தின் முடிவுக்குப் பிறகும் இலங்கையின் நிலைமைகள் மாற்றமடைய முடியாமல் இருக்கின்றன.

யுத்த வெற்றி என்றால் அது சிங்களத் தரப்பிற்குரிய வெற்றியாகும். அவ்வாறே கருதவும் படுகிறது. அதன் பெருமையும் பங்கும் தமக்கே என்று சிங்களத் தரப்பு கருதியுள்ளமை இதற்கு நல்ல சான்று.

இவ்வாறு சிங்களத் தரப்புக் கருதியதால் இந்த யுத்தத்தின் அடுத்த முனையிலிருந்த தமிழர்களை அது வேறுவிதமாகச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது.

இந்த யுத்தத்தில் தமிழர்கள் தோற்றவர்களாகவும் தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் கருதப்படுகிறார்கள். தமிழர்களும் இவ்வாறே கருதுகிறார்கள். அவ்வாறு தமிழர்களைக் கரும்படியே நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.

ஆகவே, யுத்தத்தின் முடிவு என்பது நல்விளைவுகளுக்குப் பதிலாக – மீண்டும் பகையை உள்ளே தூண்டும் விதமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் முன்னேற்றங்களைப் பற்றி எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆனால், யுத்தத்தின் முடிவினால் சில நன்மைகள் கிட்டியிருக்கின்றன. யுத்தத்தின் அழுத்தங்களும் நேரடியான உயிர் இழப்புகள், சொத்திழப்புகள், அகதியாக இடம்பெயர்தல் போன்ற பாதிப்புகளும் நீங்கியுள்ளன. போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் தடைகள் விலகியுள்ளன. சனங்கள் இறுக்கங்களிலிருந்தும் அழுத்தங்களிலிருந்தும் விடுபட்டிருக்கிறார்கள்.

ஆனால், யுத்தம் முடிந்த பின்னர் காணப்பட்டிருக்க வேண்டிய இலங்கையின் பிரதான பிரச்சினையாகிய இனமுரண்பாட்டுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறதா?

அல்லது அந்த இனமுரண்பாட்டைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு சம்மந்தப்பட்டவர்களிடம் விசுவாசமாக ஏற்பட்டுள்ளதா?

அல்லது இனப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் நேர்மையாக மேற்கொள்ளப்படுகின்றனவா?

அல்லது நாடு அமைதியடைந்திருக்கிறதா? அல்லது அது அபிவிருத்திப் பாதையில் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது?

பிரிவினைக்கோ அல்லது ஐக்கியத்துக்கோ செல்லக்கூடிய வழிவகைகளைப் பற்றி நேர்மையாகச் சிந்திக்கப்பட்டிருக்கிறதா?

குறைந்த பட்சம் நாட்டைப் பாதிக்கின்ற வகையிலான உள்நாட்டு நெருக்கடியும் வெளிச் சக்திகளின் அழுத்தங்களும் நீங்கியிருக்கின்றனவா?

சுருக்கமாகச் சொன்னால் யுத்தம் முடிந்து விட்டது என்று மக்கள் உணர்ந்து கொள்வதற்கான ஏதுக்கள் எதுவும் இல்லை. அதிலும் யுத்தப் பாதிப்புகளை நீக்கக் கூடிய நடவடிக்கைகள் கூட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால், நடைபெற்ற யுத்தம் தமிழ் பேசும் மக்களை மட்டும் பாதிக்கவில்லை. தமிழர்கள் அதிகமான பாதிப்பைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், அதேவேளை அது ஏனைய சமூகங்களையும் நெருக்கடிக்குள்ளாக்கியது.

பதற்றத்திலும் பாதிப்பிலுமே இலங்கையின் கடந்த காலம் கழிந்தது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த யுத்தம் முடிந்திருப்பது என்பது சாதாரணமானதல்லத்தான்.

அதிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைத் தின்ற யுத்தம் இது. மட்டுமல்ல, பல கோடிக்கணக்கான சொத்துகளையும் இயற்கை வளங்களையும் அழித்த யுத்தம். பலருடைய எதிர்காலத்தைச் சிதைத்த யுத்தம்.

ஆனால், இந்த யுத்தம் முடிவுக்கு வந்தபோது யுத்தத்துக்குக் காரணமாக இருந்த பிரச்சினைகள் தீர்ந்திருக்க வேணும். யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் பாதியாவது குறைந்திருக்க வேணும். யுத்தத்துக்குப் பின்னரான மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேணும்.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதுதான் பிரச்சினை.

ஆகவே, யுத்தம் முடிவுக்கு வந்த மே 18 என்பது நிச்சயமாக ஒரு படிப்பினைக்கான நாள். அது இலங்கையர்களுக்கு பல தரிசனங்களைத் தந்திருக்க வேண்டிய நாள்.

சிங்களவர்களைப் பொறுத்த அளவில், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பெரும் பொறுப்பைப் பெற்றுக் கொண்ட நாள்.

தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளின் இயங்குநிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நாள்.

அதாவது, முப்பது ஆண்டுகளாகத் தமிழர்களின் அரசியற் சக்தியாக செல்வாக்குப் பெற்றிருந்த விடுதலைப் புலிகளிடமிருந்து வேறுபட்டதொரு அரசியல் முறைமைக்கு மாறிய நாள். இதை இன்னும் தெளிவாகச் சொன்னால், பிரபாகரனுக்குப் பின்னரான – பிரபாகரன் அற்ற – அரசியல் செயற்பாட்டைத் தொடரவேண்டிய நாள்.

இந்த நாளில் – மே 18 இல் – யுத்தத்தின் முடிவை இலங்கை அரசும் சிங்களவர்களும் யுத்தவெற்றியாகவும் தமிழர்களைத் தோற்கடித்ததாகவும் கருதியிருந்தால் -

தமிழர்கள் இந்த நாளை தங்களின் வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் ஒரு படிப்பினையாகக் கொள்வது அவசியமாகும்.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள்
பகுதி 49-56

கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதல்

வவுனியாவில் “தீப்பொறி” குழுவின் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.

எம்முடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் குழுக்களாக உருவாக்கப்பட்டு அரசியல்ரீதியில் வளர்வதை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த வேளை வவுனியா தம்பி “தீப்பொறி” குழு செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாகவும், ஆனால் தன்னாலான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் எமக்கு தொடர்ந்தும் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமது பிடியை இறுக்கமாக்கி விட்டிருந்தபோதும் வவுனியாவில் நிலைமைகள் சற்று மாறுபட்டதாகவே காணப்பட்டன. இதனால் எமது செயற்பாடுகளை வவுனியாவில் பலப்படுத்துவதை நோக்கியதாக அமைந்திருந்தன. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினத்தினால் எமக்கு பாதுகாப்புக்கென வழங்கப்பட்ட ஆயுதங்கள் உட்பட, தமிழீழ விடுதலை இயக்க அழிப்பின் பின்நாட்களில் அவ் அமைப்பில் செயற்பட்டவர்களிடமிருந்து எம்மால் பணம் கொடுத்து வாங்கப்பட்ட ஆயுதங்களையும் வவுனியாவிற்கு எடுத்துச் செல்வதற்கு முடிவு செய்தோம். வண்ணன், கபிலன், சண்முகநாதன், தர்மலிங்கம் ஆகியோருடன் நானும் இணைந்து எம்மிடமிருந்த ஆயுதங்களை காட்டுப்பாதை வழியாக வவுனியாவுக்கு எடுத்துச் சென்றோம். அன்றைய காலகட்டத்தில் இலங்கை அரசபடைகளினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கண்களில் படாமல் காட்டுப்பாதைகள் வழியாக வவுனியா சென்று வருவது கூட மிகவும் கடினமானதொன்றாகவும், ஆபத்து நிறைந்ததொன்றாகவுமே இருந்து வந்தது.

யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த செயற்குழு உறுப்பினர்களுக்கு வவுனியாவில் எமது செயற்பாடுகள் குறித்து தெரிவிப்பதற்காக வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திற்குச் சென்றிருந்தேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்த போதும் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் ஜனநாயக மறுப்பும், ஈழவிடுதலைப் போராட்டத்தின் பேரால் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் அராஜகமும், இவை அனைத்துக்கும் எதிராகப் போராடவேண்டும் என்ற வேட்கையும் முற்போக்கு, ஜனநாயகச் சிந்தனை கொண்ட மாணவர்கள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது.

பல்கலைக்கழகக் கல்வியைத் துறந்து ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுடன் இணைந்து முழுநேரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் பலர் மீண்டும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் தமது நிறைவேறாத கனவுகளுடனும் விடைபகர முடியாத கேள்விகளுடனும் காணப்பட்டனர். இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்துக்கென அணிதிரண்ட போராளிகளும், மக்களும் எந்த ஜனநாயக உரிமைகளுக்காக போராட முன்வந்தார்களோ, அந்த ஜனநாயக உரிமைகள் இப்பொழுது ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களால் மறுக்கப்பட்டு அராஜகமும், கொலைகளுமே ஈழவிடுதலைப் போராட்டம் என்ற பெயரில் எஞ்சியிருப்பதையும், ஈழவிடுதலைப் போராட்ட இயக்கத் தலைமைகள் தம்மை மட்டுமல்லாது ஈழவிடுதலைப் போராட்டத்தையே தமது குறுகிய நலன்களுக்காக பலியிட்டுவிட்டதையும் எண்ணியவர்களாக அடக்கிக் கொள்ள முடியாத உணர்வலைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.

புளொட்டின் மகளிர் அமைப்பில் செயற்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான நந்தா, வனிதா(சாந்தி) ஆகியோரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் சந்திக்க நேர்ந்தது. நாம் புளொட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து நந்தா, வனிதா(சாந்தி) உட்பட புளொட்டில் முன்னணியில் செயற்பட்டுக் கொண்டிருந்த பலருடன் எமக்கு ஆரோக்கியமான உறவு இருந்திருக்கவில்லை. புளொட்டின் தலைமையால் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலரும், மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலரும் எமது நடவடிக்கைகளைக் கண்காணிக்க அமர்த்தப்பட்டதும், நாம் புளொட்டிலிருந்து வெளியேறிய பின் எம்மை கொன்றொழிப்பதற்கு புளொட் அராஜகவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை கேள்விக்குள்ளாக்காமையுமே எமக்கிடையில் ஆரோக்கியமான உறவு இல்லாமைக்கு காரணமாய் அமைந்திருந்தது.

ஆனால் நந்தாவும் வனிதாவும்(சாந்தி) இப்பொழுது என்னிடம் மனம்திறந்து பேசத் தொடங்கினர். புளொட்டிலிருந்து வெளியேறிய எம்மைப்பற்றி தவறான தகவல்களை வழங்கி புளொட்டின் தலைமையால் தாம் தவறாக வழிநடத்தப்பட்டுவிட்டதாக நந்தாவும், வனிதாவும் (சாந்தி) தெரிவித்தனர். புளொட்டின் தலைமையினால் வழங்கப்பட்ட தவறான தகவல்களால் தாம் இழைத்த தவறுகளுக்காக மனம் வருந்துவதாக தெரிவித்திருந்தனர். புளொட்டின் தளமாநாட்டின் பின்னான காலப்பகுதியில் புளொட்டில் அங்கம் வகித்த பலர் தமது தவறுகள் குறித்து பல்வேறு நியாயப்படுத்தல்களை முன்வைத்துக் கொண்டிருந்த வேளையில் நந்தாவும், வனிதாவும்(சாந்தி) தாம் இழைத்த தவறுகளை தவறுகளென்று வெளிப்படையாக எடுத்துக் கூறியிருந்ததுடன் அத்தவறுகளுக்காக வருத்தம் தெரிவித்திருந்ததன் மூலம் தமது அரசியல் நேர்மையை வெளிப்படுத்தியிருந்தனர். ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் செயற்பாடுகள் மீதான வெறுப்பும், விரக்தியும், அவநம்பிக்கையுமே அவர்களின் பேச்சின் சாரமாக அமைந்திருந்தது. நந்தா, வனிதா(சாந்தி) மட்டுமின்றி புளொட்டுடன் இணைந்து இனஒடுக்குமுறைக்கெதிராகவும், பெண்களின் உரிமைகளுககாகவும் போராடிய நூற்றுக்கணக்கான பெண்கள் இதே நிலையை வந்தடைந்திருந்ததுடன் செல்லும் திசை அறியாதவர்களாக நின்றனர்.

“தீப்பொறி” செயற்குழுவின் பெரும்பான்மை அங்கத்தவர்களின் முடிவின்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளர் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீது யாழ்ப்பாண நகரில் வைத்து இரவுநேரத்தில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இக் கைக்குண்டுத் தாக்குதல் கிட்டுவை கொலை செய்வதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டிருந்த போதிலும், குண்டுத் தாக்குதலில் கிட்டுவின் இரு மெய்ப்பாதுகாவலர்கள் உயிரிழந்த அதேவேளை கிட்டு தனது ஒரு காலை மட்டும் இழந்து உயிர் தப்பியிருந்தார்.

ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களை தொடர்ச்சியாக அழித்து, ஈழவிடுதலைப் போராளிகளை கோரத்தனமாகக் கொன்றொழித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் கிட்டு மீதான கைக்குண்டுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. “காற்றுக் கூடப் புகமுடியாத” இடங்களிலெல்லாம் உளவறிவதில் “வல்லமை” மிக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவுத்துறைக்கு இத்தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது தான் கேள்வியாக இருந்ததே தவிர அதற்கான பதில் அவர்களிடம் இருந்திருக்கவில்லை.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரின் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிப்பின் பின்னர் கிட்டு(சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரின் மீதே தமிழீழ விடுதலைப் புலிகள் சந்தேகம் கொண்டிருந்தனர். இதனால் கிட்டுவின்(சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதலுக்கு பழிவாங்கும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அழிப்பு நடவடிக்கையின் போது கைதுசெய்து நல்லூர் கோவில் வீதியில் அமைந்திருந்த “கந்தன் கருணை” என்ற வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 50க்கு மேற்பட்ட ஏதுமறியா அப்பாவி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போராளிகள் உட்பட பலர் அன்றிரவே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அருணாவால் (செல்வசாமி செல்வகுமார்) சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

(இடது பக்கத்திலிருப்பவர் - அருணா – செல்வசாமி செல்வகுமார்)

இதன் தொடர்ச்சியாக அன்றிரவு யாழ் இந்து மகளீர் கல்லூரிக்கருகில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போராளிகள் உட்பட பலரும், நாவலர் வீதியில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போராளிகள் உட்பட பலரும், கொலைவெறியில் அலைந்து திரிந்த அருணாவின்(செல்வசாமி செல்வகுமார்) M16 துப்பாக்கிக்குப் பலியாகினர். மேலும் யாழ்ப்பாண குடாநாட்டில் பல இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போராளிகள் உட்பட பலரும் கிட்டு(சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீது கைக்குண்டு எறிந்த சம்பவத்தினால் ஆத்திரமுற்ற தமிழீழ விடுதலைப் புலிகளால் பலியெடுக்கப்பட்டனர்.

ஜூலை 1983 தமிழீழ விடுதலைப் புலிகளால் இலங்கை இராணுவத்தினரைக் குறிவைத்து திருநெல்வேலியில் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதையடுத்து இலங்கைத் தீவு முழுவதும் தமிழ்மக்கள் மீதும் இனஅழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் வெலிக்கடைச்சிறையில் அரசியற் கைதிகளாக இருந்த டாக்டர் சோமசுந்தரம் இராஜசுந்தரம், தங்கத்துரை(நடராஜா தங்கவேல்), குட்டிமணி(செல்வராஜா யோகச்சந்திரன்), ஜெகன்(ஜெகநாதன்), தேவன்(செல்லத்துரை சிவசுப்பிரமணியம்), அரபாத், கந்தையா ராஜேந்திரன் (றொபேர்ட்), சின்னராசா, நடேசுதாஸ், சிவபாதம், குமார், ஸ்ரீகுமார், மரியாம்பிள்ளை, குமரகுலசிங்கம் உட்பட 50க்கு மேற்பட்ட அரசியற் கைதிகள் ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் கூலிக்கமர்த்தப்பட்ட கொனவெல சுனில் தலைமையிலான காடையர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தனர்.

ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சி அரசின் சிறுபான்மை இனங்கள் மீதான அணுகுமுறையை இப்படுகொலைகள் உலகுக்குக் எடுத்துக் காட்டி நின்றதுடன் இரத்தக்கறை படிந்த “வெலிக்கடைப் படுகொலை” என வரலாற்றில் இடம் பெற்றிருந்தது மட்டுமல்லாமல் ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சி அரசின் கோரமுகத்தையும் வெளிக்காட்டியிருந்தது. ஆனால் இப்பொழுதோ கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதலுக்கு பழிவாங்கும் முகமாக ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சி அரசின் பாணியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் அவர்களின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏதுமறியாத ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிப் போராளிகள் உட்பட பலர் கொன்றொழிக்கப்பட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் வெலிக்கடைப் படுகொலையை ஒத்த “கந்தன் கருணைப் படுகொலை” என்றொரு இரத்தக்கறை படிந்த வரலாற்றை உருவாக்கி விட்டிருந்தனர்.

கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதலையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மால் தடைசெய்யப்பட்ட அனைத்து ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களில் செயற்பட்ட உறுப்பினர்கள் மீதும் மற்றும் எம்மைப் போன்று செயற்பட்டுக் கொண்டிருந்த சிறிய ஈழ விடுதலைப் போராட்ட அரசியற் குழுக்கள் மீதும் தமது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியிருந்தனர்.

“தீப்பொறி” செயற்குழுவின் முடிவிற்கமைய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளின் இத்தகைய போக்குகளுக்கெதிராக மக்களைப் போராடுமாறும் கோரும் துண்டுப்பிரசுரங்களை வெளிக்கொணர்வதற்கான செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. இதற்காக றோனியோ இயந்திரம் ஒன்றை வாங்கியிருந்த நாம் எம்மால் எழுதி றோனியோ செய்யப்பட்ட துண்டுப்பிரசுரங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்களில் நாம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக இரவுவேளைகளில் எடுத்துச் சென்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், யாழ்ப்பாண நகரின் பிரதான இடங்களிலும் விட்டுச் சென்றதன் மூலம் மக்கள் மத்தியில் கிடைக்க வகை செய்தோம்.

யாழ்ப்பாணம் சென்றிருந்த நான் மீண்டும் வவுனியா சென்றிருந்த போது எம்முடன் செயற்பட்டுக் கொண்டிருந்த வண்ணனின் வீட்டில் சுனிமெல் என்ற தோழர் தங்க வைக்கப்பட்டிருந்தார். புளொட்டின் செயற்பாடுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் தடை விதிக்கப்பட்டதன் பின்னரான காலப் பகுதியில் புளொட்டுடன் இணைந்திருந்த சிங்கள முற்போக்கு சக்திகள் (குறிப்பாக இளைஞர்கள்) சிலர் இந்தியா வழியாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்த அதேவேளை சிலர் இலங்கை அரசால் கைது செய்யப்பட நேரும் என்ற போதிலும் தென்னிலங்கைக்குச் சென்றிருந்தனர்.

ஆனால், பேராதனைப் பலகலைக்கழக பொறியியல் பீட மாணவனான சுனிமெல் தனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்தவரும், வவுனியாவில் எம்முடன் செயற்பட்டுக் கொண்டிருந்தவருமான யோகன் என்பவரைத் தொடர்பு கொண்டு தென்னிலங்கைக்குச் செல்வதில் தனக்கு இருக்கும் பாதுகாப்புப் பிரச்னையை எடுத்துரைத்ததோடு எம்மால் தனக்குப் பாதுகாப்பு அளிக்க முடியுமா என்றும் கேட்டிருந்தார். இதனையடுத்து வண்ணன், கபிலன், தவராசா, யோகன் ஆகியோருடன் சுனிமெல்லின் சந்திப்பு இடம் பெற்றிருந்தது. இலங்கையின் இனவாத அரசுக்கெதிரான சிறுபான்மை இன மக்களின் நியாயமான போராட்டத்தை அங்கீகரித்து புளொட்டுடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்த சுனிமெல் போன்ற சிங்கள முற்போக்கு சக்திகளை பாதுகாக்க வேண்டியது எமது கடமைகளில் ஒன்று என்று எண்ணிய வண்ணன், கபிலன், தவராசா, யோகன் ஆகியோர் சுனிமெல்லுக்கு வண்ணனின் வீட்டில் பாதுகாப்பளிக்க முன்வந்திருந்தனர்.

இலங்கை அரச படைகளால் மட்டுமல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் கூட சுனிமெல்லுக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலை இருந்ததால் சுனிமெல்லுடைய வாழ்க்கை அறைகளுக்குள்ளேயான தலைமறைவு வாழ்க்கையாகவே அமைந்திருந்தது. சுனிமெல்லுடன் தொடர்ந்து சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. தென்னிலங்கையில் ஜே.வி.பியினரின் செயற்பாடுகளும் இலங்கை அரசினது கெடுபிடிகளும் தீவிரம் அடையத் தொடங்கியதையடுத்து சுனிமெல் எம்முடன் இணைந்து செயற்படும் விருப்பத்தை தெரிவித்திருந்தார். சுனிமெல்லை எம்முடன் இணைத்துக் கொள்வது குறித்து வவுனியா மாவட்டக் குழுவில் அங்கம் வகித்த வண்ணன், கபிலன், தவராசா, யோகன் ஆகியோருடன் நானும் இணைந்து விவாத்தித்தோம்.

புளொட்டுடன் இணைந்து செயற்பட்டிருந்த, நம்பிக்கைக்குப் பாத்திரமான சுனிமெல்லை எம்முடன் இணைத்துக் கொள்வதில் வவுனியா மாவட்ட குழுவில் அங்கம் வகித்த அனைவரும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் சுனிமெல்லை எம்முடன் இணைத்துச் செயற்படுவது குறித்த முடிவை “தீப்பொறி” செயற்குழுவில் பேசியே, செயற்குழுவின் அனுமதியுடனேயே எடுக்க வேண்டியிருந்தது. சுனிமெல்லினுடைய கருத்தையும் வவனியா மாவட்டக் குழுவினரின் சுனிமெல்லை எம்முடன் இணைத்துச் செயற்படுவது குறித்த கருத்தையும் செயற்குழுவில் பேசுவதற்காக யாழ்ப்பாணம் சென்றேன். சுனிமெல் குறித்து பேசுவதற்காக “தீப்பொறி” செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.

எம்முடன் இணைந்து கொள்வது குறித்து சுனிமெல் முன்வைத்த கருத்தையும் வவுனியா மாவட்டக் குழுவில் செயற்படுபவர்களின் கருத்தையும் செயற்குழுவில் முன்வைத்தேன். இது குறித்து விவாதம் “தீப்பொறி” செயற்குழுவில் ஆரம்பமானது. சுனிமெல்லை “தீப்பொறி”க் குழுவுடன் இணைத்துக் கொள்ள முடியாது என்ற கருத்தை செயற்குழுவில் அங்கம் வகித்த காந்தன் (ரகுமான் ஜான்), டொமினிக் (கேசவன்), சண்முகநாதன், தர்மலிங்கம், தேவன் போன்றோர் முன்வைத்திருந்தனர். சுனிமெல்லை எம்முடன் இணைத்துக் கொள்ள முடியாது என்பதற்கான பிரதான காரணமாக சுனிமெல் ஒரு இனவாதியல்ல என்பதை சிங்கள மக்கள் மத்தியில் சென்று செயற்படுவதன் மூலம் எமக்கு நிரூபிக்க வேண்டும் என்று கருத்து முன்வைக்கப்பட்டது. சுனிமெல் சிங்கள மக்கள் மத்தியில் செயற்பட்டு, தான் ஒரு இனவாதியல்ல என்று நிரூபிக்கும் பட்சத்தில் எம்முடன் இணைந்து செயற்பட முடியும் என்றும் கருத்து முன் வைக்கப்பட்டது.

தனிநபர் பயங்கரவாதத்தை கருத்தளவில் ஈவிரக்கமின்றி விமர்சித்த நாம் நடைமுறையில் தனிநபர் பயங்கரவாதத்தை பின்பற்றியவர்களாக காணப்பட்டது போல், இப்பொழுது சுனிமெல் என்ற சிங்களத் தோழரை – ஏற்கனவே புளொட்டில் அங்கம் வகித்திருந்த சிங்களத் தோழரை – இனவாதியாக கற்பனை செய்வதும், அவரை சிங்கள மக்கள் மத்தியில் செயற்பட்டு அவர் இனவாதியல்ல என நிரூபிக்கச் சொல்வதும், எம்மை இடதுசாரிகள் என அழைத்துக் கொண்டு சுனிமெல் குறித்து இத்தகையதொரு கருத்தைக் கொண்டிருப்பதும் நாம் சொல்லளவில் மட்டுமே இடதுசாரிகளாக இருக்கின்றோமே தவிர நடைமுறையில் ஒரு ஜனநாயகவாதியின் கண்ணோட்டத்தைக் கூட கொண்டிருக்கவில்லை என்பதையே எடுத்துக் காட்டியது.

நாம் புளொட்டில் செயற்பட்டபோது கூட சிங்கள மக்கள் குறித்த புளொட்டினுடைய கருத்துக்களில் முழுமையான உடன்பாடானவர்களாகவே இருந்தோம். புளொட்டினுடைய கருத்துக்களை நாம் என்றைக்கும் விமர்சனம் செய்தது கிடையாது. புளொட்டின் தவறான நடைமுறையைத்தான் நாம் விமர்சித்தோம்; அந்தத் தவறான நடைமுறைக்கெதிராகப் போராடினோம். ஆனால் இன்றோ குறைந்த பட்சம் நாம் புளொட்டில் செயற்பட்டபோது எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரியான கருத்துக்களையே நாம் பின்பற்றத் தயாராக இருக்கவில்லை. சிங்கள மக்களை எமது போராட்டத்தில் வென்றெடுப்பதற்காக சிங்கள வானொலி சேவையை புளொட் நடாத்தியது மட்டுமல்லாமல் சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி செயற்பட்டதுடன் சிங்கள இளைஞர்களையும் கூட இணைத்து அவர்களுக்கு இராணுவப் பயிற்சியும் புளொட்டால் அளிக்கப்பட்டிருந்தது. 1983லேயே உடுவரகே ஹென்றி பெரேரா என்ற சிங்கள இடதுசாரி புளொட்டுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும்போது இலங்கை அரச படைகளால் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டிருந்தார். சிங்கள மக்கள் குறித்தும், சிங்கள முற்போக்கு, ஜனநாயக சக்திகள் குறித்தும் புளொட்டினுடைய கண்ணோட்டம் அல்லது கருத்து இதுவாகத்தான் இருந்தது.

ஆனால் இன்று புளொட்டின் தவறான நடைமுறையை விமர்சித்து அதிலிருந்து வெளியேறிய நாம், புளொட்டில் அங்கம் வகித்த போது புளொட்டில் முன் வைத்த சரியான கருத்துக்களையே பின்பற்றுவதற்குத் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. சுனிமெல் குறித்த “தீப்பொறி”ச் செயற்குழு உறுப்பினர்களின் பார்வை இடதுசாரிகளின் பார்வையல்ல; இடதுசாரிகள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் இனவாதிகளின் பார்வையேயாகும். செயற்குழு விவாதத்தின் முடிவில் சுனிமெல்லை தீப்பொறிக் குழுவுடன் இணைத்துக் கொள்வதில்லை என காந்தன் (ரகுமான் ஜான்), டொமினிக் (கேசவன்), சண்முகநாதன், தர்மலிங்கம், தேவன் ஆகியோர் அடங்கிய பெரும்பான்மையான உறுப்பினர்களால் முடிவெடுக்கப்பட்டது. “தீப்பொறி”ச் செயற்குழுவின் முடிவை வவுனியா சென்று சுனிமெல்லுக்கு தெரிவிக்குமாறு செயற்குழு என்னைப் பணித்தது.

ஆனால் இத்தகையதொரு முடிவை, இத்தகையதொரு இனவாதக் கருத்தை நான் சுனிமெல்லிடம் தெரிவிக்கப் போவதில்லை என வாதித்தேன். சுனிமெல் குறித்த விடயத்தில் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுக்கு மதிப்பளிக்கவும், அதற்குக் கட்டுப்படவும் செய்தேன். ஆனால் அடிப்படையிலேயே ஒரு மோசமான இனவாதக் கருத்தை சுனிமெல்லுக்கு தெரிவிப்பதை நான் விரும்பியிருக்கவில்லை. “தீப்பொறி”ச் செயற்குழுவுக்குள் அங்கத்தவர்களின் தவறான கருத்துக்களுக்கும் தவறான போக்குகளுக்கும் எதிராக ஒரு போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பெரும்பான்மை முடிவுகளின் அடிப்படையில் அனைத்து செயற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இலங்கை அரசியல் அரங்கில் நகர்த்தப்படும் காய்கள்
இலங்கையில் இப்போது அரசியற் காரணங்களுக்காகச் சிறையிருக்கும் தலைவர் ஒரு சிங்களவரே. அவருடைய பெயரை இங்கே நாம் வெளிப்படுத்தாமலே அவர் யாரென்று எல்லோருக்குமே தெரியும். ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்தத்தைத் தலைமை தாங்கி நடத்திய இராணுத்தளபதி. அதாவது வெற்றியின் நாயகர்களில் ஒருவர். ஒரு ஜனாதிபதி வேட்பாளர். ஏறக்குறைய நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோரின் வாக்குகளைப் பெற்ற மனிதர். எனினும் அவருடைய பெயரை இங்கே குறிப்பிட்டே ஆகவேணும். அவர் திரு. சரத் பொன்சேகா. மன்னிக்கவும் ஜெனரல் சரத் பொன்சேகா.

பிரிவினைவாதத்தைப் பற்றி, புலிகளைப் பற்றி அதிகமாகக் கதைக்கின்ற தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அச்சமின்றி, மிகப் பகிரங்கமாகத் திரிகிறார்கள். புலிகளின் முக்கியஸ்தர்களாகவும் புலிகளின் சிரேஸ்ர மட்டத்தலைவர்களாகவும் இருந்தவர்கள் கூட இன்று மிகப் பாதுகாப்பாக – வெளியே நடமாடுகிறார்கள். ஆனால், நாட்டுக்காகப் போராடிய, அதற்காக மரணத்தின் விழிம்புவரை சென்று திரும்பிய சரத்பொன்சேகா சிறைக் கம்பிகளினுள்ளே நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் அல்லது தன்னுடைய தீர்மானங்களைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அல்லது கடந்த காலத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார். அல்லது எதிர்காலத்தைப் பற்றித் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அல்லது தன்னுடைய விடுதலையைப்பற்றி அல்லது தான் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கிக் கொள்வதைப் பற்றி அல்லது எல்லாவற்றிலும் உச்ச தீவிரம் கொண்டியங்குவதைப் பற்றி, எப்படியோ….

ஆனால், நிச்சயமாக அவர் எதையோ பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். என்றாலும் படைகளின் தளபதி இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தேர்தலின்போது கூட்டு வைத்துக் கொண்டவர்கள்  கூட அவரைச் சென்று பார்க்கவில்லை.

அவரைக் களமிறக்கியவர்களும் அவரை ஆதரித்தவர்களும் இன்று அவரைக் கைவிட்டுள்ளனர் என்றே தெரிகிறது. அல்லது அவர்கள் சரத்தை மீட்க முடியாத நிலையில் வேறு தெரிவுகளுக்குச் சென்றுள்ளனர்.

சரத் எப்படியான சூழலில் களமிறங்கினார் என்று பார்ப்பதற்கு முன்னர், அவரை யார் களமிறக்கினார்கள்? எப்படிக் களமிறக்கப்பட்டார்? என்று பார்ப்பது இன்றைய அரசிற் சூழலை விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும்.

சரத்தைக் களமிறக்கியது அமெரிக்கா தலைமையிலான மேற்கே. இலங்கையில் தமக்குச் சாதமான தலைமைகளைத் தேடிக் கொண்டிருக்கிறது மேற்கு. அதற்குத் தோதாக யாரும் இல்லை என்ற நிலையில் சரத் பொன்சேகாவை அது தேர்ந்தெடுத்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்தத் தெரிவைச் செய்ய வேண்டிய அவசியம் மேற்கிற்கிருந்தது. மகிந்த ராஜபக்ஷ மேற்கின் ஆளில்லை என்று அதற்குத் தெளிவாகவே தெரியும். எனவே அது வேறு ஒருவரை அல்லது மகிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்கக் கூடிய – அவரை மேவக்கூடிய ஒருவரைத் தேடியது.

வழமையைப்போல ஐ.தே.க மேற்குக்குக் கை கொடுக்கும் இயல்போடிருந்தது என்றாலும் அதன் தலைமை அதற்குரிய ஆளுமையோடு இல்லை என்பதால் சரத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரணில் வெற்றிகளுக்குரியவரல்ல என்ற கணிப்பும் வருத்தமும் மேற்கிற்கு ஏற்பட்டிருந்தது. எனவே வெளியே இருந்த சரத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், சரத் அரசியலுக்குப் பரிச்சயமில்லாதவர், புதியவர் என்பதால் அவருக்கு முழுமையான ஆதரவைக் கொடுத்து வெற்றியடைய வைக்க வேண்டிய ஒரு சூழலை மேற்கு உருவாக்கியது.

இதன்படி அது முதலில் சரத்தை ஒரு பொது வேட்பாளராக்கியது. இந்தப் பொது வேட்பாளரை ஐ.தே.க வும் ஆதரிக்கும். சிறுபான்மைத்தரப்புகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரிக்கும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஆதரிக்கும். மனோ கணேசனும் ஆதரிப்பார் என்று ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்தியது. அதாவது சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவர் – ஒரு பொது ஆள் என்ற தோற்றத்தையும் உணர்வையும் நாட்டு மக்களிடையே ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இந்தப் பொதுப் பிம்பத்தின் மூலம் சரத்தை வெற்றிகொள்ள வைத்து தனக்குச் சாதகமான ஒரு நிலைமை உருவாக்கிக் கொள்வதே மேற்கின் நோக்கம். இதில் மேற்கிற்குக் கிடைக்கவிருந்த அனுகூலங்கள் அதிகம். குறிப்பாக தனக்குச் சார்பான ஆள் ஒருவரை இலங்கையில் அதிகாரத்தில் இருத்துவதன் மூலம் கிடைக்கின்ற நன்மைகளோடு பல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் அதிகாரத்திலிருப்பது என்பது வெளியே ஜனநாயகத்தின் பார்வையாளருக்குத் திருப்தியை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்பது.

இதற்காக அது இன்னும் ஒரு விசயத்திலும் கவனஞ்செலுத்தியது.

சரத் போர் வெற்றியின் முக்கிய பங்காளி. (போர்க்குற்றத்தின் பங்காளியும்கூட என்றபோதும் இதை மறைத்து விட்டது மேற்கு). எனவே இந்தப் போர் வெற்றியை ஒரு முதலீடாக ஆக்கிக் கொள்வதற்கும், போர்வெற்றியைத் தன்னுடையதாக்க முயன்ற மகிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சியாகவும் மேற்கு சிந்தித்தது.

அந்த நாட்களில் மிக நெருக்கடிப் பட்டே – பதற்றம் நிரம்பிய நிலையிலேயே மகிந்த ராஜபக்ஷ சரத்தை எதிர்கொண்டார் அல்லது ஜனாதிபதித் தேர்தலை அவர் எதிர்கொண்டார் என்பது எல்லோருக்குமே தெரிந்த சங்கதி.

இதேவேளை இந்தச் சூழலுக்காக மேற்கு குறிப்பாக அமெரிக்கப்பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்புக்கும் பல தடவைகள் பயணம் செய்திருந்தார்கள். அங்கெல்லாம் பொதுமக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுவோரைச் சந்தித்தார்கள். மதகுருக்களைச் சந்தித்தனர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் கூடச் சந்தித்தனர். இன்னும் சொல்ல வேண்டுமானால், யாழ்ப்பாணத்தில் முதன்மைப் பத்திரிகையாகத் தோற்றம் காட்டும் உதயன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தையும் கொழும்பில் தினக்குரல், வீரகேசரி போன்றவற்றின் பிற ஊடகவியலாளர்களையும் அமெரிக்கப் பிரதிநிதிகள் முக்கியத்துவம் கொடுத்துச் சந்தித்தனர். மேலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதும் ஊடகவியலாளர்களையும் மேற்கின் ராஜதந்திரிகள் தொடர்ந்து சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

இதற்கெல்லாம் காரணம், தமக்குச் சாதகமான ஒரு சூழலை உருவாக்குவதே. அதன்படியே பிறகு அனைத்துத் தரப்பும் சரத்தை ஒருமித்த குரலில் வாய்ப்பாடாக ஆதரித்துக் ‘கோரஸ்’ பாடின.

ஆனாலும் சரத்தினால் கோல்போட முடியவில்லை. அவர் போரில் பெற்ற வெற்றியையும் பறித்துக்கொண்டதாகவே அவருடைய  அரசியல் பிரவேசம் அமைந்தது. அரசியல் அரங்கில் சரத் தடுமாறினார். போர்க்களத்தையும் விட அரசியற் களம் மிகக் கடினமானதாக சரத்திற்கிருந்தது.

விடுதலைப்புலிகள் நடத்திய கரும்புலித் தாக்குதலில் ஆபத்தான கட்டத்துக்குச் சென்று திரும்பியிருந்த – தப்பியிருந்த சரத், இந்த அரசியல் அரங்கு ஏற்படுத்திய அபாய நெருக்கடியிருந்து மீள முடியாத நிலைக்குள்ளானார். ஒரு ஜனாதிபதி வேட்பாளரின் நிலை, போரில் வெற்றியீட்டிய ஒரு இராணுவத்தளபதியின் நிலை இன்று இப்படித்தானுள்ளது.

மேற்கின் நம்பிக்கை நட்சத்திரம் அப்படியே ஒளிர முடியாமற் தணிந்தடங்கி விட்டது.

சரத் பொன்சேகாவின் நிலையை இத்துடன் நிறுத்திக் கொண்டு நாம் இப்போதுள்ள நிலைமையைப் பார்க்கலாம்.

சரத்தின் தோல்விக்குப் பிறகு வேறு தெரிவுகள் எதுவும் மேற்கிற்குச் சுலபமாகக் கிடைக்கவில்லை. ஆகவே பிடியற்ற ஒரு நிலையிற்தான் இலங்கை விசயத்தில் மேற்குத் தொடர்ந்தும் உள்ளது.

ஐ.தே.கவிற்குள் தேடினால், ரணிலுக்கு அடுத்தபடியாக கரு ஜெயசூரியா தென்பட்டார். ஆனால் அவர் ஒரு சிரேஸ்ர உறுப்பினராக இருந்தாலும் காரியசித்தராக இல்லை. அடுத்த நிலையில் தெரிந்தவர் சஜித் பிரேமதாஸ. ஆனால், அவரும் மேற்கிற்குக் கவர்ச்சியை ஏற்படுத்தத் தக்க அளவில் செழிப்பான அடையாளங்களை வெளிப்படுத்தவில்லை. பதிலாக இன்னும் கட்சியையும் தன்னையும் பலவீனப்படுத்திக் கொண்டேயிருக்கிறார் சஜித்.

இந்த நிலையிற்தான் மேற்கு வேறு வழியின்றி மீண்டும் ரணிலை முன்னரங்குக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது. அதன்படியே ரணிலை அது பொது ஆளாக்குகிறது. ஐ.தே.கவுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிற கொந்தளிப்பான சூழலின் மத்தியிலும் ரணில் இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டு கட்சித் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். இது ஒரு முக்கியமான விசயம்.

இந்தியாவுடனும் வெளியுலகத்துடனும் தொடர்புள்ள ஒரே தலைவர் ஐ.தே.கவுக்குள் ரணில்தான் என்ற அபிப்பிராயம் மேற்கிற்கு உள்ளதும் இதற்கு இன்னொரு காரணம்.

எனவே அது ரணிலைத் தேர்வு செய்து அவரைப் பொது ஆளாக்கிப் பலப்படுத்துவதற்கு யோசிக்கிறது. அதாவது வெற்றிக்கான நாயகனாக்குவதற்கு, நம்பிக்கை நட்சத்திரமாக்குவதற்கு முயற்சிக்கிறது.

இதன்படியே அது இப்பொழுது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு ஒன்றை மீண்டும் உருவாக்க முனைகிறது. இந்தக் கூட்டமைப்பில் அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களும் அதிருப்தியாளர்களும் ஒன்றிணைவதற்கான ஏது நிலைகளையும் அது உருவாக்கி வருகிறது. இதற்காக அமெரிக்கப் பிரதிநிதிகள் தொடர்ந்து பல சந்திப்புகளைப் பல தரப்பினருடனும் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் நடத்தி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் பொது மக்கள் பிரதிநிதிகளுடனும் ஆயருடனும் நடக்கின்ற சந்திப்புகள் கூட இந்தப் பின்னணியைப் பெரிதும் கொண்டவையே. மேலும் அங்குள்ள பத்திரிகைகளையும். சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும். இதற்காக அது சில தரப்புகளுக்கு அள்ளியிறைக்கும் தொகையும் வழங்கும் சலுகைகளும் கொஞ்சமல்ல.

இப்போது இவ்வாறு உருவாக்கப்படும் பொது ஆளான ரணில் யாழ்ப்பாணம் வரையில் வந்து அரசியல் விவகாரங்களில் ஈடுபடுகிறார். அண்மையில் நடந்த மேதின நிகழ்வுகள் இதற்கொரு உதாரணம். இதற்கு அவருக்கு யாழ்ப்பாணத்திலிருக்கும் அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் (திருமதி விஜயகலா மகேஸ்வரன்) சில தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் ஆதரவாக இருக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக ரணிலுடன் கைகுலுக்குவதை அதிகம் விரும்பவில்லை என்றாலும் மேற்கின் விருப்பத்தை அதனால் மீறிட முடியவில்லை. எனவே அது நசிந்த நிலையில் மெல்லக் கையை நீட்டியுள்ளது. (யாழ்ப்பாணத்தை எரித்துக் களித்தவர்களும் யாழ்ப்பாணத்தை எரித்துவிட்டார்கள் என்று குற்றம் சாட்டியவர்களும் எப்போது எப்படி இணங்கினர் என்று கேட்கப்படும் கேள்வியும் ஒரு பக்கத்தில் கொதிநிலையிலேயே உள்ளது). மட்டுமல்ல சம்மந்தன் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்தியதும் (அதுவும் யாழ்ப்பாணத்தில்) மேற்கின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டதே. (இந்த இடத்தில் யாழ்ப்பாணம் ஆயர் வாய் திறக்காமல் கள்ள மௌனம் காப்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில் அவர் மேற்கின் விருப்பங்களுக்கு மாறாகச் சிந்திக்க மாட்டார். அப்படிச் சிந்தித்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்).

ஆனால், எப்படியோ ரணில் இலங்கைத் தீவின் பல சமூகத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட – அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொது ஆளாகத் தோற்றம் கொள்ள வைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் ‘இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இத்தகைய ஒரு பொதுத் தோற்றம் தேவை. பலருடைய ஒன்றிணைவுடன் வரும் ஒருவரே பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிலையைக் கொண்டிருக்க முடியும்’ என்று இதனை அவதானிக்கும் சிலர் வாதிடுகிறார்கள். மட்டுமல்ல ‘ஜனநாயகத்தின் பேணுகைக்கும் இது அவசியம்’ என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

‘இல்லை. இது வெறும் தோற்றம் மட்டுமே தவிர, அதற்கப்பால் ஒன்றுமேயில்லை. எல்லாமே வழமைதான். தங்களுடைய நலன்களுக்காக எங்களின் கண்களில் மண்ணைத் தூவி மூளையைக் கறுப்பாக்க முயற்சிக்கிறார்கள். மேதின நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் ரணில் என்ன சொன்னார் தெரியுமா? ‘நாங்கள் யுத்தம் செய்யாமல் யாழ்ப்பாணம் வந்திருக்கிறோம். இப்போது யாழ்ப்பாணத்திலும் நாங்கள்’ என்கிறார். இது எதைக் காட்டுகிறது? தான் போர்க்குற்றங்களுக்கு அப்பாலானவன், இரத்தக்கறை படியாதவன் என்று சொல்லப்பார்க்கிறார். ஆனால், அவர் தீர்வைக் குறித்து என்ன சொல்கிறார்? என்று கேட்கின்றனர் மறுப்பாளர்கள்.

‘இலங்கை மீது – மகிந்த ராஜபக்ஷ அரசின் மீது போர்க்குற்ற விசாரணைகள், மனித உரிமைகள் விவகாரங்கள் போன்றவற்றின் மூலம் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்ற மேற்கு, அதேவேளை உள்நாட்டில் அரசுக்கு எதிராக – மாற்றணி ஒன்றை வலுவாக்க இந்த முயற்சியை முயற்சித்து வருகிறது. ஆகவே அந்த வேலைத் திட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்த நிகழ்ச்சிகள் இருக்கின்றன. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு இதை விட வேறு என்ன மார்க்கம் இருக்கிறது?’ என்று கேட்கிறார்கள் முதற் தரப்பினர்.

‘இல்லை இது மேற்கின் சூழ்ச்சி, மேற்கு தொடர்ந்து கொண்டிருக்கிற இன்னொரு விடிவத்திலான ஆக்கிரமிப்பு முயற்சி. இதெல்லாம் அதனுடைய பொறியே தவிர, இலங்கையின் நிரந்தர அமைதி, சமாதானம், இன நல்லிணக்கம், அரசியற் தீர்வு என்ற எதுவும் இந்த நடவடிக்கையில் உள்ளடக்கப்படவில்லை. இலங்கை மக்களுக்கோ இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கோ இதில் எந்த நன்மைகளும் பெரிதாக இல்லை’ என்கின்றனர் மறுப்பாளர்கள். அதாவது ரணில் இந்த நாட்டுக்காக அல்ல, வெளித்தரப்புக்காகக் கோல் போடுவதற்காகவே தயாரிக்கப்படுகிறார்.

இப்படியே ‘இரு நிலை விவாதம்’ இன்றைய இலங்கை நிலைமை குறித்து பொதுவாகப் பேசப்படுகிறது.

இன்றைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இனங்களுக்கும் நாட்டுக்கும் விவகாரங்களுக்கும் பொதுவானதாக இருக்கவில்லை என்ற பலவீனமான நிலைமையை ஆதாரமாக வைத்துக்கொண்டு, அந்தப் பலவீன வெடிப்புகளுக்குள்ளால் எதிர்ப்பூற்றைச் சுரக்க வைக்க வெளிச் சக்திகள் முயற்சிக்கின்றன.

இங்கே ஒரு விசயத்தை நாம் மீளவும் திரும்பிப் பார்க்கலாம்.

ரணிலின் ‘பொது ஆள்’ தோற்றத்துக்கு உச்ச எதிர்ப்புக் காட்டுவது ஐ.தே.கவினுள் இருக்கும் ஒரு அணி. அதாவது ரணிலுக்கு எதிரான அணி. சஜித்தின் தலைமையிலான அணி.

கூடவே வேறு எதிர்ப்புகளும் சிறு அளவில் சிங்களத்தரப்பில் உண்டு. அதைப்போல தமிழ்த் தரப்பிலும் ரணிலை நம்பமுடியாது என்போர் பெருமளவில் இருக்கின்றனர். ரணில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமல்ல என்று கருதிய மக்களும் பெருமளவில் உள்ளனர்.

இந்த நிலையில் மேற்கின் பந்தயக் குதிரையாக ஆக்கப்பட்ட சரத்தைப் போல ரணிலும் பொறியொன்றினுள் சிக்கிக் கொள்வாரா? அல்லது வெற்றிக் கொடியோடு – நம்பிக்கை நட்சத்திரமாக – சிம்மாசனம் ஏறுவாரா? இது ஒரு பொல்லாத – கடினமான கேள்வியும் எதிர்பார்க்கையுமாகும்.

எப்படியோ இன்று தமிழ் அரசியற் தலைவர்களையும் விட சிங்கள அரசியற் தலைவர்களே அதிக நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள். தமிழ் அரசியற் தலைவர் எவரும் நாடு கடத்தப்படவோ சிறையில் அடைக்கப்படவோ இல்லை. பதிலாக சிங்கள அரசியற் தலைவர்களே அப்படியான நிலைக்குள்ளாகியிருக்கிறார்கள். அண்மையில் ஜே.வி.பியின் உறுப்பினர்களான லலித், குகன் காணாமற்போனமை மற்றும் ஜே.வி.பியின் மாற்று அணியின் பிரமுகர்கள் பிரேம்குமார் குணரட்ணம், திமுது ஆட்டிக்கல போன்றோர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டமை எல்லாம் இங்கே கவனத்திற்குரியது. இதைத்தவிர அனைத்துப் பல்கலைக்கழங்களின் தலைவர் உதுல் பிரமரத்தினவின் கைது நிகழ்ச்சிகள்.

எனவே அரசாங்கம் தமிழ்த் தலைமைகளையும் விட சிங்களத் தலைமைகளைக் குறித்தே அதிகம் அச்சமடைகிறது. மடியிற் கனமிருந்தால் வழியிற் பயம் என்று சொல்வார்கள். அரசாங்கத்தின் மடியிற் கனமிருக்கும் வரையில் அது இந்த வழிப்பயத்தை விட்டொழிக்கவே முடியாது.

இதற்கெல்லாம் காரணம் இலங்கைத் தீவில் ஜனநாயகத்தைத் தின்று தீர்த்தவர்களும் அதற்கு ஆதரவாக இருந்தவர்களுமே. இதை மாற்றியமைப்பதற்கு இன்று ஒரு ஒப்பற்ற ஜனநாயக ஆளுமை – தன்னை ஒப்புக்கொடுத்துச் செயலாற்ற வல்ல, வரலாற்றை நகர்த்தக் கூடிய ஆற்றல் பொருந்திய தலைமை வேண்டும். ஆனால் அது இல்லை என்பதே இந்தத் துயர நீட்சிக்குக் காரணமாகும்.

எனவே ஜனநாயகத்தை இலங்கையில் மீளுருவாக்கம் செய்கிறோம் என்ற போர்வையில் வெளிச் சக்திகள் தங்களுக்கான வேர்களை இங்கே பதியம் வைக்க முயற்சிக்கின்றன. இதை அங்கீகரிப்பதைத் தவிர வேறு கதியில்லை என மக்களிற் பெரும்பாலானோர் கருதுகின்றனர். இதுதான் இன்றைய உலகத்தின் புதிய போக்காக வளர்ந்து வருகிறது.

பாலச்சந்திரனும் சோனியா காந்தியும்
சூரியனைக் கொன்றது சிங்கம்

சினத்துடன் சிங்கம்

சிறுநிலாவையும் கொன்றபோது

முகில்களின் திரையைக் கிழித்து

உள்ளே ஒளிந்தது நிலா

பயத்தில் ஒடுங்கின நட்சத்திரங்கள்

நிலா சூரியனாக மாறுகிற

ஒருநாள் வரும்

அப்போது

எங்களுக்கு ஒளிவதற்கும்

இடம் கிடையாது……

சிங்களக் கவிஞரும் நாவலாசிரியருமான நண்பர் மஞ்சுள வெடிவர்த்தன. ஜுலை மாதம் 2009 எழுதிய இந்தக் கவிதையின் தலைப்பு: பாலச்சந்திரன்.

கொல்லப்பட்ட சிறுவன் பாலச்சந்திரனின் படம் அப்போதே பல இணையத் தளங்களில் வெளியாகி விட்டது. மிக அருகில் நின்று பலம் பொருந்திய துப்பாக்கியால் படையினர் அந்தச் சிறுவனைக் கொலை செய்தமை இப்போது சனல் – 4 தொலைக்காட்சியின் ‘இலங்கையின் கொலைக் களங்கள்’ ஆவணப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் உரிய ஆதாரங்களுடனும் சொல்லப்பட்டுள்ளது. அந்தக் கொலை நிகழ்வும் அது போன்ற ஏராளம் நிகழ்வுகளும் கவிஞர் மஞ்சுளவையும் அவர் போன்ற பல கவிஞர்களையும் உலுக்கி விட்டமை வியப்புக்குரிய ஒன்றல்ல. மஞ்சுள வெடிவர்த்தன இப்போது நாட்டில் இல்லை. ஐரோப்பிய நாடு ஒன்றில், பல்லாயிரக் கணக்கான தமிழர்களைப் போல அரசியல் தஞ்சம் பெற்றுவிட்ட சில சிங்கள முற்போக்கர்களில் அவரும் ஒருவர் . அவருடைய புதிய கவிதைத் தொகுதியில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக அவர் எழுதிய பல கவிதைகள் உள்ளன.

சரி கவிதையை இப்போதைக்கு விட்டு விடுவோம் படுகொலைகள், அவற்றைக் கைத்தொலைபேசிக் கமராவால் படம் எடுத்து வைத்திருக்கிற படையாடகள், இந்தப் படங்கள் எற்படுத்துகிற அதிர்வுகள் என்பன நவீன ஊடகத் துறையிலும் ஊடக அறங்களிலும் செய்தி சேகரிப்பு, விநியோகம், போன்ற அடிப்படையான ஊடகத் தொழிநுட்பங்களிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி விட்டன. பல்வேறு பட்ட நலன்களுக்காகப் பலரும் இத்தகைய அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் படங்களையும் -சிலவேளைகளில் பொறுப்போடும் பெரும்பாலும் பொறுப்பற்றும்-பாவிக்க முற்படுகிறார்கள்.

படுகொலை செய்யப்பட்ட பாலகனான, பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படத்தைப் பார்த்து ‘உள்ளமும் கண்களும் கலங்கிய சோனியா காந்தி, ஐ.நா. அவையில் இலங்கை குறித்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உத்தரவிட்டதாக ஒரு செய்தி பல தமிழ் இணையத் தளங்களிலும் தமிழ்ப் பத்திரிகைகளிலும் முக்கியத்துவம் பெற்றுப் பிரசுரிக்கப்பட்டதை நாங்கள் அறிவோம். தமிழ் இணையத் தளங்களைப் பெரும்பாலும் முற்று முழுதாக நம்ப முடியாது.

சில விதிவிலக்குகளைத் தவிர்த்து விட்டால் இணையத் தளச் செய்திகளும் இலங்கை-இந்தியச் செய்தித்தாள் செய்திகளும் யாரிடமிருந்து யார் கடன் வாங்குகிறார்கள் அல்லது பெற்றுக் கொள்கிறார்கள் அல்லது திருடுகிறார்கள் என்பது குறித்து ஒரு தெளிவான விளக்கம் நமக்கு எப்போதும் கிடைப்பதில்லை. ‘அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்’, ‘நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன’, ‘பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி தெரிவித்தார்’ போன்ற தொடர்கள் இன்றைய ஊடகச் சூழலில் எவ்வளவு தூரம் மலினப்படுத்தப்பட்டு விட்டன என்பதை நாம் அறிவோம். இது போலவே, ‘ஒரு ஆங்கில ஊடகம் சொல்கிறது’, ‘ஒரு கொழும்பு ஊடகம் தெரிவித்தது’ போன்ற தொடர்களும் இணைய ஊடக உலகில் பெரும் அவமானம் மிக்க தொடர்களாக மாறிவிட்டன. இந்தப் பின்னணியில், சோனியா அம்மையார் கண்ணீர் மல்கிய சேதியின் மூலத்தைத் தேடிப் பிடிக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டேன்.

அந்தச் செய்தி இந்தியாவில் எந்தச் செய்தித்தாளிலும் வரவில்லை. ‘Times od India’ வின் Blogsபகுதியில் மார்ச் மாதம் 30ம் தேதி ஜோதி மல்ஹோத்ரா என்ற ஒரு நிருபர் தன்னுடைய பத்தியில் மூலம் குறிப்பிடாமல், ‘உள் வீட்டுத் தகவல்கள்’ சொல்வதாக அதனை எழுதியிருந்தார்.

(பார்க்க:http://blogs.timesofindia.indiatimes.com/ist/entry/sonia_told_pm_to_vote_against_sri_lanka). இந்தச் சேதி Times o India வின் எந்த அச்சுப்பதிப்பிலும் வெளிவரவில்லை. நாளிதழ்களின் Blogs என்று அழைக்கப்படுபவை ஒருவகையில் டயரிக் குறிப்புக்கள் மாதிரி. கேள்விச் செவியர்கள், விடுப்பு விரும்பிகள், ஆம் செய்தியாளர்கள் (அதாவது அவர் சொன்னாராம். இவர் எழுதினராம் என ஆம் விகுதியில் உயிர்வாழும் செய்தியாளர்கள்) போன்ற பலர் இத்தகைய Blogs இல் எழுதுவது வழமை என்னும் இந்தத் தகவல் பிற்பாடு பல தமிழ் இணையத்தளங்களிலும் தமிழ் செய்தித்தாள்களிலும் இடம்பெற்றிருந்தது.இலங்கையில் ஆங்கிலப் பத்திரிகை– Sunday Times இந்தச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. வேறு எந்த ஆங்கிலப் பத்திரிகைகளிலும் இலங்கையில் இச்சேதி வெளியானதாகத் தெரியவில்லை.

இந்தச் செய்தியின் அபத்தம் எனக்கு மிகத் தெளிவாகவே இருந்தது. எனினும் காங்கிரஸ் கட்சியின் அதிகார மையங்கள் பற்றிய பல்வேறு குழப்பங்கள் அடிக்கடி வெளியாவதால் இச்சேதி உண்மையாயிருப்பதற்கும் வாய்ப்புக்கள் உண்டல்லவா? எனவே இந்தியாவின் ஆங்கிலச் செய்தித் துறையில் இருக்கும் பல ஊடக நண்பர்களைத் துருவித் துருவி விசாரித்தேன். Times of India வின் கேரளப் பதிப்புகளுக்குப் பொறுப்பாக இருக்கும் என் நண்பரும் அவர்களில் ஒருவர். எனக்குக் கிடைத்த தகவல்களைத் தொகுத்துப் பார்க்கிறபோது தெரியவருவது இதுதான்:

ஜோதி மல்ஹோத்ரா எனும் நிருபர் பல காலமாக வெளியுறவு அமைச்சரகத்தின் செய்திகளைச் சேகரித்து வெளியிடுபவராகப் பணியாற்றியவர். இத்தகைய செய்திகளை கட்சியினதும் அரசியல் நலம் கருதியும் இந்தியாவின் ‘தேசிய நலன்’ களைப் பேணவும் அவ்வப்போது செய்தித் தாள்களிலும் வேறு ஊடகங்களிலும் சுற்றுக்கு விடுவது (spin!) எல்லா நாடுகளிலும் வழமை. எனவே இந்தியா மட்டும் எப்படி விதி விலக்காகலாம்? இத்தகைய ‘சுற்றுக்குவிடுதலும்’, ‘சுத்துமாத்து’ச் செ;யதிகளும் 1986 இலிருந்து இலங்கைப் பத்திரிகைகளிலும் இந்திய அரசு மூலமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் உத்தரபிரதேசம் உட்பட வேறும்பல மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்ற சூழ்நிலையில் “மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்டுகளுக்காகவும் சோனியா காந்தி கண்ணீர் சிந்தினார் எனத் செய்தி வெளியாகி இருந்தது.

எவ்வளவு இலகுவாக நமது தமிழ் ஊடகங்கள் பல இத்தகைய செய்திகளைத் துருவித் தேடாமலும், மூலங்களைத் தேடி உறுதிப்படுத்தாமலும் வெளியிடுகின்றன என்பதை அவதானிக்கிற போது ஊடகச் சூழல் தொடர்பான அவநம்பிக்கை ஏற்படுகிறது கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம், எல்லாம் பல்வேறு திசைகளிலிருந்தும் எல்லா வகையான அரசுகளிடமிருந்தும் நெருக்கடிகளையும் தாக்குதல்களையும் சந்திக்கிற காலகட்டம் இது. தாராள ஜனநாயகத்தை (Liberal Democracy) உரத்து முழங்குகிற அமெரிக்கா, கனடா போன்ற பல்வேறு நாடகளிலம்கூட இணையத்தளத் தணிக்கை, கண்காணிப்பு, உரிமம் தொடர்பான கட்டுப்பாடுகள், சிக்கல்கள் எல்லாம் மேலெழ ஆரம்பிக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் நமக்கு இருக்கக்கூடிய உறுதியான, துணிவு மிக்க பலனும் பயனும்விளைவிக்கக் கூடிய ஒரேயொரு ஆயுதம். எங்களுடைய ஊடக அறமும், ஊடகத் துறையிலும் அதன் பயிற்சி, பயன்பாடு திறன் தொடர்பான தளர்வற்ற, நுணுக்கமான ஆற்றலும் கடப்பாடும்தான். இவற்றை நாம் கைகழுவி விடுவதென்பது மக்களையும் கைகழுவி விடுவதாகும். எழுத்தறிவிப்பவர்கள் இறைவர்களாக இருக்கட்டும். ஆனால் எழுத்துக்களை உண்மையோடும் நேர்மையோடும் மக்களிடம் சேர்ப்பவர்கள் மனிதர்களாக இருக்கட்டும்.

தமிழகத்தில் வீர முழக்கங்கள் சிங்கள இனவாதத்தை மேலும் தீவிரப்படுத்தி வளர்ப்பதற்கான உரங்கள்
அரசியலில் எப்பொழுதும் நகைச்சுவையான விசயங்களுக்குக் குறையிருப்பதில்லை. இதற்கென்று ஆட்களுமிருப்பார்கள். இலங்கையில் இப்பொழுது இந்தப் பாத்திரத்தை வகிப்பவர் அமைச்சர் மேர்வின். மேர்வினைப் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்படியோ தெரியாது, ஆனால், சனங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு கோமாளி. அதாவது சிரிப்புக்கிடமான மனிதர். (சிரிக்க வைக்கும் மனிதர் அல்ல).

ஆனால், நாங்கள் இங்கே பார்க்கப்போவது மேர்வினைப் பற்றி அல்ல. நகைச்சுவையான விசயமொன்றை. வன்னி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கொத்துக்குண்டுகளின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பாக கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைக்குப் பொறுப்பான இலங்கைக்கான பிரதிநிதி அலன் பொஸ்ரர் சொல்லியிருக்கிறார்.

கொத்துக்குண்டுகளை தாம் பயன்படுத்தவில்லை என்று இராணுவம் சொல்லியிருக்கிறது. கொத்துக்குண்டுகள் எப்படிப் பாதிப்புகளை உண்டுபண்ணின என்று சனங்களுக்கு நன்றாகத் தெரியும். இப்படியே வரலாற்றில் நகை முரண்கள் தொடர்கின்றன.

இதைப் பற்றிக்கூட இங்கே நாங்கள் பேசவில்லை. இதற்கெல்லாம் அப்பால் தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ரீ.ஆர். பாலுவும் திரு. தாமரைச்செல்வனும் அதன் தலைவர் திரு. மு. கருணாநிதியும் தெரிவித்து வரும் விசயங்களைப் பற்றியே பார்க்கிறோம். சிரிப்பதற்குச் சங்கதிகள் வேண்டுமல்லவா?

கடந்த புதன்கிழமை (25.04.2012) இந்திய நாடாளுமன்றத்தில் பாலு சொன்னார் – ‘தமிழீத் தனிநாட்டை உருவாக்குவதற்கு ஐ.நா. வை இந்தியா இணங்கச் செய்ய வேண்டும்’ என்று.

தாமரைச்செல்வன் சொன்னார் – ‘பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகள் பல சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாத் தகவல்கள் கிடைக்கின்றன’ என.

திரு. மு. கருணாநிதி இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்லியுள்ளார் ‘உயிரைத் துறப்பதற்கு முன்னர் ஈழம் மலர்வதைக் காண்பேன்’ என்று.

இதற்கு மேல் நாம் அதிகம் விளக்கத் தேவையில்லை. உங்களுக்குச் சிரிப்பு வந்திருக்கும். அல்லது இதெல்லாம் என்ன பெரிய விசயங்கள் என்று நீங்கள் தூக்கிப் போட்டுவிட்டு உங்களுடைய வேலைகளைப் பார்க்கப்போய்விடுவீர்கள்.

ஆனால், இந்தப் பேச்சையெல்லாம் யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகளும் பெரும்பாலான ஈழத்தமிழ் இணையங்களும் பிரதான செய்திகளாக்கிப் பிரசுரித்து வருகின்றன. இதற்குத் தனியாக ஆசிரிய தலையங்கள் கூட எழுதப்படுகின்றன. அதிலும் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் பத்திரிகை ஒன்று ரீ.ஆர்.பாலுவின் செய்தியை தலைப்புச் செய்தியாக்கி அவரைக் கௌரவித்தேயிருக்கிறது. கருணாநிதியின் செய்திக்குக் கட்டம் கட்டப்பட்டு, கவனக் குவிப்பைச் செய்திருக்கிறது.

ஆகவே இதையெல்லாம் எளிதில் நீங்கள் கருதி விட முடியாது. நகைச்சுவையான விசயங்களுக்கு இத்தகைய முக்கியத்துவத்தை வழங்கும் இந்த ஊடகக் கலாச்சாரம் வளர்ந்தால் அரசியல் ரீதியாகப் பின்னடைவில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்குச் சற்று றிலாக்ஸாக இருக்கும்.

தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் ஈழத்தமிழரின் விசயத்தில் அல்லது இலங்கை இனப்பிரச்சினையின் விசயத்தில் இந்த மாதிரி நகைச்சுவையாகவே நடந்து கொள்வதுண்டு.

இதில் ஈழ ஆதரவுச் சக்திகள், எதிர்ப்புச் சக்திகள், ஆட்சி அதிகாரத்திலிருப்போர், ஆட்சியை விட்டு இறங்கியோர் என்ற பேதங்களெல்லாம் இருப்பதில்லை. சீமான், வை.கோ, நெடுமாறன், சுப்பிரமணியம் சுவாமி, திருமாவளவன், ஜெயலலிதா, மு.கருணாநிதி, சோ என்று யாரும் விலக்கில்லை. எல்லோரும் ஒரே மாதிரியே கதைக்கிறார்கள். அல்லது ஒரே விதமாகவே நடந்து கொள்கிறார்கள். உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் வெகு தொலைவிலேயே இவர்கள் இருக்கிறார்கள்.

இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்க்கும் உபாயங்களைக் குறித்து இலங்கையர்களுக்கே இன்னும் தெளிவில்லை. அதிலும் ஈழத்தமிழர்களே இந்த விசயத்தில் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் தடக்குப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆளுக்கொரு கட்சி, கட்சிக்கொரு தலைவர் என்றெல்லாம் இருந்துங்கூட ஒரு வழிமுறையைக் கண்டு பிடிப்பதற்கு முடியாமலே இருக்கின்றனர். இந்த நிலையில் வெளியே – பிரச்சினைக்கும் அதனுடைய வலிக்கும் அப்பால் நின்று கொண்டே மருந்தைக் கண்டு பிடிக்க முண்டியடிக்கும் இந்த மருத்துவர்களை என்னவென்பது?

முதலில் ஒரு விசயத்தைப் பார்ப்போம்.

தமிழகத்தில் ஏராளம் பிரச்சினைகள் இருக்கின்றன. கூடங்குளம் அணுமின்னிலையம் பற்றிய விவகாரம். காவேரி நீர்ப்பிரச்சினை, முல்லைப்பெரியாறுப் பிரச்சினை, சீரான மின் வினியோகம்…. என ஆயிரம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள்.

இதைவிட தமிழக மீனவர்களால் ஈழத்தமிழ் மீனவர்கள் பாதிக்கின்ற தலையாய பிரச்சினை வேறு இருக்கிறது. இதையெல்லாம் இவர்கள் தீர்ப்பதற்கு முயற்சிப்பதில்லை. இவற்றை இவர்கள் தீர்க்க வேண்டும். இவர்கள்தான் இவற்றுக்குத் தீர்வு காணவும் வேணும்.

ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு கடந்த முப்பது ஆண்டுகளாக மாறிமாறி சீசனுக்குத் தக்கமாதிரி சுவரொட்டி விளம்பர வைத்தியம் பார்க்க முயற்சிக்கிறார்கள்.

இப்பொழுது தனித்தமிழ் ஈழத்துக்காக ஆதரவைத் தேடும் தி.மு.க. அல்லது அதனுடைய தலைவர்கள் தங்களுடைய ஆட்சிக்காலத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

தி.மு.க. ஆட்சியிலிருந்தபோதே – தி.மு.க. பங்கேற்ற கூட்டரசு டில்லியில் ஆட்சியிலிருந்தபோதே ஈழப்போரின் இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள்.

அப்பொழுது இதற்கெதிராக இந்தியா தலையிட்டு இந்தப் பலியைத் தடுப்பதற்கு தி.மு.கவினால் முடியாமற் போய்விட்டது. அல்லது இந்தியாவைக் கொண்டு ஐ.நா. மூலம் இந்தப் பலியை தடுக்க அதனால் முடியவில்லை.

அந்த நாட்களில் திரு. மு. கருணாநிதியும் அவருடைய கட்சியும் அவருடைய குடும்பத்தினரும் ஆடிய நாடகங்களை எல்லாம் இந்த உலகமே அறியும்.

இந்தப் படுகொலைக்கெதிராக அவருடைய கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூடப் பதவியைத் துறக்கவில்லை. அப்போது அவருடைய செல்ல மகள் கனிமொழி கூட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

யுத்தம் முடிந்த பிறகு, இலங்கை அரசு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்தபோது அந்தக் குழுவில் இதே ரீ.ஆர்.பாலுவும் இதே கனிமொழியும் கூட வந்திருந்தார்கள். (அந்தக் குழுவில் திருமாவளவனும் வந்திருந்தார்).

வந்தவர்கள் யாழ்ப்பாணத்துக்கு, வவுனியாவில் இருந்த அகதிகளின் முகாம்களுக்கு எல்லாம் விஜயம் செய்திருந்தார்கள்.

வந்தவர்களிடம் கண்ணீர்மல்க, உருக்கமான வேண்டுகோள்களை ஈழத்தமிழர்கள் விடுத்தனர். எதற்காக? உணர்வாலும் உறவினாலும் தொடர்புள்ளவர்கள் என்ற காரணத்திற்காகவே.

ஆனால், என்ன நடந்தது?

இதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது ஈழம் மலர்வதைப் பற்றிக் கதைக்கிறார்கள்.”கூரை ஏறிக் கோழி பிடிக்க மாட்டாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்” என்று சும்மாவா சொன்னார்கள்.

தி.மு.க. நடந்து கொண்ட முறைகள் தொடர்பாக திரு. மு. கருணாநிதியிடம் மதிப்பும் மரியாதையும் தொடர்பும் உள்ள ஈழத்தமிழர் ஒருவர் – நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் அவர், அந்த நாட்களில் தன்னுடைய அதிருப்தி கலந்த கவலைகளை வெளியிட்டபோது கருணாநிதி அவருக்குச் சொன்னாராம், ‘ஈழத்தில் படுகொலை நடந்தபோது அங்கே இருந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் அரசியற் தலைவர்களும் ஏன் பதவிகளைத் துறக்கவில்லை? நீங்கள் அதனைப் பற்றிக் கேட்டுவிட்டு பிறகு என்னிடம் இதைப் பற்றிக் கேளுங்கள்’ என்று.

ஆகவே, ஈழத்தமிழர் சிந்திய கண்ணீரையும் செந்நீரையும் அவர்களுடைய உருக்கமான குரல்களையும் அரசியல் ஆதாயமாக்கியதே தி.மு.க செய்த வேலை. இந்த வேலையைத்தான் தமிழகத்தின் பிற தரப்பினரும் செய்கிறார்கள்.

மனச்சாட்சிக்கும் வெட்கத்துக்கும் அப்பால் இந்தக் காரியங்களை அவர்கள் செய்கின்றனர். இதுதான் இங்கே கவனத்திற்குரியது@ பெரும்பாலான ஈழத்தமிழர்களின் வேதனைக்குரியது.

ஈழத்தமிழர்களுடைய துயரங்களைத் துடைப்பதற்கும் அவர்களுக்காக ஆதரவாக இருப்பதற்கும் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் தமிழக அரசும் அங்குள்ள கட்சிகளும் தலைவர்களும் தொண்டர்களும் விசுவாசமாகவும் புத்திபூர்வமாகவும் இயங்கினால் அதனை முழுமனதோடு வரவேற்பதில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இல்லை. கேள்விகளும் இல்லை.

ஆனால், இவர்கள் எல்லாம் இலங்கை அரசின் இனவாத அணுகுமுறைக்கு மேலும் உதவுகிறார்கள் என்பதே இங்கே கவனிக்க வேண்டியது.

தமிழகத் தலைவர்களின் வீராவேச முழக்கங்களையெல்லாம் சிங்கள இனவாதத் தலைவர்களும் ஊடகங்களும் பெரு மகிழ்ச்சியோடும் மனம் நிறைந்த புன்னகையோடும் வரவேற்கிறார்கள்.

தமிழகத்தில் வீர முழக்கங்கள் நிகழ நிகழ அது சிங்கள இனவாதத்தை மேலும் தீவிரப்படுத்தி வளர்ப்பதற்கான உரமாகவே மாறுகிறது. சிங்கள மக்களை இனவாத மயப்படுத்துவதற்கு – சிங்கள மக்களுக்கு எதிரான தமிழ்ச் சக்திகளின் செயற்பாடுகளின் அபாய நடவடிக்கைகள் எனச் சிங்கள இனவாதச் சக்திகள் ஆதாரப்படுத்துவதற்கு இவை தாராளமாக உதவுகின்றன.

தமிழகக் கட்சிகளின் வீர முழக்கங்கள் தமிழ் நாட்டு மக்களிடையே அவற்றுக்குத் தாராளமான ஆதரவைப் பெற்றுக் கொடுக்கின்றன.

அதைப்போல இலங்கையில் சிங்கள இனவாதக் கட்சிகளுக்கும் இனவாதத்தின் அடிப்படையில் செயற்படுவதற்கான தளத்தைத் தாராளமாக வழங்குகின்றன. இந்தச் செய்திகளைப் பிரசுரிக்கின்ற ஈழத்தமிழ் ஊடகங்களும் பிழைத்துக் கொண்டு விடுகின்றன. ஆனால், ஈழத்தமிழர்களின் நிலையோ மிகமிக நெருக்கடிக்குள்ளாகிறது.

பூனைக்கு விளையாட்டு எலிக்குச் சீவன் போகிறது என்று சொல்வார்கள். ஏறக்குறைய அந்த நிலையில்தான் ஈழத்தமிழர்களுக்கான தமிழகத்தலைவர்களின் ஆதரவுக்குரல்கள்(?) இருக்கின்றன. மெய்யான அர்த்தத்தில் இந்தக் குரல்கள் எதிர்க்குரல்களே.

இவர்களைப் பொறுத்தவரையில் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்படவே கூடாது. அது ஒரு சுவையான பண்டமாக – தமது அரசியற் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதற்கு எப்போதும் இருக்க வேண்டும்.

நாம் முன்னர் ஒரு பத்தியிற் குறிப்பிட்டதைப்போல ‘இரத்தத்திற் தோய்த்தெடுக்கப்படும் இறைச்சி’ யாக ஈழத்தமிழருடைய துயரங்களும் பிரச்சினைகளும் அவர்களுக்கு உள்ளது.

கருணாநிதி பல சினிமாக்களுக்கு வசனம் எழுதிப் பேர் எடுத்தவர். ‘பஞ்ச் டயலாக்’ மூலம் தொண்டர்களையும் அபிமானிகளையும் மயக்கி வைத்திருப்பவர். அதற்கெனவே ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி வெற்றி கண்டவர்கள்.

ஆனால் அவர் பிறத்தியாரின் கண்ணீரில் சுவை காணக்கூடாது. இது அவருக்கு மட்டுமல்ல வரலாற்றுக்கு எதிராகச் சிந்திக்கும் அனைவருக்கும் பொதுவானது. பெருந்தக் கூடியது.

இறுதியாக ஒரு விசயம் – தான் உயிர் துறப்பதற்கு முன்னர் தமிழீழம் மலர்வதைக் காண்பேன் என்று கருணாநிதி சொன்னதற்குக் காரணம், தன்னுடைய ஆயுட்காலத்தை மேலும் நீடிப்பதற்கான அவருடைய விருப்பமே என்று சொல்லிச் சிரிக்க வைக்கிறார் நண்பர் ஒருவர்.

விட்ட இடத்திலிருந்து…
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி தவிர்க்க இயலாதது என்பதை 2006இல் போர் மீண்டும் தொடங்கி ஓராண்டிற்குள் பலர் விளங்கிக் கொண்டனர். எனினும் எல்லாராலும் எண்ணங்களை வெளிவெளியாகக் கூற இயலவில்லை. அக் கருத்தை முன்வைப்பது விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தும் என்பது சிலருடைய காரணமாயிருந்தது. அது அரசாங்கத்தின் போர் முனைப்பை ஊக்குவிக்கும் என்பது வேறு சிலருடைய கவலையாயிருந்தது.

எனினும், விடுதலைப் புலிகள் தோல்விக்குப் பின் தோல்வியைச் சந்திக்கத் தொடங்கிய 2006ன் பிற்பகுதியை அடுத்தும், புலிகள் வென்றுகொண்டே இருப்பதாகச் சொன்னவர்கள் விடுதலைப் புலிகளின் இறுதிக்கட்டம் வரை அதே கதையையே சொல்லி வந்தார்கள். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மக்கள் என்ன எதிர்பார்ப்பில் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து முல்லைத்தீவுக்குப் பின் வாங்கினார்கள் என்பதற்கு ஒற்றை விளக்கம் இருக்குமென நான் நம்பவில்லை. ஆனால் அவர்களைத் தமது கொலைக் களத்திற்கும் முட்கம்பிச் சிறைவாழ்வுக்கும் இட்டுச் சென்ற குற்றத்தில் விடுதலைப் புலிகளினளவுக்கு புலிகளுடைய ஆதரவாளர்களுக்கும் புலிகளை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்களுக்கும் பெரும் பங்குண்டு.

விடுதலைப் புலிகள் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளையும் உயிரிழப்புக்களையும் பற்றிக் காட்டிய அக்கறையீனத்தைக் கடுமையாக விமர்சிக்க வேண்டியுள்ளது. அதேவேளை, புலிகளைக் கண்மூடித்தனமாக எதிர்த்தோர், புலிகளின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து ஒரே காரணத்திற்காக, அரசாங்கத்தால் அம் மக்களுக்கு நேர்ந்த துன்பங்களையும் அழிவுகளையும் பற்றி மிக அசட்டையாகவே இருந்தனர் என்பதையும் மறுக்க இயலாது.

எனவே, போரின் இறுதியாண்டின் போது, புலிகளும் அரசாங்கமும் புலிகளின் ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பாளர்களும் மக்களுடைய நலன் களைப் பற்றி எதுவிதமான அக்கறையையும் காட்டியதாகக் கூற இடம் இல்லை. போர் முடிந்த பின்பிருந்து வெளிப்படுத்தப்பட்டு வருகிற அக்கறை களும் அரசியற் செயற்பாடுகளும் அதை உறுதிப்படுத்துகின்றன. இன்றும், இலங்கை அரசாங்கத்தின் மீதான போர்க் குற்றங்களை விசாரிப்பதைப் பற்றிய தீவிர நிலைப்பாடுகள் அனைத்துமே அரசாங்கத்தைப் பழி வாங்குவதையோ விடுதலைப் புலிகளைப் பழி தீர்ப்பதையோ பற்றிக் கவனங் காட்டுமளவுக்குப் போராற் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிய எவ்வித அக்கறையையுங் காட்டுவதாகக் கூற இயலாது.

இவற்றிடையே, இன்னமும் கவனத்திற்குரிய உள்ள விடயம் ஒன்றுள்ளது. 1987 முதல் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி வரை, விடுதலைப் புலிகளை மையப்படுத்தியே தமிழ்த் தேசியத்தின் அரசியற் பரப்பில் விவாதங்கள் பொதுவாக நிகழ்ந்து வந்துள்ளன என்பதுடன் இன்றும் அதே போக்கையே காண முடிகிறது. இப்போக்கு புலம் பெயர்ந்தோரிடையே வலுவாகவும் வெளிவெளியாகவும் காணப்படும் அதே வேளை, இலங்கையில் அது மறைமுகமாகத் தொடருகிறது.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தைத் தமிழீழக் கோரிக்கையுடன் சமன்படுத்துகிற தன்மை தமிழீழப் பிரகடனத்துடன் தொடங்கி ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியுடன் வலுப்பட்டது. என்றைக்கு விடுதலைப் புலிகள் தம்மையே ஆயதப் போராட்டத்தின் தலையாய சக்தியாக நிலை நிறுத்தினரோ அன்று முதல் அச் சமன்பாடு விடுதலைப் புலிகளை விடுதலைப் போராட்டத்துடன் சமப்படுத்துகிற திசையில் நகரத் தொடங்கிவிட்டது. அதை இயலுமாக்குவதில் விடுதலைப் புலிகளின் வன் முறை அரசியலும் சனநாயக விரோதச் செயற்பாடுகளும் முக்கியமான பங்கு வகித்தன என்பதில் ஐயமில்லை. அதே அளவுக்கு இந்திய, இலங்கை அரசாங்கங்களைச் சார்ந்து பிற போராளிக் குழுக்களின் பலவும் செயற் பட்டமையும் விடுதலைப் புலிகளை முக்கியப்படுத்த உதவின.

மேற்கூறிய நிகழ்வுகளில் எதுவுமே தமிழ் மக்களின் விடுதலைக்குச் சாதகமான ஒரு சூழலை உருவாக்கவில்லை என்பது இப்போது பலருக்கும் தெளிவாகி இருக்க வேண்டும். அந்த ஆபத்தை உணர்ந்தவர்கள் வாய் திறக்க இயலாத விதமாகப் பலவலாறான நெருக்குவாரங்கள் இருந்து வந்துள்ளன. அதைப் பற்றி எவரும் வாய்திறக்கும் போதெல்லாம் புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்கிற விதமாக முத்திரை குத்திக் கருத்துக்களை முடக்கும் முயற்சிகளை நாம் பல சூழல்களிலும் கண்டுள்ளோம்.

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்பும், புலிகளையே மையப்படுத்திக், கருத்துக்களையும் அவற்றுக்குரியயோரையும் புலிகளை ஆதரித்தோர் அல்லது எதிர்த்தோர் என்றவாறு அடையாளப்படுத்தி அதையே அளவு கோலாக்கிக் கருத்துக்களை ஏற்பதும் எதிர்ப்பதும் தொடருகிறது. இதற்கான காரணங்கள் எவையாயினும், கடந்த கால் நூற்றாண்டுக் காலத் தமிழ் தேசிய அரசியலில் புலிகளின் ஆதிக்கத்தின் தாக்கத்திலிருந்த தமிழ்த் தேசிய இனம் விடுபடுவது எளிதல்ல என்பது மட்டும் தெளிவு.

எனவே, தமிழ்த் தேசியத்தின் எதிர்காலமும் தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலமும் பற்றிய தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்குக் கடந்த காலம் பற்றிய தெளிவான புரிதல் தேவை என்பதையும் விடுதலைப் புலிகளைப் பற்றிய விவாதங்கள் தவிர்க்க இயலாதன என்ப தையும் ஏற்க வேண்டியவர்களாக நாம் உள்ளோம். நமக்கு முன்னாலுள்ள பல சவால்களில் அனைத்தையுமே விடுதலைப் புலிகளின் சாதனைகளாக வோ மாறாக அவர்களது குற்றங்களாகவோ நோக்குகிற தன்மையினின்று விடுபடுவது முக்கியமானது. விடுதலைப் புலிகள் போராட்டத்தின் மையச் சக்தியாக இயலுமாக்கிய அகக் காரணிகளையும் புறக் காரணிகளையும் விளங்கிக் கொள்வது முக்கியமானது. தேசியம், சுயநிர்ணயம், தேசிய இன விடுதலை என்பன பற்றிய நமது புரிதல்களைச் செம்மைப்படுத்துவது முக்கிய மானது. தமிழ் மக்களின் விடுதலை எவ்வாறு இலங்கையின் பிற தேசிய இனங்களின் விடுதலையின்று பிரிக்க இயலாததாக உள்ளது என்பதை ஆராய்வது முக்கியமானது. தமிழ் மக்களின் விடுதலைக்குப் பிராந்திய அரசியலுடனும் சர்வதேச அரசியலுடனும் இருக்கக் கூடிய உறவுகளை விளங்கிக் கொள்ளுவது முக்கியமானது. இவற்றைக் கொஞ்சம் மேலோட்ட மாகவேனும் நோக்கும்போது, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பிற விடுதலைப் போராட்டங்களினின்றும் தன்னை மிகவும் தனிமைப்படுத்திக் கொண்டமையை நாம் உணர இயலுமாக இருக்குமென நம்புகிறேன்.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான பலவீனங்களென —மூர்க்கத்தனமான, நேர்மையற்ற நியாயப்படுத்தல்களைத் தவிர்ப்போமாயின்— இன்று ஓரளவேனும் பலராலும் ஏற்கப்படுவன, புலிகளின் சனநாயகமின்மை, முற்றிலும் இராணுவத் தன்மையுடைய போராட்ட அணுகுமுறை என்பனவாகும். அதேவேளை, அவற்றைத் தோற்றுவித்து உருவாக்குவதில் தமிழரசுக் கட்சிக்கும் அதன் மறு அவதாரமான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் ஒரு பங்கு இருந்தது. தமிழ்த் தேசிய அரசியலின் முக்கிய அடையாளங்களாக இருந்து வந்துள்ள ‘தனிப்பெரும் தலைவர்’ ‘ஏகப் பிரதிநிதித்துவம்’ ‘இன ஒற்றுமை’ என்ற கருத்தாக்கங்கள் விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு மிக முந்தியன. மாற்று அரசியல் ஒன்று உருவாவதற்கெதிராகப் பழமைவாதம் ‘தமிழர் ஒற்றுமை’ என்ற கருவி யைப் பலவாறாகவும் பயன்படுத்தி வந்துள்ளது. அதன் விளைவாக, மக்கள் அரசியல் என்ற கருத்தாக்கம் தமிழ் அரசியற் பரப்பில் வேரூன்றத் தவறியது. அதை விடவும் சாதி, பால், பிரதேசம் என்பன சார்ந்த முரண்பாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அப் பிரச்சினைகளை இல்லை என மறுப்பதுடன் அவற்றைப் பற்றிப் பேசுவது தமிழ் மக்களைப் பிளவு படுத்தும் என வாதிப்பதும் தமிழ்த் தேசியவாதிகட்கு வழமையாகிவிட்டது. அவற்றை மறுத்ததால் அவை இல்லாமற் போய்விடவில்லை. இன்று அவை முன்பு நாம் அறிந்திருந்த அதேயளவு உக்கிரத்துடன் தொடருவதை நாம் அறிவோம். அதைவிட முக்கியமாகச் சுரண்டும் வர்க்கத்தின் தேசியத் தன்மை எத்தகையது என்பதைப் போருக்கு பிந்திய சூழல் நமக்குத் தெளிவாக்கியுள்ளது. வசதிபடைத்த யாரெவரெல்லாம் புலிகள் வென்று கொண்டிருப்பதாக நம்பிப் புலிகளுக்குச் சார்பாக நடந்து கொண்டார்களோ அவர்கலெல்லாரும் இப்போது ஆட்சியாளர்களுடன் தம்மை நெருங்கிக் கொண்டிருப்பதை நான் காணுகிறோம்.

எனவே, ஒரு தேசிய இனத்தின் விடுதலையை அதன் அக முரண் பாடுகளைப் புறக்கணித்து வெற்றிகரமாக முன்னெடுக்க இயலாது என நாம் உணரலாம். தேசியத்தினுட் செயற்பாடும் உயர் வர்க்க, சாதிய, ஆணாதிக்க, பிரதேச மேலாதிக்கச் சிந்தனைகள் சரிவரக் கையாளப்படாத போது, அவை ஏற்படுத்தும் விளைவுகள் போராட்டத்தை மட்டுமன்றித் தேசிய இன அடையா ளத்தையும் கடுமையாகப் பாதிக்க இயலும் என்பது நம் கவனத்துக்குரியது. ‘தலித் தேசியம்’ ‘இரட்டைத் தேசியம்’ என்பன போன்ற குழறுபடியான சிந்தனைகளைச் சிலர் வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையும் பிரதேச அடிப்படையிலான பிளவும் ஏன் ஏற்பட்டன என்பது நம் கவனத்திற்குரியது. இன்று தமிழரிடையே உள்ள பெண்ணியம், வசதி படைத்த பெண்களின் அக்கறைகளை முதன்மைப்படுத்துவது மட்டுமன்றித் தேசிய விடுதலை நோக்கை நிராகரிப்பதாக அமைவது ஏன் என்பது நம் கவனத்துக்குரியது. அதற்கும் அப்பால் விடுதலைப் புலிகளின் போரின் போது தமது உயிர்களை ஈந்தோரும் வேறு பலவாறான தியாகங்களைச் செய்தோரும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளுமே. அவர்களது வர்க்கப் பின்னணியைச் சேர்ந்தோரே இன்று தமது வீடுகட்டும் நிலங்கட்கும் தொழில் கட்கும் மீள இயலாமல் அல்லற்பட்டுக் கிடப்போரிற் பெரும்பாலோராக உள்ளனர். தமிழ்த் தேசியத்தின் தலைமைகள் அனைத்தும் அவர்களின் நலன் பற்றிய அக்கறையே இல்லாமல் இருப்பதை நாம் காணுகிறோம். எனவே மக்கள் பற்றிய உண்மையான அக்கறையற்ற தேசிய இன விடுதலை அமைப்பு எதுவும் கோருகிற தனிநாடோ இன விடுதலையோ யாருடைய நன்மைக்கானது என்பதை நாம் கவனமாக ஆராய வேண்டும்.

தமிழ்த் தேசியம் இன்று ஒரு முட்டுச் சந்தில் வந்து நிற்கிறது என்பதை நாம் உணராவிட்டால், 2009 மே 17 வரை, விடுதலைப் புலிகள் தோற்க மாட்டார்கள் என்று நம்பியவர்களையும் விட மோசமான மனநிலையில் இருப்போராவோம். அந்த அவலத்துக்கான காரணங்களை விடுதலைப் புலிகளுக்குள் மட்டும் தேடுவோமாயின், நாம் ஒரு அரசியல் அந்தகாரத் துக்குள் நமது தேடலை நடத்துவோராவோம்.

தமிழ்த் தேசியத்தின் இன்றைய அவலத்துக்கான காரணங்கள், அது எந்த வர்க்க நலன்களைச் சார்ந்து எவ்வாறு வரையறுக்கப்பட்டது என்ற கேள்விக்கான விடைகளை ஆராயும் போதே தெளிவாகும் என்பது என்னுடைய மதிப்பீடு.

தமிழ்த் தேசியம் தனக்குள் முஸ்லிம்களையும் மலையகத் தமிழரையும் உள்ளடக்க முற்பட்ட நோக்கமும் அத் தேசிய இனங்களது இருப்பும் நலன்களும் பற்றிக் கொண்டிருந்த பார்வைகளும் தேசியம் பற்றிய புரிதலின் போதாமையின் விளைவானவையாக அல்லாது, ஒரு மேலாதிக்கச் சிந்தனை யின் வெளிப்பாடுகள் என்பது என்னுடைய கருத்து. அச் சிந்தனையின் பயனாகவே இன்றுவரை தமிழ்த் தேசியம் தன்னை ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனமாக அடையாயங் காணுவதைத் தவிர்த்து வந்துள்ளது என நினைக்கி றேன். அத்துடன் இன்னமும் இஸ்ரேலை முன் மாதிரியாக நோக்குகிற ஒரு போக்குத் தொடர்வதற்கும் அதையே விளக்கமாகக் காணுகிறேன்.

மேற்கூறிய முடிச்சுக்களை அவிழ்க்கும் போது, தமிழ்த் தேசியம் தனது அக முரண்பாடுகளைப் பற்றி அக்கறை காட்டத் தவறியது ஏன் என்பது முதலாக அந்நிய வல்லரசுகளையே சார்ந்திருக்க முயலுவது வரையிலான காரணங்களும் புலனாக இடமுண்டு. அவற்றையொட்டித் தமிழ்த் தேசியத் தலைமைகள் பிற தேசிய இன ஒடுக்கல்களும் போராட்டங்களும் பற்றி இதுவரை மேற்கொண்டு வந்த நிலைப்பாடுகளின் காரணங்களை விளங்கி யறிய வாய்ப்புண்டு.

எனவே, தமிழ் தேசியமும் தமிழீழக் கோரிக்கையும் விடுதலைப் போராட்டப் பாதையும் பற்றிய நமது விசாரணைகளை அடிப்படைகளிலிருந்து தொடக்க வேண்டும் என நினைக்கிறேன். சில கேள்விகளுடன் அந்த விசாரணையை நாம் தொடங்கித் தொடரலாம்.

தமிழ்த் தேசிய இனம், தமிழ்த் தேசம் என்பவற்றைப் பற்றிய நமது வரலாற்று விளக்கங்கள் நம்பகமானவையா?

தமிழ்த் தேசிய இனத்தை அடையாளப்படுத்தும் பண்புகள் எவை?

தமிழ்த் தேசிய இனத்திற்குரிய தேவை பிரிவினையா, சுய நிர்ணயமா?

பிரிவினையாயின் அதற்குரிய சாத்தியப்பாடுகள் எவ்வாறானவையாக இருந்தன?

அவை இனி எவ்வாறு அமையக்கூடும்? அதை இயலுமாக்கும் நேச சக்திகள் எவை?

சுயநிர்ணயமாயின் அதற்கான சாத்தியப்பாடுகள் எவை?

தமிழ்த் தேசிய இனம் மட்டுமே தனித்து நின்று போராடிச் சுய நிர்ணயத்தை வெல்ல இயலுமா? அதற்கான நேச சக்திகள் உள்ளனவா? அவை யாவை?

இப்போது சுயநிர்ணயத்தை ஏற்க மறுப்பவர்களைப் பகைமையுடன் நோக்கலாகுமா?

அவர்களை வென்றெடுக்க வாய்ப்புக்கள் உள்ளனவா? வெல்வதற்கு உதவக்கூடிய நேச சக்திகள் எவை?

எந்தச் சூழ்நிலையிலும் அந்நியக் குறுக்கீடுகளின் நோக்கங்கள் எவ்வாறு இருந்தன? அந்நியக் குறுக்கீடுகளால் நன்மை கிட்டியுள்ளதா? உலக நாடுகள் கூறும் பாடங்கள் என்ன?

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கட்கு உதவக் கூடிய அந்நிய சக்திகள் உள்ளனவா? அவை ஆளும் வர்க்கங்களா, வல்லரசுகளா அல்லது தமது உரிமைகட்க்காகப் போராடும் மக்கள் இயக்கங்களா?

நமக்கான சர்வதேச ஆதரவை வெல்வதற்காக நாம் நம்முடைய பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே பேசுவது போதுமானதா?

பிறருடைய நியாயமான கோரிக்கைகளைப் பற்றி நாம் அக்கறை காட்டும் தேவை உள்ளதா? இருப்பின் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம்?

முஸ்லிம்களையும் மலையகத் தமிழரையும் தனித்துவமான தேசிய இனங்களாக நாம் ஏற்கிறோமா?

ஏற்கிறோமெனின், அவர்களது உரிமைப் போராட்டங்களை நம்முடையதுடன் இணைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா? அவ்வாறான வாய்ப்புக்களை ஏற்படுத்துவது எவ்வாறு?

சிங்களப் பேரினவாதம் என்பது அனைத்து சிங்கள மக்களுக்கும் உரியதா?

அப்படியாயின் அதை வெல்லுவது எப்படி?

சிங்களப் பேரினவாதத்தால் அனைத்துச் சிங்கள மக்களது நலன்களையும் பேண இயலாது என நாம் ஏற்போமானால், அந்த முரண்பாட்டைக் கையாளுவது எவ்வாறு?

சிங்கள மக்களிடையே பேரினவாதம் வலுவாக உள்ளதன் காரணங்கள் எவை?

அதற்குத் தமிழ்த் தேசிய வாதம் பங்களித்துள்ளதா?

எவ்வாறாயினும் சிங்கள மக்களிடையே பேரினவாதத்தைப் பலவீனப்படுத்தத் தமிழ்த் தேசியம் செய்ய இயலுமானது என்ன?

தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவது பற்றிப் எப்போதுமே பேசப்பட்டு வருகிறது. அந்த ஐக்கியத்தை எந்த அடிப்படையில் இயலுமாக்க முடியும்?

இதுவரையிலான தோல்விக்கான காரணங்கள் எவை? அவற்றைத் தவிர்ப்பது எவ்வாறு?

அரசின் ஆயுத அடக்குமுறைக்கு எதிராக ஆயதப் போராட்டம் தேவையா?தேவையாயின் அப் போராட்டம் எப்படிப்பட்டதாக அமைய முடியும்? அப் பொறுப்பை யார் ஏற்பது? இதுவரையிலான அணுகுமுறை செல்லுமா? இல்லையெனின் மாற்று வழி என்ன?

மேற்கூறியவாறான வினாக்களுக்குத் தெளிவான விடைகளை நாம் நேர்மையான முறையில் வந்தடைவோமானால், விவாதங்கள் விடுதலைப் புலிகளின்றும் விலகி போராட்டத்தின் எதிர்காலத்தைப் பற்றிய திசையில் ஆக்கமான முறையில் நகரத் தொடங்கும். குறிப்பாகச் சொன்னால், நடந்து முடிந்த அவலத்தின் காரணங்களை வெறுமனே தந்திரோபாயங்களும் நடைமுறைத் தவறுகளும் பற்றியதாக ஆராயாமல் அடிப்படைகளிலிருந்து தேடி அறிய வாய்ப்பிருக்கும்.

எந்த தவற்றையும் திருத்துவதும் தவறான நிலைப்பாடுகளை நிராகரிப் பதும் எந்தவொரு விடுதலை இயக்கத்தினதும் அடிப்படையான தேவை யாகும். எனவே, ஒரு குறிப்பிட்ட போராட்டம் ஒரு அவலமான முடிவை வந்தடையும் போது, நிகழ்ந்திருக்கக் கூடிய அனைத்துத் தவறுகளும் அடிப்படையிலிருந்து விசாரித்தறியப்பட வேண்டும்.

பல புதிய அமைப்புக்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளில் உருவாகியுள்ளன. எனினும் சில அமைப்புக்கள் தமிழ்த் தேசியம் பற்றிய அடிப்படையான சில வினாக்களை எழுப்பத் தயங்குகின்றன. சுயநிர்ணயத் தைப் பற்றிப் பேசும் போது பிரிவினைக் கோரிக்கையை முதன்மைப்படுத்து கின்றன. இடதுசாரிகளைப் பற்றிய பழமைவாத வாய்ப்பாடுகளை ஒப்பிக் கின்றன. இத்தகைய அணுகுமுறைகள் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை மீண்டும் படுகுழியில் தள்ள முனைவோருக்கே உதவும்.

விடுதலைப் புலிகளைப் பற்றிய அகச்சார்பான விமர்சனங்கள் பலரைக் கண்மூடித்தனமான புலி எதிர்ப்பிற்கும் அதன் பயனாக இலங்கை அரசாங்க ஆதரவு நிலைப்பாட்டுக்குள்ளும் தள்ளி விட்டுள்ளது. அவ்வாறே புலிகளின் நடத்தையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களும் சில சமயங்களில் பிரச்சனைகளைப் பல கோணங்களிலும் இருந்து பார்க்கத் தவறுகின்றனர்.

இயக்கங்களிடையிலான மோதல்களும் முரண்பாடுகளும் காரணமாக ஏற்பட்ட கசப்புணர்வுகளும் பலரைக் குறிப்பான சில நிகழ்வுகட்கு முக்கியத் துவம் வழங்கி முழுமையான சித்திரத்தைத் தவறவிடுமாறு தூண்டுகின்றன.

எனவே விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்பான மீள்பார்வைகள், புலிகளின் தவறுகள் என்றும் குறிப்பிட்ட இயக்கங்களின் தவறுகள் என்றும் சம்பவங்கள் பற்றிய விமர்சனத்துடன் நின்றுவிடாது, அனைத்துத் தவறுகட்கும் காரணமாக இருந்திருக்கக் கூடிய கோட்பாட்டுப் பிரச்சினைகள் பற்றியும் பொதுவான நடைமுறை பற்றியும் கூடிய கவனங்காட்ட வேண்டியுள்ளது.

நம்மைத் தவறுகட்கு அப்பாற்பட்டோராக மனதிற்கொண்டு நேர்மையான விசாரணைகளை நடத்துவது கடினம் என்பதைப் பற்றியும் நாம் கவனத்துடன் இருப்பது நல்லது. அல்லாவிடின் எல்லாவற்றிற்கும் பிறர் மீது பழியைப் போடுகிற ஒரு போக்கிற்கு நாம் இரையாக வாய்ப்பு அதிகம்.

“மே 19 என்பது முடிவல்ல, புதிய தொடக்கம்” என்பவர்கள் உள்ளனர். எந்தத் தொடக்கமும் முந்திய பயணங்களின் அனுபவங்களியிருந்து முழுமையாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் கடமை நம் எல்லாருக்கும் உள்ளது. ஏனெனில் இதுவரை நாம் சுட்டிக் காட்டத் தயங்கியவற்றுக்காக் கொடுக்கப்பட்ட விலை மிக அதிகம்.

-சி.சிவசேகரம்-

நன்றி:செம்பதாகை-இதழ்13

ஈழத் தமிழர் அரசியல் சமூகத்தை வரலாறு குற்றவாளிக் கூண்டில் நிறுத்துமா?
மனந்திறந்து பேசுவோமே – 6

ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் தற்போதய காலகட்டத்தில் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து ஈழத் தமிழர் அரசியல் சமூகத்திடம் இதுவரை ஏற்படவில்லை. இவை தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஈழத்தமிழர் தேசம் நாடுகடந்த ஒரு தேசமாகவும் இதன் அரசியல் நாடு கடந்த அரசியலாகவும் முகிழ்த்திருக்கும் ஒரு சூழலில் தாயகத்திலும் புலத்திலும் இயங்கும் அரசியல் அமைப்புக்களையும் செயற்பாட்டாளர்களையும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் சமூகம் என இப்பத்தி விளிக்கிறது.

இந்த அரசியல் சமூகத்தின் மத்தியில் வேறுபாடுகள் இருந்தாலும் தோழமையுணர்வுடனான உரையாடல் ஊடாக ஒரு வகையான புரிந்துணர்வுக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் இன்னும் அற்றுப்போய்விடவில்லை. ஒவ்வொரு அரசியல் அமைப்பும் காலத்தின் தேவை கருதி ஏகபோக மனப்பான்மை தவிர்த்து ஒருவரை ஒருவர் மதித்து தமக்கிடையிலான உரையாடல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஆனால் இத்தகைய உரையாடல்களை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது தொடர்பான ஒரு பொதுத்தளம் ஒன்றை இனங்காண்பது உரையாடல் தொடர்பான சிந்தனைகளை வளர்ப்பதற்கு உதவக்கூடியது.

ஈழத்தமிழர் ஒரு தேசமா அல்லது ஒரு தேசிய இனமா? ஈழத்தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலா அல்லது அதிகாரப் பரவலாக்கலின் அடிப்படையிலா? நாடு பிரிந்த வகையில் இரண்டு அரசுகள் கொண்ட தீர்வு முறையா? அல்லது ஒரு நாடு இரு தேசங்கள் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலான தீர்வு முறையா? சிறிலங்கா அரசு தரக்கூடியதைப் பேசிப்பெறுவதா அல்லது தரமாட்டாததைக் கோரி நின்று எதுவும் அற்றுப்போவதா? அனைத்துலக சமூகத்தின் ஆதரவினை வென்றெடுக்க அவர்களது நலன்களுடன் இணைந்து போவதா அல்லது நமது நலன்கள்தான் முக்கியம் என்று கூறித் தனிமைப்பட்டு நிற்பதா?

இவை போன்ற வாதப்பிரதிவாதங்கள் ஈழத்தமிழர் அரசியல் சமூகத்தின் மத்தியில் இடம் பெற்று வருகின்றன. இத்தகைய வாதங்கள் தமிழர் தேசத்தின் அரசியலைச் செழுமைப்படுத்தவதற்கு அவசியம்தான்.

ஆனால் இவற்றையும் கடந்து தமிழர் தேச அரசியல் சமூகம் தமக்கிடையிலான ஆரோக்கியமான உரையாடல்களை மேற்கொள்ள வேண்டியது முக்கியமான ஒரு அரசியல் நாகரீகமாக அமைய வேண்டும்.

இத்தகைய உரையாடல்களை ஆரம்பிப்பதற்கான ஒரு பொதுத்தளமாக “சிறிலங்கா அரசினைப் புரிந்து கொள்ளலும் எதிர் கொள்ளலும்” என்பது அமைய முடியும் என்பது இப்பத்தியின் கருத்து.

ஏனெனில் சிறிலங்கா அரசு தொடர்பான ஒரு வரலாற்றுப் புரிதல் நமக்கிருக்கிறது. இவ் விடயத்தில் வரலாறு நமக்கு ஒரு வழிகாட்டியாக இயங்கும்.

சிறிலங்கா அரசை நாம் புரிந்து கொள்வது தொடர்பான எனது கருத்துக்களை இங்கு குறித்துக் கொள்வது ஈழத்தமிழர் சமூகம் மத்தியிலான உரையாடலுக்கான அழைப்புக்குத் துணை புரியும் எனக் கருதுகிறேன்.

சிறிலங்கா அரசு எத்தகையது என்பதனை புரிந்து கொள்வதற்கு நாம் சிறிலங்கா அரசு – சிறிலங்கா அரசாங்கம் இவை இரண்டையும் இவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளையும் புரிந்து கொள்ளவேண்டும். நம் மத்தியில் அரசு (State),  அரசாங்கம் (Government) –  இவை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகள் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் மாறி மாறி பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. இதற்கு முன்னரும் அரசு – அரசாங்கம் இவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் குறித்து எனது பத்திகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

கோட்பாட்டு ரீதியில் அரசும் அரசாங்கமும் ஒன்றல்ல. ஒன்றுக்கொன்று தொடர்புடையது. அரசின் ஒரு பகுதிதான் அரசாங்கம். அரசு என்பது ஒரு நாட்டின் ஆளுமை முறையின் திரட்சி. ஒரு நாட்டின் சட்டங்களை இயற்றுவது, நாட்டை நிர்வகிப்பது, சட்டம் ஒழுங்கப் பாதுகாப்பது, நீதி பரிபாலனம் செய்வது உட்பட ஒரு நாட்டை ஆளுகை செய்வதற்குத் தேவiயான அனைத்துக் கட்டமைப்புக்களும் அரசின் அங்கங்கள்.

ஜனநாயகப் பாரம்பரியத்தில் ஒரு நாட்டின் அதிகாரங்கள் ஒரு இடத்தில் குவிமையப்படுவதனைத் தடுத்து அவற்றை வெவ்வேறு இடங்களில் பகிரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை நாம் பொதுவாக மூன்று வகையாகப் பகுத்துப் பார்க்கலாம்.

முதலாவது, ஒரு நாட்டை ஆளுகை செய்வதற்கான சட்டங்களை இயற்றும் அதிகாரம். இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சபையிடம் இருக்கும்.

இரண்டாவது, நாட்டை ஆளுகை செய்யும் நிர்வாக இயந்திரம். இந்த நிர்வாக இயந்திரம்தான் அரசாங்கம். அதனை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கூடுதலான ஆதரவைப் பெற்ற (பெரும்பான்மை அரசாங்கம்) அல்லது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பெரும்பான்மைப் பிரதிநிதிகளினால் நிராகரிக்கப்படாத (சிறுபான்மை அரசாங்கம்) கட்சியோ அல்லது கட்சிகளோ தலைமை தாங்கும்.

மூன்றாவது, சுதந்திரமான ஒரு நீதிபரிபாலனத்துறை. மக்களின் பிரதிநிதிகளால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு அமைவாக நீதி நிர்வாக விழுமியங்களுக்கு உட்பட்டு ஒரு நாடு ஆளுகை செய்யப்படுவதனை உறுதிப்படுத்தும் ஒரு பொறிமுறை.

இவையே பாரம்பரியமாக அரசின் அங்கங்களாகக் கருதப்படுபவை. ஆளுகைமுறையின் கண்காணிப்பாளராக இருக்கக்கூடிய ஒரு நிலை சுயாதீன ஊடகங்களுக்கு இருப்பதனால் ஊடகங்களையும் ஒரு அரசின் நான்காவது அங்கமாக வர்ணிக்கும் போக்கும் ஜனநாயக நாடுகளில் உண்டு.

ஒரு நாட்டின் இறைமை மக்களின் கைகளில் இருப்பதாகக் கருதப்படுவதால் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக நாட்டை ஆளுகை செய்யும் முறை கட்டியமைக்கப்பட்டுள்ளது.

இவை பொதுவாகக் கூறப்பட்ட விடயங்களே. பல நாடுகளில் மக்களால் ஆட்சித் தலைவர் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் முறை உண்டு. இங்கு மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளின் முக்கியத்துவம் ஒப்பீட்டளவில் குறைந்து காணப்படும். சிறிலங்காவிலும் இந்த நடைமுறை உண்டு.

இத்தகைய ஒரு பின்னணியில் இருந்து நாம் சிறிலங்கா அரசினைப் புரிந்து கொள்ள முயல்வோம்.

இப்பத்தி சிறிலங்கா அரசு குறித்து பத்து அவதானிப்புக்களைப் பதிவு செய்து கொள்கிறது.

முதலவாது, சிறிலங்கா அரசு மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளால் ஆளுகை மேற்கொள்ளப்படும் ஒரு நடைமுறையினை பின்பற்றி வருகிறது. இந்த நடைமுறை காரணமாக ஒரு ஜனநாயக நாடு என்ற பெயரை அனைத்துலக அரங்கில் பெற்றுள்ளது.

இரண்டாவது, சிறிலங்கா அரசு சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் ஆதிக்கத்துக்குள் உள்ள ஒரு அரசு. இந்த அரசின் நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, நிர்வாக இயந்திரமான அரசாங்கமாக இருந்தாலும் சரி, நீதி பரிபாலனத்துறையாக இருந்தூலும் சரி, ஏன் ஊடகங்களாக இருந்தாலும் சரி – இவை அனைத்துமே சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் ஆதிக்கத்துக்குள் இருக்கிறது. மேலும், ஜனநாயக அடிப்படையிலான பெரும்பான்மையினரின் அதிகாரம் என்ற நடைமுறையினைப் பயன்படுத்தி பெரும்பான்மை இனத்தவரின் அதிகாரம் என்ற அடிப்படையில் சிறிலங்கா அரசு கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இதனால் இங்கு ஜனநாயகம் (Democracy) என்பது இனநாயகமாக (ethnocracy) உள்ளது.

மூன்றாவது, சிறிலங்கா அரசு மகாவம்ச இதிகாச மயக்கத்தை வரலாற்று உண்மை என்று திரிபுபடுத்தி இந்தத் தளத்தில் இருந்து இந்தியாவுக்கும் தமிழருக்கும் எதிரான அரசாகக் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இதில் தமிழர் எதிர்ப்பினை வெளிப்படையாக முதன்மைப்படுத்தி இந்திய எதிர்ப்பினை மறைமுகமாகப் புதைத்து வைத்திருக்கும் இராஜதந்திர அணுகுமுறையும் இணைக்கப்பட்டள்ளது.

நான்காவது, சிறிலங்கா அரசின் மீதான சிங்கள பௌத்த ஆதிக்கமானது மிகவும் இறுக்கமடைந்து ஒரு பேரினவாத அரசாக வலுவடைந்துள்ளது. மேலும் எந்த வகையான அரசு சீரமைப்பு முயற்சியினையும் (state reforms) இப் பேரினவாத நிறுவனம் எதிர்த்துப் போராடி முறியடிக்கும் வல்லமையினையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் உள்நாட்டில் இருந்தோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ ஊற்றெடுக்க முனையின் அதனை விழுங்கி ஏப்பம் விடும் வலிமை இப் பேரினவாதப் பூதத்துக்கு உண்டு.

ஐந்தாவது, சிறிலங்கா அரசு தன்வசமுள்ள எந்தவித அதிகாரங்களையும் பகிர்ந்தளிக்க தயாராக இல்லை. வரலாற்று ரீதியாகத் தமிழர் தலைமைகள் சிறிலங்கா அரசாங்கங்களுடன் நடாத்தி வந்த பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகளும் தோல்வியில் முடிவடைந்ததற்கான ஒரு முக்கியமான காரணம் இது.

ஆறாவது, இலங்கைத்தீவில் இருப்பது ஒரு தேசம்தான், ஒரு தேசிய இனம்தான் – அது சிங்கள தேசமே – சிங்கள தேசிய இனமே – என்பதுதான் சிறிலங்கா அரசின் நிலைப்பாடு. ஏனைய சிறுபான்மையினர் வந்தேறுகுடிகள். உதிரிக் குடியினர். சிங்களதேசத்தின் தீர்மானத்தின்படி வாழவேண்டியவர்கள். தம்மை சிறிலங்கர் என்ற அடையாளத்துகள் அமிழ்த்திக் கரைய வேண்டியவர்கள். இந்த பேரினவாத நிலைப்பாடு சிறிலங்கா அரசின் ஆதார அடிப்படைகளில் முக்கியமானது.

ஏழாவது, சிறிலங்காவில் ஜனநாயகமுறையின் ஊடாக ஆட்சிமாற்றம் நடைபெறக்கூடிய நிலை இருப்பது சிறிலங்கா அரசின் உயிர்வாழ்வுக்கு உறுதுணையாக உள்ளது. அரசின் மீது எழும் எதிர்ப்பினை அரசாங்கத்தினைத் தலைமை தாங்கும் கட்சியின் மீதான எதிர்ப்பாக வெளிப்படுத்தி ஒவ்வொரு ஆட்சிமாற்றத்தின் ஊடாகவும் சிறிலங்கா அரசு தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. இதனால் சிறிலங்காவினைப் பொறுத்தவரை தேர்தல் ஜனாயகம் என்பது பேரினவாத அரசைப் பாதுகாக்கும் கருவியாகப் பயன்படுகிறது.

எட்டாவது, சிறிலங்கா அரசு ஒரு தேச-அரசு (Nation -State) அல்ல. மாறாக ஒரு பிரதேச-அரசு (territorial state). ஒரு தேச அரசு ஒரு தேத்துக்குரிய அரசாக தனக்கென்ற வரையறுக்கப்பட்ட பிரதேச எல்லைகளைக் கொண்டிருக்கும். பெரும்பாலான மேற்கு ஜரோப்பிய அரசுகள் இத்தகைய தேச அரசுகளே. ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களைக் கொண்ட நாடுகளிலும் ஒரு பொதுத் தேசஉருவாக்கத்தை (Nation  building) வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்போது அவற்றையும் தேச-அரசாகக் கொள்ள முடியும். ஆனால் தனது பேரினவாத நிலைப்பாட்டால் சிறிலங்கா அரசால் ‘இலங்கையர்’ என்ற ஒரு பொது தேசத்தை உருவாக்க முடியவில்லை. தற்போது ‘சிறிலங்கர்’ என்ற தேச உருவாக்கத்தை ஆக்கிரமிப்பின் ஊடாகச் செய்ய முயல்கிறது.

ஒன்பதாவது, கடந்து முப்பதாண்டுகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எதிர் கொள்வதற்கும் விடுதலைப்புலிகள் அமைப்பை எதிர்த்துப் போராடுவதற்கும் கட்டி எழுப்பட்ட இராணுவ, புலனாய்வுக் கட்டமைப்புக்களால் சிறிலங்கா அரசு ஒரு வலுவான இராணுவத்தைக் கொண்ட, இராணுவ மையவாத அணுகுமுறை கொண்ட அரசாக மாற்றம் கண்டிருக்கிறது இது தற்போதய அரசாங்கத்தின் அணுகுமுறையாக மட்டும் இல்லாது அரசின் அணுகுமுறையாக வளர்ச்சி காண்பதால் ஆட்சிமாற்றங்கள் அரசின் இராணுவத்தின் வகிபாகத்தை நிராகரிக்க முடியாத நிலை தோற்றம் கண்டு வருகிறது.

பத்தாவது, சிறிலங்கா அரசு தான் ஆளுகை செய்யும் இலங்கைத்தீவின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக உலகப் பெரும் நாடுகளை கவரும் தன்மையினைக் கொண்டுள்ளது. இதனால் தனது நலன்களுக்கேற்றவாறு உலகப்பெரும் நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பினைக் கொண்டதாக உள்ளது. ஆட்சியாளர்களின் அணுகுமுறைக்கேற்ப கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட்டாலும் சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக அரசுகளின் அரங்கில் நண்பர்வட்டம் இருந்து கொண்டிருக்கும்.

இங்கு நான் குறிப்பிட்டுள்ள சிறிலங்கா அரசு தொடர்பான அவதானிப்புக்கள் குறித்து ஈழத் தமிழர் தேசத்தின் தமிழ் தேசிய நிலைப்பட்ட அரசியல் சமூகத்தின் மத்தியில் கருத்து வேறுபாடுகள் பாரியளவில் இருக்கும் என நான் கருதவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக இருந்தாலும் சரி, நாடு கடந் தமிழீழ அரசாங்கமாக இருந்தாலும் சரி, உலகத் தமிழர் பேரவையான இருந்தாலும் சரி, மக்கள் அவைகளாக இருந்தாலும் சரி – எல்லோரும் வெளிப்படையாகப் பேசாவிடினும் சிறிலங்கா அரசு தொடர்பான இவர்களது கணிப்பில் பாரிய வேறுபாடுகள் இருக்கும் என எனக்குத் தோன்றவில்லை.

ஈழத் தமிழ் மக்களும் சிறிலங்கா அரசினை நன்கு புரிந்துதான் வைத்துள்ளனர். வரலாற்றுரீதியாக சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளை மக்கள் ஆதரித்ததில்லை.

இயங்குதிறன் என்ற நோக்கில் பார்த்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டக்ளஸ் தேவானந்தாவின் அருகில் நெருங்கக்கூட முடியாது. கூட்டமைப்பின் வெற்றி என்பது இயங்குதிறனின் வெற்றியல்ல.

கூட்டமைப்பின் வெற்றியினை சிறிலங்கா அரசு தொடர்பான தமிழ் மக்களின் புரிதலில் இருந்து எழுந்த வெற்றியாகத்தான் நோக்க வேண்டும். சிறிலங்கா அரசு இனவாத அரசாக இருக்கின்றமையால் அதனை எதிர்கொள்ள பலமான தமிழர் தலைமை வேண்டும் என்பதே மக்கள் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

தமிழரசுக்கட்சி – விடுதலைப்புலிகள் அமைப்பு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அமைப்புக்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு, வெவ்வேறு காலகட்டங்களில் உள்ள நிலைமைகளுக்குள், ஒரு பலமான தமிழர் தலைமையினைத் தமிழர் தேசம் கொண்டிருக்க வேண்டும் என்ற மக்களின் நிலைப்பாட்டில் இருந்தே எழுந்திருக்கிறது.

ஈழத் தமிழர் அரசில் சமூகத்தின் மத்தியில் உள்ள அணுகுமுறை சார்ந்த வேறுபாடுகள் சிறிலங்கா அரசினை எவ்வாறு எதிர்கொள்வது அல்லது கையாள்வது என்பதில் இருந்துதான் எழுகிறது என்றே நான் கருதுகிறேன். (இங்கு அதிகாரப் போட்டிகளால் எழும் முரண்பாடுகளைத் தவிர்த்தே பேசப்படுகிறது)

இதனால் சிறிலங்கா அரசினைப் புரிந்து கொண்டு சிறிலங்கா அரசினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாகத் தமிழர் அரசியல் சமூகம் தமக்குள் உரையாடல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.

சிறிலங்கா அரசை எவ்வாறு கையாள்வது? அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசை எவ்வாறு தனிமைப்படுத்துவது? ஈழத் தமிழர் தேசம் தனிமைப்பட்டுப் போகாமல் தடுப்பது எவ்வாறு? தமிழர் தேசத்தின் அரசியல் அடையாளத்தை அழித்து, தேசம் என்ற தகைமையினை தகர்த்து, சிறிலங்கர் அடையாளத்துக்குள் கரைத்து விடத்துடிக்கும் சிறிலங்கா அரசின் முயற்சியினை தடுத்து நிறுத்துவது எவ்வாறு? யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வை மீளக் கட்டி எடுப்பதற்கான நடவடிக்கைகள் எவை? தாயகத்தில் தமிழர் தேசத்தின் பொருளாதார வலிமையினை வளப்படுத்தவது எவ்வாறு? போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக கவனத்தினை தமிழர் தேசத்தின் நலனக்கேற்பப் பயன்படுத்தவது எவ்வாறு?

இவையெல்லாம் ஈழத் தமிழர் அரசியல் சமூகம் தமக்குள் கூடிப்பேசுவதற்கான உடனடிப் பேசுபொருளாக அமையக்கூடியவை. இத்தகைய உரையாடல்களின் ஊடாக சிறிலங்கா அரசினை எதிர்கொள்வது தொடர்பான ஒரு பொது உடன்பாட்டுக்கு ஈழத் தமிழர் அரசியல் சமூகம் வரவேண்டும்.

இங்கு பொது உடன்பாடு என்பது ஈழத் தமிழர் அரசியல் சமூகத்தின் அனைத்து அங்கங்களும் ஒரே வேலைத்திட்டத்தில் இயங்க வேண்டும் என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படவில்லை. முன்னர் ஒரு தடவை இப் பத்தியில் குறிப்பிட்டது போன்று எல்லோரும் ஒரே புள்ளியில் இணைய வேண்டும் என இப் பத்தி கருதவில்லை. ஆனால் ஒரு சட்டகத்துக்குள் ஒருங்கிணையும் புரிந்துணர்வை ஈழத் தமிழர் அரசியல் சமூகம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றே வலியுறுத்துகிறது.

இதனைச் செய்ய தமிழத் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஈழத் தமிழர் அரசியல் சமூகம் தயங்குமானால், தவறுமானால் இது சிங்களத்துக்கு வாய்ப்பு கொடுப்பதாகவே அமையும். இதற்காக வலராறு நமது தலைமுறையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும்.