மாவீரர்களின் தேசிய ‘தல’ எழுதும் 57வது பத்தி

மாவீரர் சூதாட்டம் சம்பியன்லீக் 2011

‘கேட்கிறதா மணி ஓசை கேட்கிறதா நெஞ்சுருக்கும் பாடல்’ – ஒவ்வொரு கார்த்திகை 27இலும் இப்படித்தான் நமக்காக மரணித்தவர்களின் நினைவுகளை நாம் மனதில் நிரப்பிக் கொள்வதுண்டு. 1982இல் இருந்து இதனையொரு புனிதக் கடமையாகவே நாம் பேணிப் பாதுகாத்துக் கொண்டு வந்திருக்கிறோம். தன்னலமற்று வீழ்ந்தவர்கள் எவரும் மற்றவர்களின் போற்றுதலுக்காக வீழவில்லை. அது தன்னலமற்ற உயிர்நீர்ப்பு. நமது அடுத்த தலைமுறையின் சுதந்திரச் சுவாசத்திற்காக தங்கள் மூச்சை நிறுத்திக் கொண்டவர்களின் பரித்தியாகமது. ஆனால் 2009 மே.19 உடன் எல்லாமும் தலைகீழானது. முள்ளிவாய்காலுடன் நெருப்பணைந்து போன தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எஞ்சிய சிறு தணல்கள் புலம்பெயர் தேசங்களெங்கும் கொஞ்சம் கொஞ்சமாக அணைக்கப்பட்டன. இப்போது அந்த உட்சமர் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முள்ளிவாய்க்காலில் நமது போராட்டத்தின் தீ நாக்குகளின் மூலத்தை வேரறுத்தவன் சிங்களவன் என்றால் புலம்பெயர் தேசங்களில் அதனைச் செய்துகொண்டிருப்பவர்கள் சதா பிரபாகரன் நாமம் ஓதிய அவரின் விசுவாசிகள் என்பதுதான் நமது அவலத்திலும் பெரிய அவலமாகும்.

இதுவரைக்கும் விசுவாசி – துரோகி போராட்டம் – கைக்கூலித்தனம் என்றெல்லாம் நமக்குள் பிளவுபட்டுக் கொண்ட நாம், இப்போது தன்னலமற்று வீழ்ந்த மாவீரர்களின் தியாகத்தை கூறுபோடும் அரசியலுக்குள் பிரவேசித்திருக்கிறோம். இது ஒன்றுதான் இதுவரை நம்மை பிரிக்காமல் இருந்த ஒன்று. நம்மை வெற்றி கொண்ட சிங்களப் படைகள் துயிலும் இல்லங்களை சின்னாபின்னப்படுத்திய போதும்கூட அவர்களை நமது நினைவுகளின் ஏதோ ஒரு மூலையில் வைத்துக் கொள்ள முடிந்ததேயென்ற ஆறுதலாவது எஞ்சியது. இப்போது அந்த அவசியத்தைக் கூட இல்லாமலாக்கும் கைங்கரியத்தை அவர்களது பெயரால் விசாபெற்று வாழ்பவர்களே செய்து முடிக்கப் போகின்றனர்.

மாவீரர் பாகப்பிரிவினை சூதாட்டம்- இது ஓர் பலப்பரீட்சை

இம்முறை இரு மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதாக இருவேறு போட்டி அறிவிப்புக்கள் வந்தவண்ணமுள்ளன. இணைய வசதியுள்ளவர்கள் தவிர ஏனைவர்கள் இது குறித்து அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. அந்த மாவீரர்கள் எந்த மண்ணில் வீழ்ந்து உரமானார்களோ அந்த மண்ணில் இது பற்றியெல்லாம் எவரும் பேசும் நிலையில் இல்லை. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல் மாவீரர் தினத்தையும் எப்படிக் காசாக்கலாம் என்று ஒரு கூட்டம் தங்களுக்குள் குத்துவெட்டுப் பட்டுக்கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் பார்த்தவாறு தங்களுக்குள் சிரித்தவாறு இருக்கும் கொழும்பின் ஆட்சியாளர்கள், தாங்கள் செய்ய நினைத்ததை எந்த செலவும் இல்லாமல் பிரபாகரனின் விசுவாசிகளே செய்வது கண்டு ஒருகணம் அவர்கள் திகைத்தும் இருக்கக் கூடும். இந்தப் பூனைகளை வேட்டையாடவா இத்தனை கடினப்பட்டோம். சரியாக கணித்திருந்தால் இப்படித் தேவையில்லாமல் போர்க் குற்றச்சாட்டுக்களில் அகப்பட்டிருக்க வேண்டியதில்லையே! இவர்களைக் கொண்டே பிரபாவின் கதையை முடித்திருக்கலாமே! அவசரப்பட்டுவிட்டோமோ என்று அவர்கள் கவலைப்பட்டிருக்கவும் கூடும். எல்லோரும் நம்மை அண்ணார்ந்து பார்த்த காலம் போய் இப்போது எல்லாப்பக்கமும் சிரிப்புச் சத்தம் மட்டுமே கேட்கிறது. எத்தனை தியாகங்கள் எத்தனை அழுகுரல்கள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு வீழ்ந்தவர்களைத் தாண்டிச் சென்ற அந்தப் பொழுதுகள் – இப்போது எல்லாமும் சில சுயநலவெறிகொண்ட மனிதர்களால் ஒப்பற்ற தியாகங்கள் தமிழ் நாட்டு சினீமா போலாகிவிட்டது.‘மாவீரர்கள் நினைவு தினம்’ என்னும் படத்திற்கான இரு திரையரங்குகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. விரைவில் அதனை புலிக்கொடி பட்டொளிவீச மஞ்சல் சிகப்பு கொடியுடன் ஈஸ்மன் கலரில் எல்லோரும் கண்டு களிக்கலாம்.

புலிகள் இருந்த காலத்தில் மாவீரர்தின நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் பொறுப்பு அனைத்துலக செயலகத்திடமே இருந்தது. அனைத்துலக செயலகம் என்பது புலம்பெயர் தேசங்களெங்கும் பேராட்டத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டிருந்த கிளைகள் என்று அழைக்கப்பட்டவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டுவந்தன. மேற்படி அனைத்துலக பிரிவு, 2003 வரைக்கும் கேபியின் கீழும் அதற்கு பிந்திய வெறும் 5 வருடங்கள் கஸ்ரோவின் உத்தரவில் இயங்கிய அனைத்துலகப் பிரிவின் கீழும் இயங்கி வந்திருக்கிறது. முன்னர் கேபிக்கு கீழ் பணியாற்றியவர்களில் பலர் இன்றும் இந்த கஸ்ரோ பிரிவுடன் இயங்கி வருகின்றனர். ஆனால் புலிகளின் அழிவைத் தொடர்ந்து புலம்பெயர் நாடுகளில் புகைந்துகொண்டிருந்த பணப்பட்டுவாடா விடயங்கள் பல்வேறு போட்டிக் குழுக்கள் உருவாகக் காரணமாகியது. பினாமிகளாக இருந்தவர்கள் இறுதிக்காலத்தில் வீதி ஊர்வலங்களை ஒழுங்கு செய்தவர்கள் சில மாதங்கள் தமிழ்த் தேசியம் பேசியவர்கள் என்று ஒரு சிறு கூட்டம் இப்போது புலிப் போர்வைப் போர்த்தியிருக்கிறது. உண்மையான புலிப் போராளிகள் என்போர் வாழ்வியல் நெருக்கடிகளாலும் விரக்தி மனப்பான்மையாலும் ஒதுங்கிக் கொண்டனர். இன்றைய சூழலில் புலம்பெயர் நாடுகளில் தமிழீழம் காண்போம் என்று உளறிக் கொண்டிருக்கும் இவ்வகை ஆசாமிகள் அனைவரும் பஞ்சத்துப்புலிகளே ஆவர். பணபலம் இவர்களிடம் இருப்பதால் நிஜப் போராளிகள், உண்மையாகவே மக்கள் குறித்து சிந்திக்கும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் என்போரால் இவர்களை எதிர்த்து நிற்க முடியவில்லை. இந்த பின்புலத்தில்தான், சரணடைந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் ஒரு வேளை உணவுக்கே அல்லாடிக் கொண்டிருக்கின்ற நிலையில் அது குறித்து எந்தவிதமான குற்றவுணர்வுமற்று உயிர்நீத்த போராளிகளைப் பாகப்பிரிவினை செய்யும் போராட்டம் புலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உண்மையில் இரண்டு மாவீரர்தினத்திற்கான பின்னனி என்ன? ஏன் இதுவரை இல்லாதவொரு விடயம் இப்போது மேலெழுந்திருக்கிறது. கஸ்ரோவின் அனைத்துலகப் பிரிவின் செல்வாக்கு படிப்படியாக குறைந்து தலைமைச் செயலகத்துடன் உடன்பாடு காண்போரின் செல்வாக்கு படிப்படியாக அதிகரித்துக் கொண்டு செல்கிறது.. உருத்திரகுமாரனை தலைமையாகக் கொண்ட நாடுகடந்த அரசை ஆதரிப்பவர்களும், 2009 மே 19இற்குப் பின்னர் கேபியின் தலைமையை ஏற்றும் நிராகரித்தும் இப்போது முரண்பட்டும் நிற்கும் தரப்பினர் என அனைவரது உடன்பாட்டிலும் உதயமானதே தலைமைச் செயலகம் ஆகும். காஸ்ரோ தரப்பினரின் செல்வாக்கு படிப்படியாக விழ்ந்து கொண்டு செல்லும் பின்னனியிலேயே இவ்வகை போட்டிவாதம் தலைதூக்கியிருக்கிறது. புலம்பெயர் தேசங்களெங்கும் தலைமைச் செயலகத்தினர் கால்பதித்துவரும் சூழலிலேயே மாவீரர்தினப் பாகப்பிரிவினையில் அனைத்துலக பிரிவினர் இறங்கியிருக்கின்றனர். தங்களது செயலுக்கு நியாயம் கற்பிக்கும் வகையிலேயே தலைமைச் செயலகத்திற்குள் கே.பியின் ஆட்கள் ஊடுருவிட்டனர் அரச உளவுப்பிரிவு ஊடுருவிவிட்டது ‘றோ’ (RAW) ஊடுருவிட்டது போன்ற பழைய பஞ்சாங்கத்தை திரும்பத் திரும்பச் சொல்லிவருகின்றனர். கடந்த 35 வருடங்களாக தமிழ் மக்களுக்குப் பழக்கப்பட்டுப் போன ‘துரோகி’ வாதத்தை மீண்டும் உசுப்பிவிடுவதன் மூலம் தங்கள் காரியத்தைச் சாதிக்க முடியுமென்று அனைத்துலகப் பிரிவினர் எண்ணியதன் விளைவே இத்தனை துரோக மற்றும் அரச உளவுப்பிரிவுக் கண்டுபிடிப்புகள் எல்லாம்.

ஆனால் இணையப் பிரச்சாரங்களை தொடர்ச்சியாக அவதானித்தால் இங்கு எந்த உளவுப்பிரிவும் இல்லை இருப்பது அதிகாரம் பறிபோய்விடுமே என்னும் அச்சம் ஒன்றுதான் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். கடந்தகாலங்களில் மற்றவர்களை ஓரங்கட்டுவதிலேயே குறியாக இருந்த காஸ்ரோவின் தொண்டரடிப்பொடிகள் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இம்முறை தெரிவு செய்திருக்கும் துருப்புச் சீட்டு மாவீரர் தினமாகும். தங்களுக்கு பிடிக்காத, தங்களுக்கு உடன்படாத போக்குடையவர்களை ஓரங்கட்ட ஒன்றில் துரோகியென்று முத்திரை குத்துவது இல்லாவிட்டால் குறித்த நபரின் குடும்பம் மனைவி பிள்ளைகளை சந்திக்கு இழுத்து அவமானப்படுத்துவதன் மூலம் அவர்களை அரங்கிலிருந்து வெளியேற்றுவது. கடந்த இரண்டு வருடங்களாக, இதனையே அனைத்துலக பிரிவு தமது எதிர்ப்பிரச்சார யுக்தியாக செய்து வருகின்றது. இதற்கு அண்மைய உதாரணம், பிரித்தானிய தமிழ் போரத்தின் முக்கிய உறுப்பினரும் பிரித்தானிய மாவீரர் ஏற்பாட்டுகுழுவைச் சேர்ந்த ஸ்கந்தா என்பவரை துரோகியாக்கியதுடன், அவரது மகள் குறித்து வெளியிட்ட மலினத்தனமான செய்தியை கறுப்பு என்ற தமது மின்னஞ்சல் மூலம் வெளியிட்டதை குறிப்பிடலாம். இதன் மூலம் எவ்வளவு வக்கிர எண்ணங்கொண்டவர்கள் புலிகளில் இருந்திருக்கிறார்கள் என்று வெளிப்பார்வையில் உணரமுடிகிறது அல்லவா?

——

புலிகளின் அழிவுக்கு பின்னர் இடம்பெற்ற மாவீரர்தின நிகழ்வுகள் அடிப்படையிலேயே குழப்பமானவைதான். புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணித்துவிட்டதை அறிந்தும் அதனை உரிய முறையில் மக்களுக்கு தெளிவுபடுத்தாது மக்களை முட்டாள்கள் ஆக்கும் நடவடிக்கையொன்றையே முன்னெடுத்தனர். விமர்சனங்களுக்கு அப்பால் மண்ணிலிருந்து இறுதிவரை ஓடித்தப்ப நினைக்காத அந்தத் தலைவனுக்கு தனது குடும்பத்தையே பலிகொடுக்கத் தயங்காத தலைவனுக்கு அவரை நேசித்த மக்கள் ஒரு சுடரேற்றி தங்கள் மரியாதையைச் செய்ய முடியாதவகையில் முடமாக்கப்பட்டு இருக்கின்றனர். பிரபாவுடன் இறுதிவரை களமாடி வீழ்ந்த சூசை,பொட்டு ,பாணு , ஜெயம்,லக்ஸ்மன் மற்றும் சரணடைந்தவர்களான யோகி ,புதுவை, கரிகாலன், பாலகுமாரன் ஆகியோரின் மாவீரர் அந்தஸ்த்து எத்தகையது என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாதவர்களாகவே இந்த இரு பிரிவுகளும் இருக்கின்றனர். சரணடைந்தும் கொல்லப்பட்ட நடேசன், புலித்தேவன் ,ரமேஸ் போன்றவர்களை எந்த பட்டியலில் இணைப்பது என்று இன்னும் முடிவாகவில்லை போலும். ஒருவேளை துரோகிப் பட்டியலிலும் இணைக்கப்படலாம். சூசை ,பாணு ,ஜெயம் போன்றோரின் உடல்கள் காண்பிக்கப்பட்ட போதும்கூட இன்னும் எவருமே அவர்களுக்காக சிடியோ பாடலோ வெளியிடவில்லை. எங்கும் ஒரு அஞ்சலியையும் காணவில்லை. இந்தப் பின்னனியில் தற்போது மாவீரர்தினத்தை பாகம் பிரித்து வியாபாரம் செய்யும் முயற்சியில் அ.உ.பிரிவு இறங்கியிருக்கிறது.

சிறிலங்கா அரசாங்க இணையத்தளம் இறுதி போரில் கொல்லப்பட்டதாக தங்களால் அடையாளங்காணப்பட்டதாக வெளியிட்ட பட்டியல்:

http://www.defence.lk/new.asp?fname=20090621_02_TerrList

இந்தப் பிரச்சனைகளின் ஆணிவேரைத் தேடிப்பார்ப்போமானால் ஒரு விடயம் நன்றாக விளங்குகின்றது. புலிகளின் அழிவைத் தொடர்ந்து புகைய ஆரம்பித்த புலம்பெயர் புலிப்பினாமிகளின் பலப்பரிட்சை இப்போது உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. எவர் நடாத்தும் மாவீரர் தினத்தில் மக்கள் அதிகமாகக் கூடுகின்றனரோ அவர்களுக்கே புலத்தில் மக்கள் செல்வாக்கு அதிகம் என்பதைக் காண்பிப்பதுதான் இந்தப் பலப்பரிட்சையின் நோக்கம்.

இந்தவருடம் பிரான்சில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியின் போதே இந்தப் பலப்பரிட்சை துளிர்விட்டது. இந்த விழாவை கே.பியின் ஆட்கள் நடாத்துகின்றனர் என்று குறிப்பிடும் பல்வேறு அறிக்கைகளை பிரான்ஸ் ரிசிசி குழுவினர் வெளியிட்டிருந்தனர். அத்துடன் அதனை புறக்கணிக்குமாறும் மக்கள் மத்தியில் பிரச்சாரங்களைச் செய்தனர் எனினும் மக்கள் அதனைப் பொருட்படுத்தாது பெருவாரியாக விளையாட்டுப் போட்டியில் பங்குகொண்டிருந்தனர். இதனால் வெருண்டுபோன ரிசிசி குழுவினர் ஆவேசத்தில் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட மக்களை மந்தைகளாக விபரித்து தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாகத்தான் இன்று மாவீரா தினமும் தங்கள் கையை மீறிப் போய்விட்டால் அனைத்துலக கட்டமைப்பு என்பது செல்லாக் காசாகிவிடும் என்ற பயம் அவர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது. இந்த அச்சமே இவ்வளவு அறிக்கைகளுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் காரணம். எனினும் மக்கள் இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கின்றனர்.சிங்களவர்களை மொக்குச்சிங்களவன் என்று சொல்லிப்பழக்கப்பட்ட தங்களை மெத்தப்படித்த அறிவாளிகளாக காட்டும் டயஸ்போறா தமிழ் மக்களின் அறியாமையே இவர்களது பலமாகவும் இருக்கிறது.

மாவீரர் தினம் நவம்பர் 27 இல் நினைவுக்கூரப்படுவதாகும். ஆனால் எமது பஞ்சத்துப்புலிகளோ மாவீரர் தின திருவிழாவுக்கான உபயகாரருக்குரிய உருத்துக்கான 5ம்கட்ட போரை யூலை மாதமே ஊடகங்களில் தொடங்கிவிட்டனர். மறுஆய்வால் அவதானிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட அந்த குப்பைகளை இங்கு அறிவுகொண்ட மக்களுக்காக மட்டும் ஒரு சேர தொகுத்துள்ளோம்.

http://www.tamilkathir.com/news/5326/57//d,view.aspx (சி. பாலச்சந்திரன்)
http://www.eutamil.com/?p=25354 ( இசைப்பிரியா)
http://www.tamilkathir.com/news/5366/58//d,view.aspx (இசைப்பிரியா)
http://www.tamilkathir.com/news/5280/57//d,view.aspx (இசைப்பிரியா)
http://www.tamilkathir.com/news/5163/57//d,view.aspx (இசைப்பிரியா)
http://www.tamilkathir.com/news/5182/57//d,view.aspx (தமிழ்ச்செல்வன்)
http://www.tamilkathir.com/news/5033/57//d,view.aspx (தமிழ்ச்செல்வன்)
http://www.tamilkathir.com/news/5168/57//d,view.aspx (சுவிசிலிருந்து கதிரவன்)
மேலே உள்ள‌ இணைப்பில் உள்ள 13பத்திகளையும் அறிவுகொண்ட தமிழர்கள் யாராவது வாசிப்பீர்களானால் ஒரே நபரே எழுதியுள்ளார் என்பது தெட்டத்தெளிவாக புரிவீர்கள்.இந்த குப்பைகளை கொட்டுவதற்கு தமிழ்செல்வன், இசைப்பிரியாக்களின் பெயர்களும் தேவைப்பட்டுள்ளது மக்களின் பிரதி நிதிக்கு. இந்தக்குப்பைகளின் உற்பத்தி டயஸ்போறா தமிழர்களின் புறக்கோட்டையான (பெற்றா) பாரீஸ் லாச்சப்பலில் இருந்தே தொடங்குகிறது.
http://www.eutamil.com/?p=25276 (ஈசன் குலசேகரம்- நா.க.அ(ஜ))
http://www.pathivu.com/news/18489/57//d,article_full.aspx (ஜெயானந்தமூர்த்தி)
http://www.eelampress.com/2011/10/37297/ (அனைத்துலக இரும்பொறை பிரிவு)
http://www.yarl.com/forum3/index.php?showtopic=92668 (கருத்துதளம்)
http://www.ibctamil.fm/Vanni%20Kalam.html (இரட்டை நிலைத்தளம்)
http://www.ethirinews.com/?p=20027 (பொழுதுபோக்கு தளம்)
http://inioru.com/?p=23279 (மாற்றுகருத்தாளர்)
http://thesamnet.co.uk/?p=29789 (மாற்றுகருத்தாளர்)
http://sathirir.blogspot.com/2011/10/27.html (ஒருபேப்பர்)
http://www.eelam5.net/news/index.php?mod=article&cat=esa&article=3403 (தலைமைசெயலக ஆதரவு தளம்)


இதுவரைக்கும் மாவீரர்தினத்தை அடிப்படையாக் கொண்டு 50 பத்திகள் பல்வேறு பெயர்களில் எழுதப்பட்டிருக்கின்றன ஆனால் எதிலும் மாவீரர்கள் பற்றியோ அவர்களது அர்ப்பணிப்புப் பற்றியோ பதிவில்லை. அனைத்துமே அவர்களை வைத்துக் கொண்டு இடம்பெற்றுவரும் பிழைப்புவாதச் சண்டைகளின் எதிரொலிகள் மட்டுமே. அவற்றைக் கருத்தில் கொண்டே இதனை எனது 57வது பிறந்த நாளில் 57 வது பத்தி என்று அழைக்கின்றேன்.எனது 57வது பிறந்த இறந்த நாளை யார் கொண்டாடப்போகிறீர்கள்? யார் உரித்துக்கொண்டாடப்போகிறீர்கள்?  இதன் பின்னர் மேலும் சில பிழைப்புவாத பத்திகள் வெளிவராது இருந்தால் 58வது பத்தியில் இன்னும் சில சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.

-திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன்

*
 1. paddathari MA says:

  மாவீரர் தினம் பிரித்தானியாவில் இரண்டு தியெட்டரில் இல்லை.ஆறு தியெட்டரில் நடக்குது.
  வின்சர், ராஜா, ராணி,லிடோ, மனோகரா, சிறீதர்,ஆகிய அகலவெண் திரையில் பார்க்கலாம். ரிக்கட்டுக்கு முந்துங்கள்.

 2. தூக்குதூக்கி says:

  தமிழ் அரசியல் கைதிகளின் அடிப்படைத் தேவைகளையாவது கொடுக்க உதவுங்கள்.

  இலங்கை சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தமது அத்தியாவசிய தேவைகளுக்கான சிலவற்றுக்கான உதவிகளை வேண்டியுள்ளனர்.
  அவசர தேவைகளான சவர்க்காரம் , பற்பசை , பற்தூரிகை போன்றவற்றை புலம்பெயர் சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கின்றனர். இவர்களது குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதும் இவர்களைச் சென்று பார்க்கவோ பொருட்களை வழங்கவோ பொருளாதார வசதிகள் இல்லாதுமுள்ளனர்.

  உதவி வேண்டும் சிறைச்சாலைகளின் விபரமும் உதவி வேண்டும் தமிழ் கைதிகள் எண்ணிக்கையும் :-
  அனுராதபுரம் சிறைச்சாலை – 95பேர்.
  கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலை – 240பேர்.
  கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை – 200பேர்
  மொத்தம் = 535பேர்.

  அனுராதபுரம் 95பேர் :-
  பற்பசை = ஒருவருக்கு – 140.00ரூபா = 95 x 140.00ரூபா =13300.00ரூபா
  பற்தூரிகை = ஒருவருக்கு 2 = 120.00ரூபா = 95 x 120.00ரூபா = 11400.00ரூபா
  சவர்க்காரம் ஒருவருக்கு 4 = 140.00ரூபா = 95 x140.00ரூபா = 13300.00ரூபா
  மொத்தம் = 38000.00ரூபா (அண்ணளவாக யூரோவில் 260.00€)

  கொழும்பு புதிய மகசீன் 240பேர் :-
  பற்பசை = ஒருவருக்கு – 140.00ரூபா = 240 x 140.00ரூபா =33600.00ரூபா
  பற்தூரிகை = ஒருவருக்கு 2 = 120.00ரூபா = 240 x 120.00ரூபா =28800 .00ரூபா
  சவர்க்காரம் ஒருவருக்கு 4 = 140.00ரூபா = 240 x140.00ரூபா =33600 .00ரூபா
  மொத்தம் = 96000.00ரூபா (அண்ணளவாக யூரோவில் – 655.00€)

  கொழும்பு விளக்கமறியல் 200பேர்:-
  பற்பசை = ஒருவருக்கு – 140.00ரூபா = 200 x 140.00ரூபா =28000.00ரூபா
  பற்தூரிகை = ஒருவருக்கு 2 = 120.00ரூபா = 200 x 120.00ரூபா =24000 .00ரூபா
  சவர்க்காரம் ஒருவருக்கு 4 = 140.00ரூபா = 200 x140.00ரூபா =28000 .00ரூபா
  மொத்தம் = 80000.00ரூபா (அண்ணளவாக யூரோவில் – 545.00€)

  மொத்தம் தேவைப்படும் பொருட்களும் விலைகளும்:-
  பற்பசை = ஒருவருக்கு – 140.00ரூபா = 535 x 140.00ரூபா = 74900.00ரூபா
  பற்தூரிகை = ஒருவருக்கு 2 = 120.00ரூபா = 535 x 120.00ரூபா = 64200.00ரூபா
  சவர்க்காரம் ஒருவருக்கு 4 = 140.00ரூபா = 535 x 140.00ரூபா = 74900.00ரூபா
  மொத்தம் = 214000.00ரூபா (அண்ணளவாக யூரோவில் – 1460.00€)

  இவ்வுதவியை புலத்து உறவுகளாகிய உங்களிடமிருந்து நேசக்கரம் வேண்டுகிறது.
  எங்களுக்காக வாழ்ந்தவர்களுக்கான அடிப்படைத் தேவைகளையேனும் கொடுத்து உதவுவோம்.

  உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள :-
  முகவரி:
  Nesakkaram e.V
  Hauptstr – 210
  55743 Idar-Oberstein
  Germany
  Shanthy Germany – 0049 6781 70723
  மின்னஞ்சல்: nesakkaram@gmail.com
  Vereinsregister:
  AZ- VR 20302
  Amtsgericht 55543 Bad Kreuznach
  Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8
  Bank information
  Germany:
  NESAKKARAM e.V.
  55743 Idar-Oberstein
  Konto-Nr. 0404446706
  BLZ 60010070
  Postbank Stuttgart
  Other countries:
  NESAKKARAM E.V
  A/C 0404446706
  Bank code – 60010070
  IBAN DE31 6001 0070 0404 4467 06
  Swift code – PBNKDEFF
  Postbank Stuttgart
  Germany

 3. Thavam says:

  ஒன்றாக ஒரேபாயில் படுத்து எழும்பிய உங்களுக்குள்ளேயே இவ்வளவு முரண்பாடு. யாராவது ஒரு தரப்பு விட்டுக்கொடுத்து மாவீரரை தூய்மைப்படுத்துவதைவிட்டு நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று விடாப்பிடியாய் நிற்கிறீர்கள். ஆனால் எடுத்ததுக்கு எல்லாம் மாவீரரின் வழியில் தலைவரின் பாதையில் என்று கோசம் மட்டும் போட்டுவிடுவீர்கள். இதுதான் தலைவர் விட்டுசென்ற பாதையும் வழியுமோ?

  ஒரே குடும்பத்துக்குள்ளேயே விட்டுக்கொடுத்து உங்களது அதிகாரப்போட்டிக்காக இறந்து போன உத்தமர்களை தூய்மைப்படுத்துங்கள். அதிகாரப்போட்டி போடும் எவரும் இனி மாவீரராகப்போவதில்லை என்பது தெரியும்.

  இதிலேயே விட்டுக்கொடுப்பு செய்யமுடியாத நீங்களா தமிழருக்கு தமிழீழமும் அரசியல் உரிமையும் எடுத்துதரப்போகிறீர்கள்?

  சீ வெட்கம்.

 4. ilango says:

  புலத்தில் நடக்கும் இறுதி மாவீரர்தினமாக கூட இது அமையலாம் எனஎதிர்வுகூறப்படுகிறது.

  ஏனெனில் இந்த இரு தரப்புக்கும் நடக்கப்போகும் குத்துவெட்டுக்களை பார்த்துக்கொண்டிருக்கும் எதிரி அவ்வெவ் நாட்டு பாதுகாப்பு தரப்புக்கு அசம்பாவிதம் நடக்கப்போவதாக அறிவித்தால் இம்முறை நடப்பதும் பாதுகாப்புக்காரணங்களால் தடைப்படலாம் என்று சிலர் பேசிக்கொள்கின்றனர்.

  பிரான்சில் பரிதியின் புட்டுக்கடைக்கோஸ்டியும் பிரித்தானியாவில் உலக நாயகன் கமலும் கம்பேகர் பரமேசும் கோஸ்டி மோதலை ஏற்படுத்த திட்டம் வகுப்பதாக சொல்கினம்.

  எதுக்கும் பார்த்து நடவுங்கோ என் சனமே.

  உண்மையில் மாவீரரை மனதார நேசிப்பவர்கள் திருவிழாவுக்கு போவது மாதிரியில்லாமல் வீடுகளிலேயே நினைந்துருகி அகவணக்கம் செலுத்தலாம்.

  இந்த மாவீரரை பாகப்பிரிவினை செய்வோரை தண்டிக்க இதுவே வழி.

 5. cut and paste Kanthu says:

  மாவீரர் நிகள்விற்காக உலகத்தமிழர் “பளையோரமைபு” பெருமையுடன் வளங்கும்
  “புட்டும் புண்ணாக்கும்” விசேடமாக புலம்பெயர் தேசங்களில் இருந்து இயக்கப்படும் வானொலி
  வெடிவால் அறிவிப்பாளர்கள் பங்குபற்ருவார்கள் ,,,,,,,விபரம் விரைவில்ல்ல்ல்ல்ல்

 6. indrajith says:

  சுவிஸ் பொங்குதமிழ் பிரகடனம் 2011

  ஒரு மாவீரர் தினமே நடத்தப்படவேண்டும் என்ற நோக்கில் பிரான்சில் ஒர் ஒற்றுமை முயற்சி கடந்த மாதம்18ம் திகதி பிரான்ஸ் புற நகர் பகுதியான மொன்றியலில் 350 முதல் 500 வரையான இருபகுதி ஆதரவாளர்கள் மக்கள் சமூக பிரதி நிதிகள் முன்னிலையில் நடாத்தப்பட்டது.

  இங்கு சமூகம் தந்த அனைத்துலகபிரிவின் பிரான்ஸ் தலைவர் பரிதி மற்றய தரப்பான தலைமைச்செயலகத்தை சேர்ந்த சுரேஸ் (அமுதன்) ஆகியோர் ஓர் உடன்பாட்டுக்கு வந்து இருதரப்பும் சேர்ந்து பிரான்ஸில் மாவீரர் தினம் நடாத்துவது என்று அங்கு கூடியோர் முன் நிலையில் உறுதி வழங்கப்பட்டது. அங்கு கூடியிருந்தவர்களும் ஒன்றுபட்டுவிட்டார்கள் என்றே நம்பினர்.

  ஆனால் அடுத்த சில தினங்களில் சுவிசில் நிகழ்ந்த பொங்குதமிழ் நிகழ்வில் கூடிய ஏனைய நாட்டு அனைத்துலக கிளைப்பிரகிருதிகள் கூடி ஓர் முடிவுக்கு வந்தனர். அதாவது அனைத்துலக பிரிவை மீறி எவரும் மாவீரர் தினம் நடாத்தமுடியாது. மற்றும் தலைமை செயலகம் என்று சொல்பவர்களுடன் கூடி எந்த நிகழ்வையும் நடாத்தப்போவதில்லை என பொங்குதமிழ் பிரகடனத்தை எடுத்தனர்.

  மறு நாளே லாச்சப்பலில் அனைத்துலகபிரிவினரின் மாவீரர் தின தனி ஒழுங்கு தொடர்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

  ஒற்றுமைக்கு பங்கம் ஏற்பட்டது.

  சங்கே முழங்கு இதுவே 2011க்கான பொங்குதமிழ் பிரகடனம்

  தமிழரின் தாகம் தணியாத தாகம்………..

  • வாணன் says:

   சுவிசில் செயல் பட்டாளர்களின் யோக்கியத்தை பாருங்கள்

   (1)குலம்.. சுவிஸில் புலிகளின் பொறுப்பாளராக திருமணமே செய்யாத பிரமச்சாரி எனக் கூறிக்கொண்டு ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றியது.

   (2)அல்பேட்.. மேடைகளில் பினாமிகளின் பேச்சாளராகவும் இருந்து இன்று செங்காளனில் பாரியளவில் வியாபரத்தளம் அமைத்ததுள்ளார்

   (3)ரகுபதி.. பலஇலட்சங்களுக்கு அதிபதி தான் வசிக்கும் மாநகரில் வீடு கட்டியமை

   (4)அப்புல்லா.. மக்கள் பணத்தைசூறையாடி சிங்களிப் பகுதிகளில் காணிகள் வேண்டியமை

   (5)கோட்சுதா.. மக்களை அச்சுறுத்தி என்றும் களைபுடுங்குவோம் என்ற வாக்கியத்தை பயன் படுத்தி பல ஆயிரக்கணக்கான பணங்களை இவன் ஏமாற்றியுள்ளான் மற்றான் மனைவியுடன் குடும்பம்நடாத்துவதில் வல்லவர் பலயுக்திகளில் மக்கள் பணங்களை ஏமாற்றியமை.

   (6)கருணா.. தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் இலட்சக்கணக்கான பணங்களை தனது மனைவியின் நாமத்தில் கொழும்பில் வீடுகள் வேண்டியமை

   (7)மாம்பழம்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் பணங்களை வங்கிகள் மூலம் போலிபத்திங்களை வழங்கி மக்களையும் வங்கிகளையும் ஏமாற்றியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்மை

   (8)சசி… பலஆண்டுகளாக பினாமிகளின் தலைவனாக செயல்பட்டமை உண்டியல் சேவைக்காக சுவிஸ்நாட்டில் பேர்ன் நகரில் வியாபார தளம் அமைத்துள்ளமை இங்கு முக்கியமா குறிப்பபிடத்தக்கது

   (9)லகி.. இவர் வெள்ளைசேட்டு அணிந்து மக்களிடம் பணம் வசூலிப்பதில் வல்லவர் தற்பொழுது மிக்சர் முறுக்கு சாப்பாட்டு கடை நடாத்தி வருகிறார்

   (10)கருணாநிதி… பலஆண்டுகளாக பணம் வசூலித்த இவர் தனது தாய் தந்தைதனை சகோதரர்களை பத்து வருடங்களுக்கு முன்னரே. இந்தியாவில் வைத்து பராமரித்து வந்துள்ளார் தற்பொது தனது தமிழ் மக்களின் பணத்தில் மைத்துனரை சுவிஸிற்கு அழைத்துவந்து தனது இல்லத்தில் வைத்து பராமரித்து வருகிறார் மைத்துனர் பத்திரம் இல்லாமல் வேலை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.. மக்களை அச்சுறுத்துவதில் வல்லவர்.. பலவகையான யுக்திகளை பயன் படுத்துவதிலும் வல்லவர்..

   (11)குட்டி.. இவர் குலத்தின் காவலாளி கைத்தடி 2004 ஆண்டு வெள்ளை சேட்டுகாரர்களினால் நடாத்தப்பட்ட nஐனீவா ஊர்வலத்தில் குலம் அவர்களுக்கு காவல் புரிந்தவர் பலரிடம் அடியும் வாங்கியவர்

   (12)மூர்த்தி.. இவர் பல பொது இடங்களில் நின்று பணம் சேகரிப்பவர் கோயிலகள் கடைகள் அவரின் பணம் சேகரிப்பு நிலையங்களாகும் இவரும் பல இலட்சக்கணக்கான பணங்களை சூறையாடியுள்ளார்.

   (13)சீலன்… இவரின் யுக்தி சிரிப்புக்கிடமானது. இவர் மக்களிடம் பெற்ற பணங்களில் சகோதரன் பெயரில் இலண்டனில் பெற்றோல் நிலையம் வேண்டியுள்ளார்.

   (14)பரம்.. கோயில் பக்தி முத்தி கடவுளின் பணங்களை தந்திரமாக எடுத்து தனது பெயரில் பலவீடுகள் அமைத்துள்ளார்.

   (15)றங்கன்… மக்கள் பணங்கள் என்றால் இவருக்கு கொள்கை ஆசை. சேகரிக்கும் பணத்தை வட்டிக்கு விட்டு உழைப்பதில் வல்லவர். இவர் கொழும்பில் மக்கள் பணத்தில் பெரிய மாளிகை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது

   (16)இந்திரன்.. இறுதிவரைக்கும் மக்கள் மத்தியில் பணங்கள் சேகரித்தவர் விடுதலை போராட்டத்ததை பற்றி அறிஞர் போர்வையில் கதைத்து பணம் சேகரிப்பவர்

   (17)யசோ… இவருக்கு வெள்ளைசேட்டு என்றால் பிடித்தமானது ஒன்றாகும். பல இடங்களில் மக்களை அச்சுறுத்தி பணம் பெறுவதில் வல்லவர் குலத்தின் காவலாளியும் கூட. இவர் மக்களிடம் சேகரித்த பணத்தில் இவரின் மனைவி பெயரில் இலங்கையில் பல சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

   (18)உதயன்.. இவர்தான் கதையின் கதாநாயகன் பிறர் மனைவியை நண்பனின் மனைவியை அனுபவித்து விட்டு நண்பனுக்கு தனது விடையம் தெரிந்து விட்டபடியால் நண்பனையே பிறரின் துணையுடன் ஆயுதமுனையில் அச்சுறுத்திக்கொண்டு அலைபவர. பல குடும்பங்கள் பிரிவதற்க்கு இவர் காரணமானவர. மக்கள் பணத்தில் இரண்டு வீடுகளை சுவிஸில் அமைத்து வருவதாக தெரியவருகிறது.

   போராட்ட உணர்வு கொண்ட மக்களே உங்களை தங்களின் சுயனலத்திற்காக பயன்படுத்தி துன்பப்படும் மக்களின் அவலம் அறியாது போராட்டம் என்ற போர்வையில் தங்களின் தலைமைகளையும் ஏமாற்றி அப்பாவி மக்களின் பணத்தை சூறையாடி ஒன்றுமறியா அப்பாவிகளின் மனைவிகளின் வாழ்வையும் சூறையாடி தங்களின் வாழ்வை வழப்படுத்தியவர்களுக்கு உங்களின் தண்டணை என்ன? எங்கள் மக்கள்தான் வெள்ளை சேட்டணிந்து ஏமாற்றி அலைந்து திரியும் வேஷக்காரருக்கு அதிகபட்ஷதண்டனை வழங்கவேண்டும்.

   பாதிக்கப்பட்ட நபர் புலிகள் தனதும் தனது மனைவியின் பெயரிலும் வைப்பிலிடப்பட்ட பணத்தை அனுபவிக்க முடியாமல் தனது குழந்தைகளுடன் நிம்மதியாக வாழவும் முடியாமல் அலைந்து திரிவதாக அறியமுடிகின்றது.

 7. indrajith says:

  பிரான்சில் பரிதியின் கலக்காரர்கள் புட்டுக்கடை மற்றாஸ் கபே ஜோதி – கிருஸ்ணா ஆகிய இரு ரவுடிகளேமே

  சீட்டு சுத்திய ஜோதி புட்டுக்கடை மற்றாஸ் கபே உரிமையாளர் பரிதியுடன் தீவுப்பகுதியில் நின்று பெண்பிரச்சனையில் இயக்கம் பிடித்து வைத்து விலகி வந்தவர்.பிரான்சில் கஸ்ரப்பட்டு உழைத்து சீட்டுக்கட்டியவர்களிடம் றீகனின் அதிகாரத்தை பயன்படுத்தி பலரது சீட்டுக்காசுகளை ஏப்பம்விட்டுவிட்டு பரிதிக்கு யால்ராபோட்டுக்கொண்டு றீகனுக்கு பின்னால் ஒளித்துக்கொண்டு இருப்பவர். இந்த சுத்திய சீட்டுக்காசுகளில் இவர் வேறு இவரது பினாமிகளின் பெயரில் மட்டும் பிரான்சில் 6 கடை வைத்துள்ளார்.

  பிரான்சில் இயக்கத்தின் காசை வேறு ஒரு நாட்டுக்கு கைமாற்றும் போது அடிப்பட்டுவிட்டதாக 40ஆயிரம் யூரோவை இவரே சுற்றிவிட்டதாக ஓர் தகவல் உள்ளது

 8. போர்குரல் says:

  தமிழரசன்
  தலைமை செயலகம்

  உங்கடை வானொலி மேடை பேச்சுக்கேட்டேன்.

  புலிகள் இயக்கத்தில் மத்தியகுழு எப்பொது இருந்தது?

  கேள்வி கேட்க வந்த சாத்திரியாரும் யாரோ மத்தியகுழுவில் இருந்தவர்கள் வெளி நாட்டில் இருக்கிறார்களாம்?

  என்னப்பா ஆளாளுக்கு தமாசு பண்ணுறீங்க.

  பிரபாகரன் மத்தியகுழு பிரச்சனையால் தான் ஓர் ஏகபோக முடிவு எடுக்ககூடிய வகையில் புலிகள் இயக்கமே 1980களில் முதல் பிளவே ஏற்பட்டது. மத்தியகுழு என்று நூறு கருத்து மோதட்டும் என்று சொல்பவர்களுடன் உடன்படாது இருந்தவர் பிரபா. அதாகப்பட்ட பிரபாகரன் புலிகள் இயக்கத்தில் மத்திம குழு வைப்பதை விரும்பாதவர்.

  சும்மா போகடி போக்காக தன்னொடு கூட இருந்தவர்கள் சாகும் போது ம.குழு உறுப்பினர் என்று உரிமை கோரப்பட்டது. ஆனால் எல்லா முடிவுகளையும் ஏகபோகமாக இயக்கத்தில் தீர்மானிப்பவர் தலைவர் தான். நீங்க தமிழரசன் சின்னப்பிள்ளைதனமாய் பேசுறீங்க.

  திலகர் முந்தி அனைத்துலக பேச்சாளராக இருந்தபோது மீடியாவுக்கு பேட்டிகீட்டி கொடுக்கேக்க ம.குழு உறுப்பினர் என்று சொல்ல வெளிப்பார்வைக்கு காட்ட ஜன நாயகத்தை நிலை நாட்ட தலைவர் பெயரளவில் திலகருக்கு கொடுத்த அதிகாரப்பதவியே தவிர லோறன்ஸ் திலகர் இயக்கத்தில் எப்ப எந்த நாளில் ம.குழுவில் இருந்தவர்.

  சும்மா பகிடிகிகிடி விடாயுங்கோ.

  புலியையும் பிரபாகரனையும் தெரிந்திராத பெடியளுக்கு தலைவர் மத்திம குழு இருப்பதாக றீல்விட்டிருக்கிறார். நீங்களும் நம்பிவிட்டியள். மாத்தையாவின்ர பிரச்சனைக்கு பிறகு பிரதி தலைவர் என்ற பொறுப்பையே ஒருத்தருக்கும் கொடுக்காத கெட்டிக்கார தம்பி. கடற்படை ஆகாயபடை உலகத்தில் உள்ள எல்லாப்படையையும் வைத்துக்கொண்டு மத்திய மத்திம குழுவை வைத்திருந்தால் 80ல் சுந்தரம் செய்தமாதிரி கலகம் செய்தால் நிலமை என்னாகும் என்று அறிந்து வைத்திருந்த தீர்க்கதரிசி எல்லோ.

  நான் சொல்லுறது பொய் எண்ரால் ஆபிரிக்காவில் உள்ள தலயிட்ட கேட்டு சொல்லும் தம்பி தமிழரசன்.

  சாத்திரியர் நீங்கள் அந்த வெளி நாட்டில் உள்ள மத்திம குழு உறுப்பினர்களின் பெயர் லிஸ்றை வெளிப்படையாய் சொல்லுங்கோ ஒருக்கா? நானும் ஒருக்கால் அறிவம். சத்தியசீலனையோ கலாபதியை குண்டனை சொல்லுறீங்களோ?

  எனக்கு இந்த பதில் அறியாமல் நித்திரைவராது.

 9. ரஜீவன்(uk) says:

  புரியல,புரியல, எங்களுக்கு எதுவுமே சரியா புரியல-

  1.
  ஒரே கட்சிய சேர்ந்தவங்க, அதுவும் ஆளும் கட்சிய சேர்ந்தவங்க, அதிலும் இன்னாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நட்ட நடுவீதியில் பொதுமக்கள் மத்தியில் இருந்து ஆளையாள் சுட்டிருக்காங்க. ஒராள் செத்துப்போயிட்டாராம், இன்னொராள் சாவின் விளிம்புக்கு போய் பொழைச்சிக் கிட்டாராம். இதுட சூட்சுமம் எங்களுக்கு புரியல. தலம சரியில்லயா, அல்லது தலமய இப்போ யாரும் மதிப்பதில்லயா. தலம புரிஞ்சும் புரியாம இருக்கா. புரியல, புரியல எங்களுக்கு ஒண்ணுமே புரியல.

  3.
  நேற்றிரவு அந்தம்மா வானொலியில் 26 நிமிடம் அழுகின்றா, கதைக்கின்றா, இந்த தனமும் நானும்தான் கடந்த நாலு வருடமா மாவீரர் தினத்த நடாத்தினம். என்ர பேருலதான் எக்கவுண்ட் இருக்கு, நான்தான் சைன் பண்ணணும், எனக்குத்தான் கணக்கு வளக்கெல்லாம் வரும். ஆனா தனந்தான் காசி போடுவார், எடுப்பார் அத நான் கண்டு கொள்வதில்ல. இப்ப நான் கணக்க கேட்டவுடன், கணக்கு காட்டுறாரில்ல. மாவீரர் தினத்தயும் வேற எடத்தில நடத்துவம் என்கின்றார். அப்படி செய்ய ஏலாது தானே. நாம எல்லாரும் ஒண்டா, ஒரே எடத்திலதான் நடாத்த வேணும். வழமையான அந்த எடத்திலதான் நடாத்த வேணும். நானும், அந்த மாவீரர்ர அம்மாவும், தனமும்தான் தொடர்ந்து இத செஞ்சு வந்தம் என சொல்லிக் கொண்டே போகின்றார்.

  2006, 2007, 2008 களில் லண்டன் எக்சல் மண்டபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புடை சூழ, தீர்த்தக் களரிகள் போல் நடைபெற்ற அந்த மாவீரர் தினங்களை எண்ணிப் பார்க்கின்றேன். அனைத்து தமிழனும், அவன் புலியாக இருக்கட்டும், அல்லது எலியாக இருக்கட்டும். ஏதோ ஒரு வகையில் தன் உடன் பிறப்பை, உறவினரை, நண்பரை, நண்பரின் மகனை தொலைத்தவர்கள் அந்த எக்சல் மண்டபம் வந்து, மாவீர்களை வணங்கிய அந்த உன்னத காட்சி இன்னும் எங்கள் மனங்களை விட்டு பிரிய மறுக்கிறது. ஒரு சாமியை கும்பிடுவது போன்று அந்த மனித தெய்வங்களை கும்பிட்டார்களே. எனது வாப்பாவுக்கு 20 வருடங்களாக கோடாச்சுருட்டும், பாணிப்புகையிலயும் சப்ளை பண்ணிய புன்னாலைக்கட்டுவன் மாணிக்கத்தின் இருமகன்களும் அங்கு மாவீரராக இருந்ததால், என்வாப்பா பிளஸ் புண்ணாலைக்கட்டுவன் மாணிக்கண்ணன் சார்பாக நானும் அங்கு விஜயம் செய்வது வழமை.

  அந்தப்பெரிய எக்சல் மண்டபத்தை கிச்சென புக்பண்ணி, ஆயிரக்கணக்கான மக்களை படக்கென வரப்பண்ணி, பல லட்சம் பவுண்களை தடாரென வாரியிறைத்து, இந்த அம்மாவும், இன்னொரு மாவீரரின் அம்மாவும், தனமண்ணாவும் மட்டும்தான் செய்திருக்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது தல சுத்தோ சுத்தென சுத்துது.

  ஒரு இனம், ஒரு பரம்பரை அதுவும் ஆண்ட பரம்பரை, அந்த ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள, அங்கு, பல உள்ளங்களும், உயிர்களும் உயிரை கொடுத்து போராட, அதை காரணமாக காட்டி, இங்கு அந்த மண்ணின் மைந்தர்களை பகடை காயாக்கி, பேரெழுச்சி கொள்ள வைத்து, பணம் திரட்டி, விழா எடுத்து, உலகையே மலைக்க வைத்தது இந்த மூன்று பேரும்தான் எனும் போது, தமிழனின் திறமைக்கு முதலில் சலாம் போடத்தான் வேண்டும். ஆனால்
  அந்த மூன்று பேரும்தான் முழுத்தமிழனின் பணத்தையும் ஏப்பமிட்டுவிட்டு, இப்ப அங்கால கேபி அண்ணா முண்டாசு கட்ட, இங்கால ஏதோ ஒரு அகவம் குடை பிடிக்க, நடுவால இந்தம்மா குண்டக்கா மண்டக்கா பேசுவதை கேட்கும் போது, ஆக மொத்தமாக இவ்வளவு நாளும் குண்டுச்சட்டிக்கதானா குதிர ஓட்டிருக்கம். புரியல, புரியல, எதுவுமே புரியல.
  பிறந்தது தரித்திரமானாலும், இறப்பது சரித்திமாகட்டும் என்னும் உந்ததுதலில்தான் அன்று தொடக்கம் இன்றுவரை ஒவ்வொரு தமிழனும், தமிழ் பேசுபவனும் உரிமைக்காக ஓப்போட்டுக் கொண்டிருக்கின்றான். ஒப்போட்டுக் கொண்டிருக்கின்றோம். அதற்காக அவன் பனியிலும், குளிரிலும், சிக்கன் சொப்பிலும் இரத்தத்தை தண்ணீராக இறைத்து உழைத்த பணத்தை யாரோ விபரம் தெரியாத மூன்று பேருக்கு தாரை வார்த்திருக்கின்றான். அதற்கு நோ எக்கவுண்டன், நோ பெட்டிகேஷ், நோ மெம்பர்ஸ் எக்கவுண்ட், நோ இன்கம் அன்ட் எக்ஸ்பென்டீச்சர் எக்கவுண்ட், நோ பலன்ஸ் சீற். மை கோட்நெஸ்.

  இந்தம்மாவும் கேட்க மாட்டாவாம். அவரும் காட்ட மாட்டாராம். அது சரி இப்ப எவ்வளவு பலன்ஸ் இருக்கு என்பதையும் இந்தம்மா சொல்லல. எனக்கென்றால் இது கொஞ்சம் புரியுது. ஆனா முழுமயாக புரியல.

  உபயம்:தேசம் நெற்

  மாவீரர் தினத்தைக் கொண்டாட யாருக்கு யோக்கியதை இருக்கின்றது ? sosTamils பார்வையில்

  நிதியை சுருட்டி வைத்துக் கொண்டு அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லும் திருடர்களுக்கு மாவீர்கள் பெயரைச் சொல்ல தகுதி இல்லை .

  தலைமை பதவிக்காக அலைபவர்களுக்கு , கட்சியை வளர்க்க எந்த பொய்யையும் சொல்ல நினைப்பவர்களுக்கு சுய நலன்களுக்காக பொய்யுரைத்து நான் பெரிது நீ பெரிது என்று அலைபவர்களுக்கு மாவீரரை நினைக்க தகுதி இல்லை .

  மாவீரர் தினத்தை கடந்த பல ஆண்டுகளாக செய்தோம் என்பது மட்டும் உங்களின் தகுதி என ஏற்றுக்கொள்ள முடியாது.
  கே.பி என்ற துரோகியும் , கருணா என்ற துரோகியும் , ஒரு காலத்தில் மாவீரர் தினத்தைக் கொண்டாடியவர்கள் தான் . வருடங்களை எண்ணிப் பார்த்தல் உங்கள் எல்லோரையும் விட அவர்கள் அதிக வருடங்கள் கொண்டாடியவர்கள் .

  ஓரிருவர் அல்ல இலட்சக் கணக்கானவர்கள் மரணித்திருக்கின்றார்கள் . அவர்கள் கனவுகளை நிறைவேற்ற பாடுபடாது வெறுமனே கொண்டாட்டம் வைக்க முனைவது அவர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகம் .

  நேற்று நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை இன்று நீங்கள் யார் என்பது தான் மாவீரர் தினத்தை கொண்டாட தகுதியை தரும் .

  மாவீரர்களை உணமையாக நேசிப்பவர்கள் சர்வதேச பிரச்சாரத்தை செய்யுங்கள் . மாவீரரருக்கு அஞ்சலி என ஆயிரம் ஆயிரமாக செலவழிப்பவர்கள் , சர்வதேச பிரச்சாரம் செய்ய பணம் இல்லை என்பது , சர்வதேச ஆதரவை பெற முயலாமல் மாவீரர் கல்லறைக்கு பணம் செலவழிப்பதும் மாவீரர்களை கனவை நனவாக்கும் செயல் அல்ல .

  தமிழினமே உனக்கு மாவீரர் தினம் கொண்டாட என்ன தகுதி இருக்கின்றது ?

  ரஜீவன்
  படித்ததில் அறிவுக்குப்பட்டது

 10. கோமகன் says:

  இரு நாட்களுக்கு முன்னர் டி.ஆர்.ரி தமிழொலி வானொலியில் கேட்டதில் ஒன்றுப்பட்டு பிரான்சில் மாவீரர் தினம் செய்ய பேரவை தலைவர் திருச்சோதி 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்துபதில் தருவதாக வானொலியில் கதைத்த தமிழரசன் கூறினார்.

  பதில் என்ன? சொல்லப்பட்டது என்பது எனக்கு தெரியாது. ஆனால் அது நடக்கப்போவதில்லை என்பது தெரிகிறது.

  எனக்கு தெரிய அனைத்துலக செயலகம் தாம் நடத்தும் மாவீரர் தின செலவுக்கென ரிக்கற் அடித்து காசு ஏரியா ஏரியாவாக சேர்த்துக்கொண்டுவருகிறார்கள்.மக்களும் மாவீரர் தினமெட்டதும் கேள்வி கேட்பதாக தெரியவில்லை. வாரிக்கொடுக்கிறார்கள்.

  ஒரு ஏரியாவில் ஒரு குடும்ப உறவினர்களே கொடுத்த நான் கண்ணால் கண்ட விபரத்தை இங்கு சொல்கிறேன்.ill de france)(மாவீரர் தின கோலுக்கு 20ஆயிரம் யூரோவாம்

  ஒருவர் 300 யூரோ கொடுத்தார். அவரது மைத்துனர் (முன்னாள் போராளி சகோதரியின் குடும்பத்துடன் இருப்பவர் தனியாள்) 200 யூரோ, இன்னொரு சகலன் 75 யூரோ (இவரும் முன்னாள் போராளி) நான் ஒரு அலுவலாக போன இடத்தில் மாட்டுப்பட்டுக்கொண்டன் என்னிடமும் கேட்டனர் அங்கு தர்க்கப்படவா முடியும் பொக்கற்றில் இருந்த 50 யூரோ கொடுத்தேன்.

  இவ்வளவும் ஒரு வீட்டுக்குள் சேகரிக்கப்பட்ட பணப்பட்டுவாடா மொத்தம் 625 யூரோ.

  மிகுதி சேகரிப்பின் அளவை மக்கள் தீர்மானியுங்கள்?

  சென்ற வருடமும் இதேயளவு சேகரிக்கப்பட்டே இருக்கும். சென்றவருடம் இம்முறைமாதிரி குழப்பமும் இருக்கவில்லை. சென்ற முறை செலவின் மொத்த செலவு என்ன மீதி என்னவென்று யாருக்கும் தெரியாது? இம்முறையும் இதுதான் நடக்கப்போகிறது.

  ஏரியாக்காரர் சென்றபின்னர் எனக்கு தெரிந்த இரு மாவீரர் தின ஏற்பாடு பற்றி அங்கு சொன்னபோது அவர்களுக்கு எதுவும்
  தெரிந்திருக்கவில்லை. நான் பாரிசுக்குள் இருப்பதால் இந்த சண்டைகள் தெரிந்திருந்தது.

  அப்போது முன்னாள் போராளி நண்பர் சொன்னார். நான் வழமையாக மாவீரர்தினத்துக்கு கொடுக்கிறனான்.அதை அவங்களுக்காக கொடுத்துவிட்டேன்.இவங்கள் தங்கட பொக்கற்றிக்குள் வைச்சால் என்ன செலவளிச்சால் என்ன தனக்கு செய்ய வேண்டிய கடமைக்கு செய்துவிட்டேன் என்று சொன்னான். மற்றது நான் அன்றைக்கு போகப்போறதுமில்லை, எனக்கு வேலை வேறு என்று சொன்னான்.

  இதுதான் எல்லோரதும் நிலைப்பாடு. தட்டிக்கழிக்கும் போக்கும் சிந்திக்காத தன்மையும் ஏனோ தானோ என்ற மனப்பான்மையும் தான் ஒட்டுமொத்த தமிழரின் போக்கு.

 11. watchdog says:

  Pottu Amman name removed from dead list

  The Sri Lankan Defence ministry has removed the names of the Liberation Tigers of Tamil Eelam’s intelligent leader Pottu Amman and his deputy Kapil Amman from its war dead list. Shanmuganathan Sivashankar alias Pottu Ammaan is the the intelligence division chief of the Liberation Tigers of Tamil Eelam (LTTE)

  Their names profile have been erased recently from the Sri Lankan defence ministry’s website (http://www.defence.lk/new.asp?fname=20090621_02_TerrList), the sources said Eelam-e-News today.

  Meanwhile, the names of Pottu Amman and two others linked with him had been posted under red notice in the ‘wanted list’ of Interpol website. If Pottu Amman is dead, there is no reason for his name being published in the ‘wanted list’ in the Interpol website. His name has been included in the Interpol ‘red notice’ list on 2009, December.

  Does this mean that, though the Sri Lanka (SL) government earlier concluded that he was dead, by 2009 December there were clues to impel the Sri Lanka government to change its view?

  Previously, the Sri Lankan government declared that Pottu Amman also died on May 18th, 2009 while trying to cross the Nanthikadal lagoon by boat. However, Pottu Amman’s body was not recovered.

  A popular Indian Tamil Magazine ‘Ananda Viketan’ meanwhile published that, the issue whether Pottu Amman is dead or is still alive is shrouded in mystery.

  The magazine carried a photograph of Prabhakaran and Pottu Amman dressed in white seated together which had been published in aTamil Tiger website.

  This magazine related the background story to this photograph which was taken a week before the conclusion of the war on the 18th of May 2009, and after Prabhakaran appointed Pottu Amman as the Tamil Tiger Deputy leader. All the Tamil Tiger leaders had graced this occasion and have expressed their consent to this appointment, the Magazine added.

  Thereafter, the Tamil Tigers had separated into three groups: one group was to engage in repulsing the advancing Army; the second group was to flee the battlefield while the third group was to be in the ready to surrender to the Army when it penetrates. Prabahakaran had given these instructions, and all present have agreed to this plan, the Magazine reported.

  If Pottu Amman who was in the group that was fleeing had escaped, then, where is he?. This is the question which has been the main theme of discussion among the Tamil Diaspora, Magazine further states. Some members of the Tamil Diaspora claim that Pottu Amman is in Eritrea.

  The Defense secretary recently announced that the Tamil Tiger funds, assets and commercial ventures are in Eritrea. However, the authorities of Eritrea had rejected the Sri Lanka government’s offers to take action against them. In any event, the Tamil Diaspora taking into account the division of opinion among those in the Tamil Tiger International chain, is of the view that if Pottu Amman is living, he is unlikely to come to the open now. Speculations are rife among the Tamil Diaspora that K P who was arrested earlier, surrendered to the Sri Lankan government after he became aware that Pottu Amman was alive and in fear of him.

  Now the Sri Lankan government has been removed some of the LTTE’s frontline leaders name from it’s website.

  http://www.eelamenews.com/archives/110535

சுகு-ஸ்ரீதரன்.14-06-2013:
வடக்கு மாகாணசபைத் தேர்தல் - 13வது சட்டத் திருத்தம் - ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள்
மக்களின் ஜனநாயக சுதந்திரம், அடிப்படை உரிமைகள், சமூகங்களிடையே நல்லிணகத்தை கட்டியெ...
***********************************
தினமணி.13-06-2013:
"தாக்சிம் மக்கள் குடியரசு" : துருக்கியில் தோன்றிய புரட்சி
பூங்காவில் பூத்த புரட்சி... புவியியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஐரோப்ப...
***********************************
vreegana.11-06-2013:
முள்ளிவாய்க்காலில் இருதலைக்கொள்ளி எறும்பாகிய வன்னித்தமிழர்கள் - 01, 02
அன்பர் லம்போ வர்களுக்கு ==> இந்த கட்டுரையாளர் ஆரம்பத்திலே சொன்ன விடயத்தை தாங்...
***********************************
லம்போதரன் தம்பி.10-06-2013:
முள்ளிவாய்க்காலில் இருதலைக்கொள்ளி எறும்பாகிய வன்னித்தமிழர்கள் - 01, 02
1)புலிகளால் வெளியேயற்றப்பட்ட சிங்களவர் பற்றி பேசும் இக் கட்டுரை அரசால் திட்டமிட்...
***********************************
பத்திரிகை.03-06-2013:
வேடிக்கையான காணி, பொலிஸ் அதிகாரங்கள்
'13வது திருத்தம் என்பது எலி, பூனை விளையாட்டு போன்றது. எலியை வைத்து பூனை விளையாடு...
***********************************
லம்போதரன் தம்பி.31-05-2013:
எதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும்
போரின் பின்னான முன்னேற்றங்கள் : 1) வடக்கில் தமிழரின் 30% காணிகள் கட்டாயா பறிமுத...
***********************************
Elilan.23-05-2013:
எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்
அன்பின் ரூபன் அண்ணாவுக்கு, குரும்ப சிட்டி கொள்ளை நடந்த பின்னரே நான் பிறந்தேன். ...
***********************************
எழுகதிரோன்.22-05-2013:
கூட்டமைப்பு காலாவதியாகிறதா?
யுத்தம் முடிவடைந்து நான்காண்டுகள் கடந்து வந்திருக்கின்றோம். வெறுமனே முள்ளிவாய்க்...
***********************************
விதிவழி.20-05-2013:
தமிழ்ச் சிவில் சமூகம்
14/05/2013 அன்று வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு என்ற கிராமத்தில் ஏழே வயதான பள்ளி...
***********************************
raj.19-05-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை – 11
ஆக மொத்தம் சுரேஸ் - வரதர் பிரச்சனை பழி தீர்ப்பினை அடிப்படியாக கொண்டு மேற்கொல்லப...
***********************************
raj.05-05-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை – 10
த .தே .கூ என்ற பெயரிற்குதான் மக்கள் வாக்கு அளிப்பார்கள் என்றால் அரசே அந்த பெயரி...
***********************************
விஸ்வா - தேசம்நெற்.04-05-2013:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா?
கூட்டமைப்பை பதிவுசெய்தல் பொதுமக்களின் கருத்தை கேளுங்கள். தமிழ் தேசியக்கூட்டமை...
***********************************
நவம்.03-05-2013:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா?
த.தே.கூட்டமைப்பில் தமிழரசு கட்சியை விலிக்கிவிட்டு, ஏனைய கட்சிகள் தனித்து இயங்க வ...
***********************************
காந்தன்.02-05-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை – 09
படைகளை வெளியேற்று உள்ளிட்ட 12 தீர்மானங்கள் த.தே.கூ நிறைவேற்றம் தீர்மானங்கள்:-...
***********************************
ஆனந்தசங்கரி.01-05-2013:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடா? மனம் திறக்கிறார் சி.வீ .கே. சிவஞானம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை தவறாக வழி நடத்துகின்றது என்று தெரிவித்து உள...
***********************************
தடுமாற்றம்???.01-05-2013:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா?
கூட்டமைப்பின் அதிருப்தி கட்சிகள் முன்னுள்ள ஒரே தெரிவு - செய் அல்லது தமிழரசுக் கட...
***********************************
ஏ.கே.கான்.01-05-2013:
வங்கிகளை கொள்ளையடிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதிகள்
தங்கம் விலை குறையுது.. பெட்ரோல் விலை குறையுது.. ஆனால், இது நல்லதில்ல! சர்வதேச...
***********************************
kugan.25-04-2013:
ஐயகோ! சீனா இந்தியாவில் கால் பதித்து விட்டது!
இந்தியாவும் சீனாவும் வர்த்தகத்தில் ஈடுபடலாம் . ஆனால் அவர்கள் ஒரு உளவுப் போரில் ஈ...
***********************************
வளவன்.13-04-2013:
காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!
காசி மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை! மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு...
***********************************
பாலன் தோழர்.09-04-2013:
கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை - 08
இலங்கை என்ற ஒரு ஜக்கிய நாட்டிற்குள் எமது தேசத்திற்கு என ஒரு தனியாக சுயாட்சி கட்ட...
***********************************