நாபா அணியை இலங்கையில் இருந்தபடி வழி நடத்தி வந்த சுகு சிறிதரனின் அரசியல் ஆலோசகர் சாவகச்சேரி இளங்கோ அண்மையில் காலமானதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு வரதரே நேரில் வரவேண்டியதாயிற்று என நாபா அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை எப்படியாவது ஒரு ஆசனத்தையாவது பெற்று தமது பலத்தை இந்திய தரப்புக்கு காட்டவேண்டிய இக்கட்டுக்குள் தாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இன்று சிறிலங்காவில் இந்திய எசமானர்களுக்கு சார்பான உறுதியான நட்பு சக்திகள் இல்லாத சூழலில் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சகல துருப்புசீட்டுகளையும் சிறிலங்கா நோக்கி களம் திருப்பியுள்ளது . இந்த வரிசையில் ஈஎன் டி எல் எவ்; சந்திரகாசன்; வரதராஜபெருமாள்; விரைவில் பரந்தன் ராஜனும் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வரதரின் திடீர் பயணமும் அமைந்துள்ளது.






