முயல்மதி காட்டிய பாதையில் ஒன்றாகப் பயணிப்போம் வாருங்கள்!

2011 ஆம் ஆண்டில் நாம் அடிவைக்கும் இந்த நேரத்தில் எமது மண்ணில் எமது கலாச்சாரம் மொழி நிலம் பறிபோய்க் கொண்டிருகிறது. எம் மக்கள் தங்களை காக்க மீண்டும் விடுதலை புலிகள் வரமாட்டார்களா என்று நிலையில் வாழ்ந்து கொண்டிருகிருகிறார்கள்.

வரும் 2011யை எமது கலாசாரம் மொழி நிலத்தை பாதுகாக்கும் ஆண்டாகவும் தமிழருக்கு எதிரான இனப்படுகொலையை வலியுறுத்தும் ஆண்டாகவும் சிறி லங்கா அரசை உலக நாடுகள் புறக்கணிக்கும் ஆண்டாக மாற்ற நாம் சகல வழிகளிலும் மக்கள் அணியாக செய்படுவோம் என்பதை உறுதியெடுத்து கொள்வோம். எம் மக்களின் மீள் அபிவிருத்தியை போரினால் பாதிக்கப்பட 35000க்கு மேற்பட்ட மாற்றுவளுவற்றோருக்கான உதவித்திட்டங்கள் என்ற பல செயல்பாடுகளுடனும் எம் மக்களுக்கு நாம் கையாக இருப்போம்.

நாம் காணும் அனைவரிடமும் அடுத்த வருடம் தமிழீழத்தில் சந்திப்போம் என்ற மனவுறுதியுடன் கூறிக்கொள்வோம்.

YouTube Preview Image

ஊடகதர்மர்களுக்கு இது சமர்ப்பணம்

சில வாரங்களின் முன்னொருத்தியின் உடலையும்
அவள் அணிந்த ஆடைகளையும்
அநியாயத்தின் சாட்சியமென ஆளுக்காள்
படம்காட்டி செய்தியாய் செவ்வியாய்
செத்துப்போனவளை பலதரம் கொன்று புதைத்தோம்…..

இன்றொருத்தி 17வயதுப் பள்ளிமாணவி

76பேருடன் உடலுறவு கொண்டாளாம்…..
அடி சக்கை அந்தமாதிரிச் செய்தி…..
ஆளாளுக்கு விளக்கங்கள்
அடங்கொய்யாலா அதுவும் சாதனைதான்.

மெளதீக யுத்தம் உயிர் ஆயுதம்
அச்சாப் பொருத்தமான ஒப்பீடுகளும் ஒப்பனைகளும்
பதின் வயது தாண்டாத 17வயதுச் சிறுமியைக் கூட
விட்டு வைக்காத இனம் நாங்கள்.
நமக்கெல்லாம் சமூகமும் அக்கறையும் அதிகம் தான்.

விட்டுத் தொலையாத நாற்றங்கள் முட்டிக் கிடக்க
சொகுசுக் கதிரைக்குள் சுகமாய் தட்டச்சி
ஒரு தமிழச்சியைக் கூறுபோடும்
கொடுமைக்கு யாரிங்கு குரல் கொடுப்பர்……?

கெளரவம் கவரிமான் சாதியாய்
தன்னையே பெருமைகொள் தமிழினம்
உயர்ந்த பண்பிலும் வரலாற்றிலும்
வனையப்பட்ட சித்திரமென்ற கதைகளை
இனியாவது நிறுத்திக் கொள்வோம் தமிழர்களே…!
எங்கள் வீட்டின் மகளை இப்படியா ஏலம் விடுவோம்…?
மனசைத் தொட்டுச் சொல்லுங்கள்…..!
இதுவா மனிதப் பண்பு…?
இதுவா சீர்திருத்தம்…..?
இதுவா தமிழினப் பெருமை….?
ஒன்று முடிய ஒன்றாய் தமிழச்சிகள்
தமிழர்களால் விற்கப்படும் வியாபாரம்
இன்றோடு நிறுத்துவோமா…..?

31.12.10

(28.12.10 அன்று இணையங்களில் வெளிவந்த செய்தியின் தலைப்பிது:-17வயது மாணவி 76 பேருடன் பாலியல் தொடர்பு! யாழில் அதிர்ச்சி! பெருமளவானோர் படையினராம்! இச்செய்தியின் நாயகி ஒரு 17வயதுச் சிறுமி. அவளை ஆளுக்காள் அவரவர் திறமைக்கேற்ப விமர்சனங்களால் வியாபாரம் செய்கின்றனர். இசைப்பிரியாவின் நிர்வாண உடலைக் காட்டி ஊடகவிபச்சாரம் செய்த ஊடகர்களும் ஊடகங்களும் இன்று இந்தப் 17வயதுச் சிறுமியைத் தண்டிப்பதாய் நினைத்து ஒவ்வொரு தமிழ்ச்சிறுமியையும் தண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் பரபரக்க பலியிடப்படும் உயிர்கள் வரிசையில் இன்று பேசப்படும் சிறுமிக்கு அவள் போல ஆயிரமாயிரமாய் காயங்களுடன் வாழும் பெண்களை அவமதிக்கும் ஊடகதர்மர்களுக்கு இது சமர்ப்பணம்)

சாந்திரமேஸ் வவுனியன்

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=258

http://www.pathivu.com/news/14708/57/17/d,article_full.aspx

சமூதாயப் பொறுப்புள்ள சில தமிழ் இணையங்கள் புரிந்துகொள்ள வேண்டியவை

டிச 8, 2010

சிங்களக் கொடிய அரக்கர்களினால் எமது மண் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி, உலக வல்லாதிக்கங்களின் உதவியுடன் எமது ஆயுதப் போராட்டம் இறுதிக் கட்டத்தை அடைகின்றபோது, எம்மால் நினைத்துப் பார்க்க முடியாதளவு, உலகின் எந்தவொரு மூலையிலும் போரின்போது சிக்குண்ட இராணுவத்தினருக்கோ அல்லது மக்களுக்கோ இதுவரையில் நடைபெறாதளவு கொடூரங்கள் எமது தாயக மண்ணில் நடைபெற்றதென்பது எவராலும் மறுக்கமுடியாத ஒன்று.

அந்தவகையில் சிக்குண்ட எமது மக்களையும், போராளிகளையும் மனிதாபிமான அடிப்படையில் பராமரித்து வருவதாக உலகின் செவிகளுக்குப் பறைசாற்றி வரும் சிங்களப் பயங்கரவாத அரசானது, தனது போர்க்குற்றங்களை எந்தெந்த வகைகளிலெல்லாம் செய்துள்ளதென்பதை புதிது புதிதாக வரும் ஒளிவடிவிலான காட்சிகள் உறுதிசெய்கின்றன. எனவே ஊடகங்கள் வழியாக வரும் ஒளிப்பதிவுக் காட்சிகள் தனது போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கு ஆதாரமாகிவிடும் என்ற பீதியுடன் சிங்களப் பேரினவாத அரசானது அதிலிருந்து தான் தப்பித்துக்கொள்வதற்காக ஊடகங்களினால் வெளியிடப்படும் ஒளிவடிவிலான காட்சிகளைப் பொய்யென நிரூபிப்பதற்காக அதை முடக்கும் வழிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளைகளிலும்கூட புதிது புதிதாக வரும் கொடூரக்காட்சிகளை வெளியிட்டு உலகின் பார்வைக்கு கொண்டுவருவதை எமது அனைத்துலகப் பெண்கள் அமைப்பு  வரவேற்கின்றது.

எமது போராட்டம் ஆரம்பித்ததன் நோக்கங்களில் எமது கலாச்சாரமும் பாதுகாக்கப்பட வேண்டியதென்பதை எவரும் மறந்துவிடவோ, மறுக்கவோ முடியாது.  சிங்கள இனவெறியர்கள் என்னவெல்லாம் செய்து எமது மக்களை மண்ணிற்குள் புதைத்திருப்பார்கள் என்பதை எமது மக்கள் நன்கு அறிவார்கள். அன்று எமது பெண்களின் மார்புகளில் சிங்கள சிறீயைப் பதித்து கொடுமை செய்தது தொடக்கம் இன்று முள்ளிவாய்க்காலில் செய்த கொடுமைகள் வரை எமது மக்களிற்கு நன்கு தெரியும். ஆகவே இவ்வாறான காட்சிகளின் மூலம் தான் உணர்வுகளைக் கொண்டுவரவேண்டுமென எண்ணிச் செயற்படுவது கூட எம்மினத்தை இழிவுபடுத்தும் செயலாகவே அமையும். எனவே எமது கலாச்சாரத்திற்கு மாறுபட்ட காட்சிகளை எம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது அவசியமில்லையென்பதுடன் அவற்றை உலகின் கண்களுக்கு கொண்டுவாருங்கள் என்பதே எமது  வேண்டுகோள்.

அதற்காக எமது மக்களுக்கு எதையும் சொல்லவேண்டாம் என்ற கருத்தைச் சொல்ல வரவில்லை.  தவிர்க்கப்படவேண்டிய அலங்கோலமான காட்சிகள் சிலவற்றைத் தவிர்த்துவிட்டு ஏனைய காட்சிகளை வெளிப்படுத்தலாமே என்பதுதான் எமது வேண்டுகோளும்கூட. மானம் காக்க போராடிய தமிழின மறத்திகளை அலங்கோலமான காட்சிகளில் எம்மக்களின் முன் காட்சிப்படுத்துவதென்பது, அவர்களை நாம் சிங்கள இனவெறியாளர்களுடன் சேர்ந்து நின்று கொச்சைப்படுத்துவதற்குத் துணைபோவதான விடயமாகவே எம்மால் கருதக்கூடியதாகவுள்ளது.

ஐரோப்பாவில் இயங்கிவரும் ‘சனல்-4’ தொலைக்காட்சி நிறுவனம்கூட சில அலங்கோலமான காட்சிகளைத் தவிர்த்து வெளியிடுகின்றபோது நாம் எதற்காக எமது பெண்களின் நிர்வாணநிலையிலான காட்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறோம்.  இதற்காகவா இவ்வளவு ஆண்டுகளாக மாபெரும் அர்ப்பணிப்புக்களையும், உயிர்த்தியாகங்களையும் செய்து போராடினோம்?

மாந்தர்கள் கண்களால் பார்க்கமுடியாத பெண்களின் நிலையினை இணையங்களில் காட்சிப்படுத்தியமையானது எம்மினப் பெண்களை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்திய செயலுக்கு ஒப்பானதொன்றாகவே கருதுவதோடு, இச்செயலினை வன்மையாகக் கண்டிப்பதுடன்,    எந்நிலை வந்தாலும் கொள்கையிலிருந்து வழுவாத எமது போராட்டத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு, இனிவரும் காலங்களில் குமூகாயப்( சமுதாயப்) பொறுப்புடன் தமிழ் இணையங்கள் செயற்படவேண்டுமென  உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

அனைத்துலகத் தமிழ்ப் பெண்கள் அபைப்பு

இவ்வண்ணம்
க(மு)யல்மதி(இணைப்பாளர்)

*
 1. sivasambu says:

  இந்த அதிர்வு அண்மையில் கே.பி யாழ் விஜயம் பற்றி ஒரு செய்தி போட்டது. அந்த செய்தியில் படத்தை வெட்டி குல்மால் செய்து கே.பி வெறும் இருவரை சந்திப்பது போல் போட்டிருந்தார்கள். அனால் அந்த படங்களை முழுமையாக நேர்டோ இணயத்தில் பார்த் போது இவர்கள் படத்தில் மறைத்தது கால்களை இழந்த ஒரு முன்னாள் போராளியின் படத்தையும் கே.பியை காண வந்த மக்களையும்! அந்த ஆள் அரசியல் வேண்டாம் எண்டு நேரா சொல்லிப்போட்டு காலில்லாத கஸ்டப்படுகிற சனத்திற்கு தன்னால் அதை செய்தால் அதை ஏன் இவை மறைக்கினம்? எனக்கு இந்த தேசிய ஊடகங்களின்றை ஜில்மால் இப்பதான் விழங்குது! தங்களுக்கு எற்றமாதிரி அங்கை குட்டைய குளப்பிறதே இவங்களின்றை நோக்கம்!

  இது அதிர்வு : http://www.youtube.com/watch?v=6g6aK1qr_18&feature=player_embedded

  இது நேர்டோ : http://www.youtube.com/watch?v=WbdwdHUHhXk&feature=player_embedded

 2. வாகீசன் says:

  ஒருத்தியை படம்போட்டுக் காட்டி அவள் சார்ந்த உறவுகள் ஒவ்வொருவரையும் தினம் தினம் சாக வைத்தது நமது ஊடகங்கள். அவளோடு அவளது சந்ததியும் அழியவில்லை அவளைச் சூழ்ந்த உறவுகளும் அழியவில்லை. அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள்.

  அதுபோல இன்னொருத்தியை பாலியல் தொழிலாளியெனக் கொல்கிறோம். உண்மையில் சரியாக இச்செய்தியை கையாண்டதாய் செய்தியை வெளியிட்டோர்களை சொல்லச்சொல்லுங்கள் பார்ப்போம் ? இவ்விடயத்தில் உடன்பட முடியவில்லை . ஆனாலும் விவாதிக்கவும் விருப்பமில்லை.

  இப்படி சொல்லுகிறார் சாந்தி

  இப்படி சொல்லும் சாந்தியக்காவுக்கு ஒரு பழைய செய்தியை சுட்டிக்காட்டுகிறேன்.அப்போது நீங்கள் எங்கிருந்தீர்கள்?
  வன்னியில் 2009ம் ஆண்டில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வன்னி மக்கள் தப்பியோடிய போது புலிகள் சுட்டார்கள்?
  தப்பியோடிய வன்னி பெண்களை மறுபக்கத்தில் நின்ற இராணுவம் நிர்வாணமாக்கி பரிசோதிச்சு தான் எடுக்கிறானாம்.இதை தங்கடை வேவுப்புலிகள் தூரனோக்கியால் பார்த்து வன்னி பெண்டுகளின் நிர்வாணத்தை வீடியோ பண்ணி வைச்சிருக்கினம் எண்டும் தேவையான போது அதை வெளியிடுவினமாம் என்று தப்பியோடுபவர்களை வெருட்டி புலிகளின் ஊடகங்கள் செய்திபோட்டபோது அடங்கொய்யாலா எங்கிருந்தீர்கள் அக்காள்?

  அப்போது மானசீக தலைவரும் உசிரோடதானே இருந்தவர். இந்த அக்காளுடைய நிலைப்பாடு என்னெண்டால் இஞ்ச வெளி நாடுகளில‌ இருக்கிற புலிகள் தான் கூடாது. வன்னி புலிகளும் செத்தபுலிகளும் நல்லம் அப்படித்தானே? அந்த வேவுப்புலிகளும் ஒன்றில் செத்திருப்பினம் இல்லாட்டி சரணடைஞ்சிருப்பினம் இல்லாட்டி நீங்கள் உதவுற உதவும் கரங்கள் லிஸ்ரிலும் இருப்பினம்?

  அக்காள்கள் சாந்தியும் கயல்மதியும் பதில் தருவீங்களோ?

  வாகீசன்

 3. வாகீசன் says:

  மற்றவர்களில் குற்றம் கண்டுபிடிப்பதிலேயே குறியாய் இருப்பவர்களுக்கு தங்களின் ஊத்தை தெரிவதில்லை

  சிறிதரன் எம்பியும் முன்னாள் புலிகளின் குரல் ஜவானின் கவிஞர் பொன்.காந்தனும் ஒரு மாவீரர் குடும்ப பெண்ணை வைத்து வீடியோ எடுத்தாராம் மிரட்டினாராம் தமிழ்வின்னில் இருந்து வீடியோவை நீக்க சொல்லிச்சினமாம் சோககதையாம் தற்கொலை முயற்சியாம்

  சிறி எம்பியின் ஆக்கினையால கலாரஞ்சினியை பாதுகாப்பான இடத்திலையும் வேற வைச்சு இருக்கினமாம்.
  http://www.yarl.com/forum3/index.php?showtopic=79645

  சிறி எம்பியின் திருவிளையாடல்களை விட இந்த போட்டா போட்டியில் இனித்தான் கலாரஞ்சினி உண்மையில் தற்கொலை செய்யப்போகிறார் அல்லது முகனூலில் கார்த்திகைபூவுடன் நின்றதால் குடத்தனையில் சுடப்பட்ட கேதீசுவரனின் நிலைதான் ஏற்படப்போகிறது.
  http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=16615:2011-01-01-13-13-23&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  இந்த கீச்சுமாச்சு தப்பலம் எல்லாத்தையும் கவனிச்சுக்கொண்டுதான் சிலோன்கார மாமாக்கள் இருக்கிறாங்க‌ பாருங்கோ

சுகு-ஸ்ரீதரன்.14-06-2013:
வடக்கு மாகாணசபைத் தேர்தல் - 13வது சட்டத் திருத்தம் - ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள்
மக்களின் ஜனநாயக சுதந்திரம், அடிப்படை உரிமைகள், சமூகங்களிடையே நல்லிணகத்தை கட்டியெ...
***********************************
தினமணி.13-06-2013:
"தாக்சிம் மக்கள் குடியரசு" : துருக்கியில் தோன்றிய புரட்சி
பூங்காவில் பூத்த புரட்சி... புவியியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஐரோப்ப...
***********************************
vreegana.11-06-2013:
முள்ளிவாய்க்காலில் இருதலைக்கொள்ளி எறும்பாகிய வன்னித்தமிழர்கள் - 01, 02
அன்பர் லம்போ வர்களுக்கு ==> இந்த கட்டுரையாளர் ஆரம்பத்திலே சொன்ன விடயத்தை தாங்...
***********************************
லம்போதரன் தம்பி.10-06-2013:
முள்ளிவாய்க்காலில் இருதலைக்கொள்ளி எறும்பாகிய வன்னித்தமிழர்கள் - 01, 02
1)புலிகளால் வெளியேயற்றப்பட்ட சிங்களவர் பற்றி பேசும் இக் கட்டுரை அரசால் திட்டமிட்...
***********************************
பத்திரிகை.03-06-2013:
வேடிக்கையான காணி, பொலிஸ் அதிகாரங்கள்
'13வது திருத்தம் என்பது எலி, பூனை விளையாட்டு போன்றது. எலியை வைத்து பூனை விளையாடு...
***********************************
லம்போதரன் தம்பி.31-05-2013:
எதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும்
போரின் பின்னான முன்னேற்றங்கள் : 1) வடக்கில் தமிழரின் 30% காணிகள் கட்டாயா பறிமுத...
***********************************
Elilan.23-05-2013:
எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்
அன்பின் ரூபன் அண்ணாவுக்கு, குரும்ப சிட்டி கொள்ளை நடந்த பின்னரே நான் பிறந்தேன். ...
***********************************
எழுகதிரோன்.22-05-2013:
கூட்டமைப்பு காலாவதியாகிறதா?
யுத்தம் முடிவடைந்து நான்காண்டுகள் கடந்து வந்திருக்கின்றோம். வெறுமனே முள்ளிவாய்க்...
***********************************
விதிவழி.20-05-2013:
தமிழ்ச் சிவில் சமூகம்
14/05/2013 அன்று வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு என்ற கிராமத்தில் ஏழே வயதான பள்ளி...
***********************************
raj.19-05-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை – 11
ஆக மொத்தம் சுரேஸ் - வரதர் பிரச்சனை பழி தீர்ப்பினை அடிப்படியாக கொண்டு மேற்கொல்லப...
***********************************
raj.05-05-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை – 10
த .தே .கூ என்ற பெயரிற்குதான் மக்கள் வாக்கு அளிப்பார்கள் என்றால் அரசே அந்த பெயரி...
***********************************
விஸ்வா - தேசம்நெற்.04-05-2013:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா?
கூட்டமைப்பை பதிவுசெய்தல் பொதுமக்களின் கருத்தை கேளுங்கள். தமிழ் தேசியக்கூட்டமை...
***********************************
நவம்.03-05-2013:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா?
த.தே.கூட்டமைப்பில் தமிழரசு கட்சியை விலிக்கிவிட்டு, ஏனைய கட்சிகள் தனித்து இயங்க வ...
***********************************
காந்தன்.02-05-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை – 09
படைகளை வெளியேற்று உள்ளிட்ட 12 தீர்மானங்கள் த.தே.கூ நிறைவேற்றம் தீர்மானங்கள்:-...
***********************************
ஆனந்தசங்கரி.01-05-2013:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடா? மனம் திறக்கிறார் சி.வீ .கே. சிவஞானம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை தவறாக வழி நடத்துகின்றது என்று தெரிவித்து உள...
***********************************
தடுமாற்றம்???.01-05-2013:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா?
கூட்டமைப்பின் அதிருப்தி கட்சிகள் முன்னுள்ள ஒரே தெரிவு - செய் அல்லது தமிழரசுக் கட...
***********************************
ஏ.கே.கான்.01-05-2013:
வங்கிகளை கொள்ளையடிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதிகள்
தங்கம் விலை குறையுது.. பெட்ரோல் விலை குறையுது.. ஆனால், இது நல்லதில்ல! சர்வதேச...
***********************************
kugan.25-04-2013:
ஐயகோ! சீனா இந்தியாவில் கால் பதித்து விட்டது!
இந்தியாவும் சீனாவும் வர்த்தகத்தில் ஈடுபடலாம் . ஆனால் அவர்கள் ஒரு உளவுப் போரில் ஈ...
***********************************
வளவன்.13-04-2013:
காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!
காசி மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை! மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு...
***********************************
பாலன் தோழர்.09-04-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை - 08
இலங்கை என்ற ஒரு ஜக்கிய நாட்டிற்குள் எமது தேசத்திற்கு என ஒரு தனியாக சுயாட்சி கட்ட...
***********************************